கலர்கலராய் உருண்டைகள்
குங்கும சாதம் ,மஞ்சள் சாதம்
பழைய பொங்கல்..
பல தான் போட்ட கூட்டு
கரும்புத் துண்டம் துண்டமா வெட்டி
( எப்படி நான் துன்னுவேன் இதை…!!!)
வெத்தலை பாக்கு வாழைப்பழம்
காய்ஞ்சு போன மஞ்சள் இலையை..
(…க்கும்…வாழையிலைப் போட்டு வகையா சோறு உனக்கு..)
கஷ்டப்பட்டு சுருக்கம் எடுத்து..
காக்கா புடி கணுப் புடி..
கா..கா..கா..னு கரையோ கரைனு நான் கத்த
கண்டுக்காம காக்கா பார்வை பார்த்துண்டு..
கலிகாலம் …கலிகாலம்..
காக்கா கூட சீந்தலையே..
காலைத் தூக்கத்தை தொலைச்சு
கணுப் பிடி நான் வெச்சதை..
என்ன சமாச்சாரம்..
ஏனிந்த கோபம்னு கேட்க..
கொந்தளித்த காக்கா..
கொண்டைக்கடலை மசாலா
கிளறி எடுத்து வெச்ச புளியோதரை..
கடலையும் முந்திரியும் மிதக்கும் தேங்காய் சாதம்
கடலைப் பருப்பு மசால் வடை..
கிச்சன்ல இத்தனை மெனு ரெடியாகும்போது
கிழிஞ்ச இலையில் பழைய சோறு..
கிழியுது வாய் மட்டும் உனக்கு.
காக்கா குரோதமாய் பாக்க..
இரு இரு எனக்கும் காலம் வரும்
பிட்சாவும் பர்கரும் நூடுல்ஸும்
பாஸ்டாவும் பச்ச இலைதழையும்..
ஓம்பூர்புவஸ்வ கோகோகோலாவில்
ஒன்னோட பொண்ணு படைப்பா
ஓடி நான் அப்போ வறேன்..
ஓடிடு இப்போ உன் கணுப்புடி எடுத்துண்டு
ஓரப் பார்வையில் என்னைப் பார்க்க..
உஜாலாவுக்கு மாறிய உனக்கு
உண்டு படையல் அடுத்த பண்டிகைக்கு..
No comments:
Post a Comment