Thursday, January 25, 2018

கூட்ஸ் வண்டி

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்.. எப்போதும் நடக்கும் யுத்தம் friends களுடன்..
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த
பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை..என்றைக்கும்  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

Happy new year

01-01-2018
என்ன எல்லாரும் new year வரவேற்க ready aa..?
daily sheet calendar மாட்டியாச்சா..போன வருஷம் முழுசும் பார்த்த முருகரும்..பிள்ளையாரும்..பெருமாளும்..
இந்த வருஷம் வேற pose ல்..
ஓசியா கிடைச்ச monthly calendar க்கு ஓட்டை போட்டு twine நூல் கட்டி தூக்கில தொங்க விட்டாச்சா..
ஒரே ஒரு குறை இப்போதெல்லாம்..
missing the greetings cards era..
வந்தது வண்டி சந்தோஷம் தர்..வர வேண்டியதும் ஆவலைத் தூண்ட
பார்த்து பார்த்து..படித்து உருகி வாங்கி அனுப்பிய வாழ்த்தட்டைகள் போய் சேர்ந்ததா இல்லையானு தெரியாத tension.
கட்டுக் கட்டா greetings.. இப்போ click செய்து அனுப்பும் வாழ்த்தில் 'கிக் ' அத்தனை இல்லை.. இருந்தாலும் புது வருஷ வாழ்த்து..எப்போதும் மகிழ்ச்சியும் மன நிறைவும் தரும்.
என்னுடைய எல்லா நட்பூக்களுக்கும் மிக மிக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
A very happy new year to all my friends here.

rahman இசையும் நாங்களும்..

06-01-18
rahman இசையும் நாங்களும்..
சின்ன சின்ன ஆசை பாட்டு.பெரிய கனவை காட்டியது..
காஷ்மீருக்கு மாற்றல் கணவருக்கு வந்தபோது காதல் ரோஜாவே கேட்டு
கலக்கமும் ஆனதுண்டு..

அரபிக் கடலோரம் பாட்டென்றால்
அதிமயக்கம் என் பெண்ணுக்கு ..ஒலி நாடாக் காலம்..ஒரு மணி நேரம்..
ஒரே பாட்டு ஓடும்..

 dilse re பாட்டு ..Delhi வாழ்க்கையில்
door எல்லாம் மூடி அலற அலற..கேட்ட காலம்..

பச்சைக் கிளிகள் பாட்டோடு பார்பர் வேலை..
அப்பாவுக்கு பண்ணியதுண்டு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை..புரிய் வைத்த பாட்டு..
maa tujhe salaam..மறக்க முடியாது..
சின்னவள் பள்ளியில் வாசிக்க..பரிசும்  பெருமையும்..
yun hi chala chal gaadi பாட்டு ஊர் ஊராய் மாறியபோது..உன்னோட நானிருக்கேன் என்றது.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை ..
மனசுக்கு சுகமாய்..வருடலாய்..
பாடல் வரிகள்..இசையால் ..புதுக் குரல்களால்..ரசிகர்களுக்கு விருந்தாய்..
அடுக்கிண்டே போகலாம்..

எனக்கு மட்டுமா இப்படி..

சின்னக் குழந்தைக்கு
சிக்கு புக்கு ரயிலு…
வெள்ளைப் பூக்கள் மலர
விசையானது உன் னிசை..
முஸ்தஃபா முஸ்தஃபா
முணு முணுக்கும்
மூன்று தலைமுறையும்…

Take it easy policy
தாரக மந்திர மாச்சிங்கே…

பேட்டை rap பாடியது
மேட்டுக் குடியு மிங்கே..
ஆத்தங்கரை மரமும்
Ale ale பாடுமிங்கே..
மெட்டுப் பல போட்டு
மயிலி றகாய் வருடினாயே..
எல்லாப் புகழும்
என் இறைவனுகென்று
ஒரு தெய்வம் தந்த
தங்கப் பூ நீ..

என்றென்றும் புன்னகையோடு
ஏற்றமுடன் நீ வாழ்க
Azeem o shaan shehanshah
AR Rahman
happy birthday sir














































என்றும் அவனருள் வேண்டும்

ஏராள ரசிகர் கூட்டம்..



ஆயிரத்தி லொரு வருவன் நீ

ஆண்டவன் அனுப்பிய



அல்லா ராக்கா ரஹ்மான் நீ


நீடூழி வாழ்க

நீடூழி வாழ்க..



அன்புடன் வாழ்த்தும்

அகிலா

பொங்கலோ பொங்கல்

14-01-18

pongal..a festival of 'feasting to fasting'
bhogi..poli and masala vada
pongal..pongal and ulundu vada
KANU..puliyogare with aviyal..
fourth day..vetha kuzhambu sutta appalam..
விருந்தில் ஆரம்பித்து விரதத்தில் முடியும்
பண்டிகை
happy pongal to all at home
அன்புடன் akila

சின்னக் குழந்தையை ஏதாவது படம் வரைனு சொன்னா..உடனே ஒரு மேகம் சூரியன், பூ ஒரு காக்கா எல்லாம் வரையும்..
அதே லெவல்தான் நானும்..
பொங்கல் கோலம் இன்னும் வளரவே இல்லை. ..எப்பவும் போல கோடு கட்டத்தோடு ஒரு கோலம்.. பார்டர் ஒரு செம்மண்..ஆனா இப்போ ஒரு clarity..
இந்தக் கோலம் எனக்கு தந்த message:

சூரியன் மாதிரி சந்தோஷ ஒளி பரப்பணும்..
பூக்கள் போல புதுப் பொலிவுடன் இருக்கணும்
பொங்கி வரும் பால் போல அன்பு வற்றாத நதியாக நம் உள்ளம் இருக்கணும்..
கரும்பைப் போல சொல் செயல் எண்ணத்தில் இனிமை வேணும்..
வேற என்ன வேணும் இந்தப் பொங்கல் நாளில்..
அன்பு..அன்பு..அன்பு..
இது ஒன்றே போதும்..
இது ஒன்றே போதும்







போளியா ...போதி மரமா.!!!

14-01-18

போளியா ...போதி மரமா.!!!

போகிப் பண்டிகை என்றாலே
போளியில்லாமல் உண்டோனு
புதுக்கோட்டை ராசா..(அட..என் அப்பாதான்)
போட்டாரே ஒரு போடு..
என்னடா இது..இந்த
அகிலாவுக்கு வந்த சோதனைனு..
அரண்டு போய் ஆரம்பிச்சேன்..
ஆண்டவனை வேண்டினேன்.

இளகலான மாவு..கொஞ்சம்
இறுகலான பூரணம்..
உள்ளங்கை மட்டுமே..
உற்ற துணை யிங்கே..
பதினொன்றே போதுமென்று
பாகம் பிரித்து உருண்டைகள்
எண்ணெயில் தோய்ந்த மைதா..
என்ன பாடு படுத்துதப்பா..
ஓட்டம் பிடிக்குதப்பா..
ஓட்டையும் விழுந்ததப்பா..
இரண்டாவது உருட்டி தட்ட
இரண்டாய் கிழிந்ததப்பா..
மூன்றாவது போளியோ..
மெத்தென்று இல்லாமல்
முறுகலாச்சு ஓரத்தில்..
நாலாவதோ ..
நான் வரலை விளையாட்டுக்கென
நடுங்கி ஒளிஞ்சதப்பா
அஞ்சாவது உருண்டையோ..
அஞ்சாதே என்னைக் கண்டு
அழகாய் உருட்டி..
அடைப்பாய் பூரணம்..
அமுதமாய் இனிப்பேன்
அனைவருக்கும் படைப்பாயென
ஆசியும் வழங்க..
அப்புற மென்ன..
ஆறு ..ஏழு..எட்டு.
அருமையாய் அடுக்கினேன்..
ஒன்பது..பத்து ..பதினொன்று...
ஒரு நொடியில் முடிக்க..

கை வண்ணம் காட்ட நினைக்கையில்
கைக்கொட்டி சிரித்தது காலியான பாத்திரம்.
போளி சொல்லும் பாடமாக
போதி மர ஞானியானேன்.

பாதி வாழ்க்கை போனபின்னே
பாதை தெரிய ஆரம்பிக்கும்..
பார்த்துடலாம் வாழ்ந்தென்று
பறக்க நினைக்கையிலே
படக்கென முடிந்துவிடும்..

பிறந்ததுமே கற்றறிய
பள்ளிக் கூடமிங்கேது
படபடப்பாய் கடக்கையிலே
பாடமாகும் வாழ்க்கையிங்கே..

படைத்தவன் தந்தான்..இந்தப்
பாத்திரம் (வாழ்க்கை)நாடகத்தில்
படைப்போமே சரித்திரம்..
போளி தந்த போதனை..
போலியில்லை..உண்மை..உண்மை.
























வல்லமை தாராயோ

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் எழுப்பும் கடிகாரம்
முடிந்ததா இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை
மேகத்துக்கு முதுகு வலியில்லை
அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை
சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.
மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க

Jan 23rd 2004

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்
jan 23 rd 2004..
மறக்கமுடியாமல் தவிக்கும் போது மார்க்கு மீண்டும் வந்து வந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கார் முகநூலில்..

சீரங்கம்..
சீரங்கம்..
சோகத்தில் தத்தளித்த நாள்..
சீவிச் சிங்காரிச்சு சென்றவரில் சிலர்
சீறிய நெருப்பில்..
செத்து மடிந்த கோர நாள்..
ரங்கா..ரங்கா..ரங்கா..
கங்கும் தீயில் கதறினார் பலர்.
கல்யாணம் ஒன்று காரியத்தில் முடிவு..
பூ சரியா வெச்சிருக்கேனா..
புடவை இந்த கலர் சரியா.
புதுப் பெண்போல புறப்பட்டாள்..
பூகம்பம் காத்திருப்பது அறியாமலே
அலங்கரித்த மேடை..
அழகாய் மணமக்கள்..
அவசரமாய் போட்ட பந்தல்
அதில் வந்தான் எமன்..
வீடியோ பிடிக்க வந்தவனோ
விதியை மாற்ற வந்தவனோ..
சிறுபொறியை புறக்கணிக்க
சீரழிந்தது பலர் வாழ்வு..
சிறு வழி ஒன்றுதான்..
சிக்கிய பெருங்கூட்டம்..
தப்பிக்க வழியில்லை..
தலையில் விழுந்தது நெருப்பு
அமைதியாய் இருப்பவள்
அழுத குரல் கேட்கலையே..
அலறல்கள் வானைப் பிளக்க..
அரங்கனும் கலங்கியிருப்பானோ
புதுசாய் போட்ட மூக்குத்தி
பளிச்சென்று காட்டியது
போர்த்திய அவள் உடலை..

ஆண்டு பதினைன்ந்து ஆனாலும்..
ஆறாத காயம் நெஞ்சில்..
அன்பான என் சித்தி..
அவனடி சேர்ந்து விட்டாள்..

உயிர் பெற்று உற்சாகத்துடன்
உயிர் குடித்த மண்டபம்..
தெருவழியே நடந்த போது..
தாரையாய் கண்ணீர் ..தடுக்க முடியவில்லை..

தீயில் சுட்ட இந்தப் புண் ஆறவே மாட்டேங்கிறதே..
எத்தனை குடும்பங்கள்..இழந்தன சொந்தங்களை..
எந்த ஒரு function என்றாலும்..safety measures சரியாக இருக்கா என்று முதலில் பார்க்க..அரங்கன் கொடுத்த அலாரமோ..
















Farewell Aishu

18-01-2017
my final innings of school days are over. beginning from st.thomasian mom ,  DIS ian mom and  DIP site mom finally.  playful clicks,matured writings  in  the school year book by every student. A grand ceremony ..the highlight being the (lantern) light of knowledge, light of peace,light of wisdom carried by the students..finally yummy dinner..
oh my school days are over..

பசுமை நிறைந்த பள்ளி வாழ்வு
பிரியா விடையுடன் ..
பாடித் திரிந்த பறவைகள்..அவரவர்
பாட்டைப் பார்க்க பறக்கும் நேரம்..

ஆசையாய் வளர்த்த கிளிகள்
அடுத்த நாள் முதல்
அங்கு வராது போகுமேனு
அள்ளித் தந்த அன்புடனும்
ஆசி வழங்கிய ஆசிரியரும்..
வாட்சப் வழியே..என்
வணக்கமும் உண்டு..
வினாத்தாளும்் உண்டு..
விளக்கமும் உண்டு..
வெற்றி பெற உதவுவேன்
வாஞ்சையுடன் வழியனுப்பல்

அருமைத் தோழமை..
அழுகையும் தேற்றலும்
அங்கே காணலையே..
கண்ணில் ஒளியோடு
கையில் சுடரோடு
கம்பீர வலம் வந்த
கண்மணிகள் கண்டேனே..
பள்ளிச் சினேகிதம்..
கொள்ளை இன்பமே.

ஊடகம் இருக்கு..
உனக்கென எப்போதும்..
நானிருக்கேன் என..
நண்பர்கள் நல்மனம்..
சிரிப்பும் கேலியுடன்..
செல்ஃபி செல்லங்கள்..

மணி அடிக்கும் முன்னே
மண மணக்கும்..
மஞ்சூரியனும்..
மசாலா தோசையும்..
மாய்ந்து பாய்ந்து
மடக் மடக்கென..
முடித்த காலமது
மறுபடி எப்போ..
கடைசி பெஞ்சில்
கலாட்டாக் கதைகள்
கண்ணு சொக்கிப்போய்
கையும் களவுமாய்
கிளாஸை விட்டு வெளியேறி..
காண்டீனில் காத்திருந்த
காலம் வருமா..
சோக கீதம்  ..
சொல்ப நேரம்..

சிட்டாய்ப் பறந்தனர்..
சிரித்து மகிழ்ந்தனர்..

வரப்போகும் நாளுக்கு
வரவேற்பு ..
வருங்காலம் வளமாய்..
வாழ்த்து மழையுமங்கே..

ஆடுங்கள்..
பாடுங்களென..
அரங்கம் அங்கே..
அவர்களுக்காக..
பிரியத்துடன்..ஒரு
பிரியா விடை..
All the very best to the students