Tuesday, August 24, 2021

எங்கே செல்லும் இந்தப் பாதை...

 எங்கே செல்லும் இந்தப் பாதை...



'address ஞாபகமா எடுத்துண்டு போம்மா' ..school கிளம்பும் அவசரத்திலும் என் பெண் சொல்லிட்டு போக..வேலையெல்லாம் முடித்து பையும் பர்சோடயும் முக்கியமா address ம் எடுத்துண்டு என்னோட TN registration Scooty துணை வர..( எந்த எடத்தில நிறுத்தினாலும்..'aap chinnai(சென்னையை இப்படித்தான் சொல்வார் கள்) se  ho kya..udhar ka masala dosa...mmmmm'

இப்படியே எல்லாக் கடையும் ஏறி இறங்கி பையை ரொப்பி..சரி சரி...இப்பொ கிளம்பினா சரியா இருக்கும்....நாற்புறமும் பிரியும் சாலை..எந்த வழியா வந்தேன்..ஒரே குழப்பம்..ஊருக்கு புதுசு வேற..கையில் இருந்த address ஐ வேகமா போய்ண்டிருந்த ஒருத்தரை நிறுத்தி.. bhaiyya..bhaiyya..வழி சொல்லேன் என்று கேட்க..அவரும் दाएं ,बाएं நு என்னை குழப்ப..correct ஆ தப்பான வழியில் என் செல்ல Scooty ஐ செலுத்த..சுத்தி சுத்தி வந்தீக..மாதிரி எத்தனை எட்டு போட்டும் நான் தேடும் address இல்லவே இல்லை..இப்படியே ஊருக்குள் இருக்கும் சந்து பொந்தெல்லாம் வர..ஐயோ இப்படி இருக்காதே.. அகலமான ரோட் ஆச்சே..வீட்டு வாசலில் பெரிய lawn ..அகலமா ஒரு gate..ஒரு வெள்ளை ஊஞ்சல் எல்லாம் இருக்குமே..ஐயோ ..கண்டுபிடிக்க முடியலையே.

ஊர் எல்லைக்கே வந்துட்டோமோனு கவலை வர..எனக்கு வழி சொன்ன ஆள் மீண்டும் என் எதிரில் தென்பட..

behanji..aap.. idhar ..??..us tharaf jaana tha aap ko..(நமக்கு இந்த tha,thi masculine feminine gender Hindi ல இன்னி வரைக்கும் புரியல..தவறிருந்தால் பொறுக்கவும்)

மீண்டும் அவர் வழி காட்ட.சில கிலோமீட்டர் கடந்த பிறகு..ஆஹ்ஹா..வந்துட்டமோ...இதோ இருக்கே அந்த பெரிய சாக்கடை..வழி நெடுக யூகலிப்டஸ் மரமா இருக்கே..அதோ பாபு கடை..அதே அதே..வந்தாச்சு..

சந்தோஷத்தில் Scooty பறக்க..

அம்மா..அம்மா..என்று என் பெண் குரல்.......sudden break போட்டு scooty ஐ நிறுத்த..எங்கே போற...இவ்வளவு நேரம்..காத்து காத்து காலெல்லாம் வலிக்கிறது....அடடே..நம்ம வீடு வந்தாச்சு..'கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன்..கடைசியாய் என் வீட்டைக் கண்டுபிடிச்சேனு rajini style ல மனம் துள்ள..

 எந்த புது ஊரில் குடி போனாலும் நடக்கும் தேடல் விழா..'bharat ek khoj' இது தானோ 

( google map எல்லாம் அப்போ இல்லை..அப்படியே இருந்தாலும் இந்த மர மண்டையில் அது ஏறினதில்லை)..


அதுவும் Bangalore கேட்கவே வேண்டாம்..கண்டிப்பா எல்லா சிக்னல் மேலே இருக்கும் name board மேல மரக்கிளை ஒன்று படர்ந்து மறைச்சிருக்கும்..இன்னொரு  பயம்..போகும் போது இருக்கிற வழி,திரும்பும்போது  one way ஆகிடும்..அப்பறம் என்ன..என் வீட்டை..நானே..கஷ்டப்பட்டு தேடி வருவேன்..

அப்போ எல்லாம் தோணும்..அட்ரசஸ் கிடையாது..land mark கிடையாது..paint கிடையாது..இந்த குட்டிப் பறவை எல்லாம். எப்படி அழகா..வழி கேட்காமல் தன் கூட்டை வந்தடையுது என்று...

அதிசயம் தான் அவன் படைப்பு..

கண்ணா

 வரைந்தேன் உன் பாதம்..

வாசல் கோலத்திலிருந்து....

வீடுபேறு நான் அடைய..

வழியொன்று  காட்டு கண்ணா..

காலமிது..காலமிது..

 காலமிது..காலமிது..

கண்டுக்காதீங்க அம்மாக்களே

ஆனந்த யாழ்கள்

ஆசை கீதம் பாடட்டும்


மடிக்கப்படாத போர்வை

மின்னும் மடிக்கணினி

மூடாத பேனா

மூடியிழந்த பெர்ஃப்யூம்


விரிக்கப்பட்ட யோகா பாய்

சுருட்டி எறியப்பட்ட் துணி

முறுக்கிக் கிடக்கும் வயர்கள்

காய்ந்து கிடக்கும் கப்புகள்


கண் மை துடைத்த பஞ்சு

காது குடைந்த buds

கழற்றி வைத்த காது வளையம்

கதவோரம் சுற்றும் முடிக்கொத்து

மூக்கொழுகும் ஷாம்ப்பூ

முடியோடு சீப்பு

முடிவே இல்லையா

முடியலையே சுத்தமாக்க..


இடிப்பாரே என்னையும்

வளர்ர்ப்பு இதுவா என்று

வாதமும் ் செய்யவே

வந்தது பதிலுமே..


போட்டது போட்டபடி இருந்தால்

பொங்கும் இன்ப வீடாமதென்றாள்

பொங்கிய பொய்ச் சினமடக்கி

போடா..உன் பேச்சென்றேன்..


போகட்டும் போ..

போய் விடுவாள் 

புக்ககம் ஒருநாள்..

பார்த்து வளர்ந்தவள்

பக்குவமாவாள்..

பார் என் வீடிதென்று

பீற்றுவாள் ஓர்நாளும்


அன்னையின் பாடம்

அழியாது என்னாளும்

அந்த நாளுக்காக்வே

அடியேனும் காத்திருக்கேன்..


(டிஸ்கி: 'மகள்களைப் பெற்ற  அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் ..

சுத்தம் சத்தம் போட வேண்டிய விஷய்மல்ல என்று'..(ஆனந்த யாழ் effect)

கடவுள் நினைத்தான்

 கடவுள் நினைத்தான்


..நனைந்தான்..கரைந்தான்


காத்திருந்த வருணன்..பண்டிகைக்

காலத்தில் வந்தான்..

கனத்த மழை பொழிய

கனக்கும் மனமிங்கே..

காக்கும் கடவுள் கணேசனே

களிமண்ணால் ஆனாலும்

கருணைத் தெய்வம் நீயன்றோ

கரைந்தே நீ போனாலே

காயும் நாளை வயிறு பல

கொழுக்கட்டை வகையெல்லாம்

கைக்கு எட்டாமல் போனாலும்

கஞ்சியாவது கிடைக்கணுமே

கொஞ்சம் மழை நிற்கணுமே..


( என்னப்பா இவ்வளவு விலை..சின்ன பிள்ளையாருக்கே இப்படி சொன்னா எப்படி? அலை மோதும் கூட்டம்..

எல்லார் கையிலும் கூடை ,கட்டைப் பை..

திரும்பின இடமெல்லாம் பூ, பழம், எருக்க மாலை தாமரை,அல்லி..

அவர்கள் சொன்ன விலைக்கு கண்டிப்பா டிஸ்கவுண்ட் கேட்டனர்.

நமக்கோ கன்னடம் அரைகுறை..

அவர் சொல்றதை நம்ம google ல செக் பண்ணி..அதல்லப்பா..ஹத்து ரூபா..கம்மி கொடினு சொல்லி (எதோ சமாளிச்சுஃபையிங்) ஒரு பிள்ளையார் வாங்கி வந்தாச்சு..எப்போதும் மழைக்கு சந்தோஷப்படும் மனம்..இன்று ஏனோ சோகமாச்சு...இன்று மழை 'வேண்டா'த விருந்தாளியோ..)

மீட்..மீட்

 'நட்புன்னா என்னனு தெரியுமா உனக்கு?

நண்பிகள்னா என்னனு தெரியுமா உனக்கு?

( raaja sir BGM ...தொடர..)

Shanthi Srinivasanனா யாருனு தெரியுமா உங்களுக்கு?

Meena Anand வை யாருனு தெரியுமா உங்களுக்கு?

எங்களை இணைத்தது எது தெரியுமா உங்களுக்கு?

எழுத்து..எழுத்து .எழுத்து..

 காலை வணக்கம், கண்ணணையும் ,கருத்தாழமிக்க பதிவுகளாலும் கவர்ந்தாள் ஷாஸ்ரீ என்றால்..


கலாய்த்தே..கலகல பதிவிட்டே கொள்ளை கொண்டவள் மீனா..


மூவரின் மீட்..சங்கீதத்தில்..

சலங்கை ஒலியாய் எங்கள் சிரிப்பு..


peas gravy எடுத்து வந்தவரை

PC Sreeram ஆக ஆக்க..


"Naan' ம் நான் நான் என்று கூவ..

நல்ல ஒரு சந்திப்பு.

நேரமின்மையால்..

நாங்களும் விடை பெற..


முகநூலில் தொடங்கி

மத்யமரால் இறுகி

மூச்சுள்ளவரை..தொடரணுமென்று

மனமுருக வேண்டியபடி..

நாங்கள்..


சீடகவி

 சீடகவி


சிங்கமாய் சீறுவாய் என்று

சிந்தையில் கலவரம்..

நீயோ...

சாந்த சொருபியாக.

சொல் பேச்சு கேட்டாயே..

சமத்து செல்லமே..

என்..

சீடையே..


வாழ்க்கையிலும் இப்படித்தான்.

பொங்குவார் என்று நினைக்கும்போது..

பொறுமை காப்பவர்..தரும் பாடம் இருக்கே...😀


அன்புடன்..


மறதி நல்லது

 மூக்குக்_கண்ணாடி இங்கே..

மூக்கு எங்கே?


உன் மூக்கெனும் லாக்டவுனில் இருக்கும் எனக்கு..

உன் மறதி தந்ததே விடுதலை..


காற்று வாங்க வந்த எஜமான்..மூக்கு

கண்ணாடி என்னை கழற்றி வைக்க..

கால் பேசும் சுவாரஸியத்தில்..தன்

இரண்டாவது கண்ணை விட்டுச் சென்றார்.


ஆஹா..

மேகம் சூழ்ந்த வானம்..

மணம் வீசும் மலர்கள்..

தலையாட்டும் மரங்கள்

தாளம் போடும் பறவைகள்..


மொட்டை மாடியில் ..

தனிமையில் நான்..


உன் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கும் எனக்கும்..

ஆக்ஸிஜன் வேண்டாமா?


Freelancer ஆக இந்த fantasy உலகை ரசிக்கும் வேளை..

என் லென்ஸ் வழி தெரிந்தது..மொபைல்

காமிரா லென்ஸ் ஒன்று..


பிடிபட்டேன்..

இனி..வாட்ஸப்பில் வலம் வருவேன்..


ஏலம் போட்டு கூவினதும்

எஜமான்/னி வந்திடுவார்..


மீட்ட சந்தோஷத்தில்..

மீண்டும் அவர்.

மீளாத் துயரில்..

மீண்டும் நான்..


அவர்..

மூக்கின் மேல்..

சிறை படுவேன்..


#மறதி_நல்லது..


Saturday, August 21, 2021

பதுக்கல்

 பதுக்கல்


..


கடைத்தெருவுக்கு போய்விட்டு கடைசி நூறு ரூபாயும் கை விட்டுப் போகப்போகும்

கவலையில் இருக்க..

 

கைப்பை குடைந்த வேளை

காட்சி தந்த

கசங்கிய ஐ(ஹை..)நூறு ரூபாய் நோட்டு

கலங்கிய நெஞ்சுக்கு..கற்கண்டே..


எங்க வூட்டுக்காரர் மை.வாய்ஸ்..( பதுக்கல் ராணி..😱)

Bulb

 என் பொண்ணு கிட்ட பெரிசா ஒரு டவுட் கேட்டேன்..

" கண்ணா.."be happy"..புரியறது..

அது என்னடா.." Make others happy"..


அதுவா..' நீ கொஞ்சம் சும்மா இருந்தாலே போதும்' ..


சிம்ப்பிளா ஒரு பல்பு கொடுத்துட்டு..


"போறாளே பொன்னுத்தாயி..போகிற போக்கில் மனசை உடைச்சு.."😀


மை.வாய்ஸில் ஸ்வர்ணலதாவின் சோக ராகம்..


பல நேரங்களில் பசங்க தான் நமக்கு ஆசான் moment😀


Wishing a witty and wisdom filled Wednesday😀


Options பலவிதம்

 Options பலவிதம்



வடை..

ஓட்டை வடையா..

ஆமை வடையா..


கொழுக்கட்டை.

கடை மாவா..

வீட்டில அரைச்சதா..?


சுண்டல்..

வெள்ளையா..

கருப்பு கொத்துக்கடலையா..


அப்பம்..

கோதுமையா?

அரிசியா?

குழியிலா?

கொதிக்கும் எண்ணெயிலா?


இப்படி யோசித்தது போக..

இந்த முறை for a change..


பிள்ளையாரை..

எப்படி செய்யறது?


களி மண்ணிலா?

காப்பி பொடியிலா?

மஞ்சளிலா?..கூட

மைதா சேர்த்தா?

கோதுமையிலா?..

கொழக்கட்டை மாவிலேயா?

🍫 சாக்லேட்டிலா?..

ஓட்ஸிலா?..


கடையில் வாங்கி மணையில் வெச்சது போதும்..உன்

கையால் என்னை உருவாக்கு..

உனக்கு உண்டு ஆக்கம்..நான்

தருவேன் ஊக்கம் ..


சொல்ல வந்தாரோ..

#சித்தி_விநாயகர்..


சரி..சரி..

இப்போதைக்கு..உங்க படம் மட்டும் ஒண்ணு வரைஞ்சேன்..


#turban_ganesha

YouTube learning😃

Monday, August 9, 2021

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...

 ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...


வெடித்து வெளியேறிய கடுகு..

வா வேகமா என்றது

வெந்து முடித்த வாழை

வதக்கி எடு என்றது

விசிலடுத்து ஓய்ந்த குக்கர்

வெடிக்கட்டுமா நான் என்றது..

வாசனை போய்விடுமே.

வந்தணை என்றது ரசம்

வத்தல் போட்ட குழம்போ

வாட்டாதே எனை என்றது

வெக்கையில் வெந்த இட்லி

வெளியே விடென விரட்டியது


நிமிஷத்தில் சுடும் மின்சார அடுப்பு

நாலு எரிப்பானுடன் நாகரீக அடுப்பு

நளபாகம் தயாரிக்கும்் நுண்ணலை அடுப்பு

நாலும் இருப்பினும்..நம்மிடமோ 

இரண்டே கைகள்..

இதை எடுப்பதா..அதை எடுப்பதா

இரண்டுங் கெட்டான் நிலமை..

உள்ளம் ஏங்குதே..

உருண்டோடிய நினைவாலே..


ஊதி எறிந்த விறகடுப்பு

ஊற்றி எறிந்த கெரோசின் ஸ்டவ்வு

ஊருக்கே பெரும் படையல் நடப்பு

உண்மையில் தருமே இன்றும் வியப்பு.

கும்பிடு போடச் சொல்லுதே

கூட்டத்துக்கே பசியும் ஆற்றிய

குடும்பத் தலைவிகள் அவர்களுக்கே..

மூழ்காத ship..ஏ friendship aa..

 மீள்கள்..மீண்டு வரா நாட்கள்


மூழ்காத ship..ஏ friendship aa..


எத்தன தடவ சொல்றது இந்த ராஜியோட சேர்ந்து மழையில கும்மாளம் அடிக்காதேனு....லொக்கு லொக்குனு இரும்பிண்டு..தொண்டை வலி வந்து அவளா கஷ்டப்படறா..இதே பொழப்பா போச்சு உனக்கு..

அம்மா ,சித்திகளின் திட்டுகளின் மழையில்..

எப்ப போனாலும் அந்த டாக்டர் 50 ரூபாய் வாங்கிண்டு அதே pendits எழுதி கொடுக்கப்போறார்...வீட்டிலிருந்த tablet போட்டுண்டு..school க்கு ஓடி..ஒரு பாவ மூஞ்சி வெச்சுண்டு..friends எல்லாரும்..miss miss இவளுக்கு ரொம்ப தொண்டை வலினு சொல்ல..ஒரு சோக கீதம் தான்..

இப்படியே..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண மாய்..என் தொண்டை அடைபட..ஒரு level க்கு மேல..காலம்பற எழுந்து good morning சொல்லலாம்னா..காத்து மட்டுமே வரும்..எல்லாம் உப்பு தண்ணி போடு கொப்பளிச்சா.. சரியாகிடும்..காப்பி கிடைக்காது.. உப்பு தண்ணி தான்....அம்மா அப்போ..finance officer....எல்லா மெடிகல் காலேஜ் professor paybill table ல வந்து குவியும்.. கண்ணு ..கண்ணுனு..ஒரு கடைநிலை ஊழியர்..பாப்பாவுக்கு எப்பபார்த்தாலும் கஷ்டப்படுதே..இங்கின் இருக்கற நல்ல specialist கிட்ட காட்டலாமேனு வழி சொல்ல..

 ENT department head..தலைமையில் சிகிச்சை ஆரம்பம்..

நீங்க MMC வந்துடுங்கோ ..அங்கே எல்லா check up பண்ணிடலாம்நு சொல்லிட்டு..தலை சொறிந்தவாறே..madam..arrears வரணும்   ..கொஞ்சம் ஹெல்ப் பண்னுங்கோ..

ஐயோ..சாமி..எங்கே வந்து மாட்டிண்டோம்னு நானும் அம்மாவும் விழிக்க..

நான் ENT ward நுழஞ்சதும்...ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்கார வெச்சுடுவா.. திடீர்னு..திபுதிபுனு..ஒரு பத்து பதினஞ்சு வெள்ளை க் கோட்டு போட்டுண்டு students ...எல்லாரும் என்ன சுத்தி நிப்பா..டாக்டர்..வரார்..டாக்டர் வரார்..ஆஜானுபாவான டாக்டர்..என்னோட வாயை ஒரு clip போட்டு திறந்து வெச்சு..இது ஒரு serious case of tonsillitis.. கேள்வி க் கணைகளை தொடுக்க ஆரம்பிப்பார்..நீயெல்லாம் எப்படி முன்னேறப் போற..திட்டு வேற..(வசூல் ராஜா.. அந்த கால ஸ்டைல்)...doctor..doctor..என் வாய் வலிக்கறது....சொல்ல முடியாமல்..திரு திரு முழியில் நான்..என்னைப் பார்த்ததும்..பல்லை நற நறனு கடிச்சு..எனக்கு சாபம் கொடுக்கும்..students . 

அந்த நாளும் வந்தது..ஆபரேஷன் தான்..முடிவாச்சு..ராஜீயும் கூட கண்கலங்க...மயக்க மருந்து கொடுத்தாச்சு..உலகம் கொஞ்சம் கொஞ்சமாக..

நழுவியது..எல்லார்க்கும் பத்து நிமிஷத்தில நடக்கற விஷயம்..நமக்கு ஒரு மணி நேரம் ஆச்சு..ரொம்ப சோர்ந்து போன டாக்டர்..'its a medical miracle'...என்னொட தொண்டையிலிருந்த எடுத்த சதை போல..இதுவரை யாருக்குமே..இருந்ததில்லையாம்..

அப்பறம் என்ன..இது வரை ice cream கண்ணால கூட பார்க்கக் கூடாதுநு மெரட்டிய அப்பா...டப்பா டப்பாவா.ice cream வாங்கி வர..ஐயோ...எறியுது எறியுது..ice cream வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்னு..நான் அழ....

சொட்டு தண்ணீர் பட்டாலே சொர்ருனு எறியற தொண்டையில...ஒரு கரண்டி உப்பை போட்டு..மூணு வேளையும்.. கொப்பளிச்சு..எனக்காக வாங்கிண்டு வந்த குலாப் ஜாமுன்..எல்லாரும் ரசிச்சு ருசிக்க...

national channel 1.30 மணி news வாசிக்கறாப்போல..சைகையில் காரியம் நடக்க..

ஒரு பத்து நாள்..பண்டிகை போல எல்லாரும் ஒரே தாங்கல்..

பதினோறாவது நாள்...எப்பவும் போல.. திறந்தா ..காத்து தானே வரப்போறதுனு பழக்க தோஷத்தில் ..நினக்க..ஆஹா..என் குரல் வெளியே வர...

ஓ..என் குரலா....ராஜீ....ராஜீ... மூணாவது மாடியில் குடியிருந்த அவள்..பாரதிராஜா தேவதைகள் style இல் slow motion ல ஓடி வர..

இனிமேல் canteen la ice cream சாப்பிடலாம் ஜாலியா மழையில நனையலாம்..அவள் சொல்ல.

அங்கே வந்து ஆடி மாசம் அம்மன் போல என் சித்தி வந்து பிரசன்னமாக..

எத்தன தடவை சொல்றது..இவ கூட சேராதேனு..அதே பல்லவி..


இன்றுவரை உறுதியாய்..

தொடர்கிறது எங்கள் நட்பு..

Friends for ever

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...

 ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...


வெடித்து வெளியேறிய கடுகு..

வா வேகமா என்றது

வெந்து முடித்த வாழை

வதக்கி எடு என்றது

விசிலடுத்து ஓய்ந்த குக்கர்

வெடிக்கட்டுமா நான் என்றது..

வாசனை போய்விடுமே.

வந்தணை என்றது ரசம்

வத்தல் போட்ட குழம்போ

வாட்டாதே எனை என்றது

வெக்கையில் வெந்த இட்லி

வெளியே விடென விரட்டியது


நிமிஷத்தில் சுடும் மின்சார அடுப்பு

நாலு எரிப்பானுடன் நாகரீக அடுப்பு

நளபாகம் தயாரிக்கும்் நுண்ணலை அடுப்பு

நாலும் இருப்பினும்..நம்மிடமோ 

இரண்டே கைகள்..

இதை எடுப்பதா..அதை எடுப்பதா

இரண்டுங் கெட்டான் நிலமை..

உள்ளம் ஏங்குதே..

உருண்டோடிய நினைவாலே..


ஊதி எறிந்த விறகடுப்பு

ஊற்றி எறிந்த கெரோசின் ஸ்டவ்வு

ஊருக்கே பெரும் படையல் நடப்பு

உண்மையில் தருமே இன்றும் வியப்பு.

கும்பிடு போடச் சொல்லுதே

கூட்டத்துக்கே பசியும் ஆற்றிய

குடும்பத் தலைவிகள் அவர்களுக்கே..

Saturday, August 7, 2021

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..?

 என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..?


வரட்டும் இன்னிக்கு இந்த லக்ஷ்மி..நாலு வார்த்தை நறுக்குனு கேட்கணும்..கீழ் வீட்டு ஆண்ட்டியின் ஃபோன் வந்ததிலிருந்தே படு டென்ஸனாகிட்டேன்..

கதைக்கு வருவோம்..

intercom ஒலித்தது..மறு முனையில் கீழ் வீட்டு ஆண்ட்டி. குசலமெல்லாம் விசாரிச்சுட்டு மெதுவா இழுத்தா..அகிலா ஒண்ணு கேட்கணும் உன்கிட்ட..உங்க வீட்ல வேலை செய்யற லக்ஷ்மி எனக்கும் செய்ய ஆரம்பிச்சு எட்டே நாள் தான் ஆறது . ஆனா..மூவாயிரம் advance கேட்கிறா..எங்காத்து மாமா அதெல்லாம் தர மாட்டார்னு கட் அண்ட் ரைட்டா சொன்னேன். கேக்க மாட்டேங்கிறா..நீ அவளுக்கு நிறைய அட்வான்ஸ் கொடுப்பியாமே..இந்தக் காலத்தில இவாளையெல்லாம் நம்பலாமோ என்றாள். நான் சொன்னேன் ' ஆமாம்..அவ என்ன கம்பெனிலியா வேலை செய்யறா..educational loan, housing loan, medical reimbursement னு்கிடைக்க..அவ பைய்யனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட உதவுவேன். போன மாசம் அவ பெரிய பையனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை..உடனே கொடுத்தேன்..உயிருக்கே ஆபத்துனு சொல்றப்போ உதவலனா எப்படினேன்..

அப்போ ஒழுங்கா அட்வான்ஸ் கழிப்பாளோனோ..சரி என்ன பண்றது..கொடுத்துத்தான் ஆகணும்..இப்போ இங்கே சரியா ஆளே அமைய மாட்டேங்கிறா.இவ கொஞ்சம் நம்ம டயத்துக்கு வரா..நான் உங்கிட்ட கேட்டேனு அவ கிட்ட சொல்லாதே..எங்கியாவது நின்னுடப் போறா என்றபடி இணைப்பு துண்டித்தார்.

இப்போ ஒரு வாரமா தான் என் உடன்பிறவா வலக்கரம் கீழ் வீட்டுக்கும் வேலை செய்ய ஆரம்பிச்சிருந்தா. எனக்கு என்ன கோவம்னா..எதுக்கு நான் தரதை போய்ச் சொல்லி வாங்கணுங்கறதுதான்..

ஆடி ஆடி வந்தவளிடம் கேட்டேன்..' எதுக்கு ஒரு வாரத்துக்குள்ள இப்படி அட்வான்ஸ் கேட்டே ..(நம்ம வாய் தான் சும்மா இருக்காதே!) 

அவள் சொன்ன பதில் ..அப்படியே அடங்்கிட்டேன்..

madam..அவங்க வீட்டு பழைய வேலை செஞ்ச அம்மா இப்போ திரும்பி வரணும்னு try பண்றா.. எனக்கு ஒரு பிடிப்பு வேண்டாமா..அந்தம்மா திருப்பி கூப்பிட்டு என்னை போனு சொல்லிட்டா..அதான் முன் ஜாக்கிரதையா மூவாயிரம் கேட்டேன். மூணு மாசத்தில் கழிச்சுக்க சொல்லிட்டேன்..என்னை வேலைய விட்டு எடுக்க முடியாதில்ல..அதான் madam. போட்டாளே ஒரு போடு..

மாமியின் கணக்கு அங்கே..maid கணக்கு இங்கே..

Who is the management guru?

Wednesday, August 4, 2021

சும்மா_ஒரு_click


 #சும்மா_ஒரு_click


சும்மா ஒரு க்ளிக் என்றேன்..

சரி சரி .

Lighting adjustment ..நானே பண்ணிக்கறேன்..

விளக்கு..வழிகாட்டியது

Shock சிலை

 இப்படி shock வாங்கியே சிலையாகிட்டீங்களா..அடப் பாவமே..


nammabengaluru

 #nammabengaluru


வந்தாள்..வந்தாள்..வர மஹாலக்ஷ்மி...


வாசலிலே கோலமிட்டு

வாழையிலே பந்தலிட்டு

வரிசையாய் பழமடுக்கி

வாசனைப் பூக்களோடு

வடையும் பாயசமும்

வகையாய் படைத்திங்கு

விளக்கேற்றி வேண்டினேன்

வரம் தரும் தேவியை

வர மஹாலக்ஷ்மி உனை

வாவெனெ அழைத்தேனே

வாட்டமெலாம் போக்கியே

வளமெல்லாம் தந்திங்கே

வாரியளிக்கும் வள்ளலாய்

வந்தெமைக்  காப்பாயே..

Mahadevan

 Dear Mahadevan chithappa..

Missing you a lot.

A small dedication from your beloved daughter.


மனங் கவர்  'மாது' 


(27-11-1943  to 23-07-2018)


மாது என்ற மகா தேவன்..எங்கள்

மனமெல்லாம் குடி கொண்ட தேவன்.


மணமுடித்த சுந்தரிக்கும்..

கண்ணான..

மகன் மருமகள்களுக்கும்..மூத்த

மகனாய் இருந்த மாது..


சித்தப்பா என்றாலும்..உன்

செல்லப் பெண் நானன்றோ?


குழந்தைகள் என்றாலே

கொள்ளைப் பிரியமுனக்கு.


கொஞ்சித் தீர்ப்பதில்

குதூகலம் அடைந்தவன்.


திரு அரங்கன் தரிசனம்

தவறாமல் கண்டவன்.


சக்கரத் தாழ்வாரை..

சுற்றி சுற்றி வந்தவன்.

.

குரு ராக வேந்திரனை

ராப்பகலாய் நினைத்தவன்.


சிவாஜி படமென்றால்

சீட்டி அடித்து ரசித்தவன்.


சின்னக் குழந்தைகளோடு

கல்லாங்காய் ஆடியவன்


இட்லி இரண்டு மட்டும்

இருந்தால் போதுமென்பான்.


ஐஸ்கிரீம் என்றவுடன்..

ஹையா எனக்கென்பான்.


காவேரிக் கரையில் ..கபி

கோத்திரத்தில் பிறந்தவன்.


ஆஷாட ஏகாதசி யன்று

அவன் பாதம் அடைந்தவன்.


கரைந்தது அவன் அஸ்தி..தலைக்

காவிரி நதிக் கரையில்.


போய் வா மாது..போய் வா

இருமலும் இதய வலியும்

இல்லாத இடமாம்..

இன்னுலகம் காண..


போய் வா மாது..

போய் வா..


வெற்றிடமாச்சு இங்கு

வாழ்ந்த உன் வீடு.


விடையும் கொடுத்தாச்சு

வானுலகம் நீ காண.


வழியும் கண்ணீர் துடைத்து

வழியனுப்பி வைத்தாச்சு.


வரும் சந்ததிக்கும் சொல்வோம்..எம்மை

வளர்த்த கதையும் தானே.


வாழ்த்து நீ அங்கிருந்து.. உன்

வம்சம் தழைத் தோங்க.


போய் வா மாது 

போய் வா..


என்றென்றும் 

உன் அன்பு மகள்

ஆலமரத்துக் கிளி

அகிலா


Sunday, August 1, 2021

ஆரத்தி_எடுப்போம்_ஆகஸ்ட்டுக்கு

 #ஆரத்தி_எடுப்போம்_ஆகஸ்ட்டுக்கு😀


இன்று பிறந்தது ஆகஸ்ட்டு

மாதத்திலே இதுதான் பெஸ்ட்டு

தடுக்கி விழுந்தால் fest u..

தள்ளாட வைக்கும் feastu


ஆடிப் பெருக்கில் ஸ்டார்ட்டு


அடுத்தது வருது friendshippu


நாக பஞ்சமி சிறப்பு.


வளமெல்லாம் வேண்டி..

வரமஹாலக்ஷ்மி நோன்பு.


தியாகத் திருனாளாம் பக்ரீத்து


முக்கிய  நாளாம் 15 ஆகஸ்ட்டு

நம் நாட்டின் independence u


ரக்க்ஷா பந்தன் உண்டூ..

வெடிக்குமே பல ஹார்ட்டூ..


புது வருஷம் பிறக்குமே பார்ஸீக்கு

பிறந்தநாள் வருமே க்ருஷுக்கு..


கிருஷ்ண ஜெயந்திக்கு உண்டு

சீடை தட்டை முறுக்கூ..


காலியாகுமே பர்ஸூ..

இருந்தாலும்..

ஆகஸ்ட்டு..பெஸ்ட்டூ..😀😀😀


எல்லாப் பண்டிகையிலும்  சேர்ந்து

எல்லாரும் வாழ்வோம் கைகோர்த்து


ஃபோட்டோவோடு போடுங்க

நிறைய டிஷ்ஷு..


போஸ்ட்டு பார்த்தே நாமும்

ரொப்புவோம் நம்ம வயிறு..😀😀


அன்புடன்..

ஆரோக்கிய உணவு ஆரம்பம்..

 ஆரோக்கிய உணவு ஆரம்பம்..


#akilaz_august_kitchen


# கற்பூரவல்லி_இலை_ஸ்பெஷல்


அத்தி வரதரைப் தரிசித்து விட்டு

ஆற்காடு போயாச்சு..

அங்கே புக்கக மாமா இல்லம்

புகுந்தேன் என் வீடு போல..

மருமகள் மாலதி அங்கு..இவளை

விருந்தோம்பலில் வெல்ல யாரு?


சமைத்துத் தள்ளுவாள்..

சுகமாய் ஓர் நாள்..


கிளம்ப நேரம் வந்தது..

கொடியிலிருந்து வெத்தலை

கொழுந்தாய் முருங்கை இலை

கபத்துக்கு கற்பூரவள்ளி இலை

கெட்டியாய் தொடுத்த முல்லை

கசப்பில் இனிப்புடன் வேப்பம்பூப்பொடி..

அதோடு விட்டாளா..

கைக்கு இட்டிலி..கூடவே

கவரில் ஸ்வீட்டு..

திருப்பதி எக்ஸ்ப்ரஸ் ஏறுகையில்

திருப்தி நிரம்பி வழிந்தது.

திரும்ப எப்போ வருவே என்றாள்..

அம்மாவைக் கண்டேன் அங்கே..

அவள்தானே அப்படிக் கேட்பாள்..


கொண்டுவந்த கற்பூரவல்லி..

கார சாரமாய்..துவையலானது.


ஜீரகம் மிளகு தனியாவுடன் வறுத்து மோரில் கலந்து கொதிக்கவிட.

துணையானது  தோதாய் துவையலுக்கு..


பஜ்ஜி போட நேரமில்லை


சூடான சாதத்தில் ...நெய்யும்..வேப்பம்பூ பொடியும் சேர்க்க.. பீர்க்கை கூட்டுடன் 

சொர்க்கம் தெரிந்தது..


அசை போடுகிறேன்..தட்டில் உணவுடன்..நினைவுகளையும்..