Wednesday, August 4, 2021

Mahadevan

 Dear Mahadevan chithappa..

Missing you a lot.

A small dedication from your beloved daughter.


மனங் கவர்  'மாது' 


(27-11-1943  to 23-07-2018)


மாது என்ற மகா தேவன்..எங்கள்

மனமெல்லாம் குடி கொண்ட தேவன்.


மணமுடித்த சுந்தரிக்கும்..

கண்ணான..

மகன் மருமகள்களுக்கும்..மூத்த

மகனாய் இருந்த மாது..


சித்தப்பா என்றாலும்..உன்

செல்லப் பெண் நானன்றோ?


குழந்தைகள் என்றாலே

கொள்ளைப் பிரியமுனக்கு.


கொஞ்சித் தீர்ப்பதில்

குதூகலம் அடைந்தவன்.


திரு அரங்கன் தரிசனம்

தவறாமல் கண்டவன்.


சக்கரத் தாழ்வாரை..

சுற்றி சுற்றி வந்தவன்.

.

குரு ராக வேந்திரனை

ராப்பகலாய் நினைத்தவன்.


சிவாஜி படமென்றால்

சீட்டி அடித்து ரசித்தவன்.


சின்னக் குழந்தைகளோடு

கல்லாங்காய் ஆடியவன்


இட்லி இரண்டு மட்டும்

இருந்தால் போதுமென்பான்.


ஐஸ்கிரீம் என்றவுடன்..

ஹையா எனக்கென்பான்.


காவேரிக் கரையில் ..கபி

கோத்திரத்தில் பிறந்தவன்.


ஆஷாட ஏகாதசி யன்று

அவன் பாதம் அடைந்தவன்.


கரைந்தது அவன் அஸ்தி..தலைக்

காவிரி நதிக் கரையில்.


போய் வா மாது..போய் வா

இருமலும் இதய வலியும்

இல்லாத இடமாம்..

இன்னுலகம் காண..


போய் வா மாது..

போய் வா..


வெற்றிடமாச்சு இங்கு

வாழ்ந்த உன் வீடு.


விடையும் கொடுத்தாச்சு

வானுலகம் நீ காண.


வழியும் கண்ணீர் துடைத்து

வழியனுப்பி வைத்தாச்சு.


வரும் சந்ததிக்கும் சொல்வோம்..எம்மை

வளர்த்த கதையும் தானே.


வாழ்த்து நீ அங்கிருந்து.. உன்

வம்சம் தழைத் தோங்க.


போய் வா மாது 

போய் வா..


என்றென்றும் 

உன் அன்பு மகள்

ஆலமரத்துக் கிளி

அகிலா


No comments: