ஆரோக்கிய உணவு ஆரம்பம்..
#akilaz_august_kitchen
# கற்பூரவல்லி_இலை_ஸ்பெஷல்
அத்தி வரதரைப் தரிசித்து விட்டு
ஆற்காடு போயாச்சு..
அங்கே புக்கக மாமா இல்லம்
புகுந்தேன் என் வீடு போல..
மருமகள் மாலதி அங்கு..இவளை
விருந்தோம்பலில் வெல்ல யாரு?
சமைத்துத் தள்ளுவாள்..
சுகமாய் ஓர் நாள்..
கிளம்ப நேரம் வந்தது..
கொடியிலிருந்து வெத்தலை
கொழுந்தாய் முருங்கை இலை
கபத்துக்கு கற்பூரவள்ளி இலை
கெட்டியாய் தொடுத்த முல்லை
கசப்பில் இனிப்புடன் வேப்பம்பூப்பொடி..
அதோடு விட்டாளா..
கைக்கு இட்டிலி..கூடவே
கவரில் ஸ்வீட்டு..
திருப்பதி எக்ஸ்ப்ரஸ் ஏறுகையில்
திருப்தி நிரம்பி வழிந்தது.
திரும்ப எப்போ வருவே என்றாள்..
அம்மாவைக் கண்டேன் அங்கே..
அவள்தானே அப்படிக் கேட்பாள்..
கொண்டுவந்த கற்பூரவல்லி..
கார சாரமாய்..துவையலானது.
ஜீரகம் மிளகு தனியாவுடன் வறுத்து மோரில் கலந்து கொதிக்கவிட.
துணையானது தோதாய் துவையலுக்கு..
பஜ்ஜி போட நேரமில்லை
சூடான சாதத்தில் ...நெய்யும்..வேப்பம்பூ பொடியும் சேர்க்க.. பீர்க்கை கூட்டுடன்
சொர்க்கம் தெரிந்தது..
அசை போடுகிறேன்..தட்டில் உணவுடன்..நினைவுகளையும்..
No comments:
Post a Comment