Monday, August 9, 2021

மூழ்காத ship..ஏ friendship aa..

 மீள்கள்..மீண்டு வரா நாட்கள்


மூழ்காத ship..ஏ friendship aa..


எத்தன தடவ சொல்றது இந்த ராஜியோட சேர்ந்து மழையில கும்மாளம் அடிக்காதேனு....லொக்கு லொக்குனு இரும்பிண்டு..தொண்டை வலி வந்து அவளா கஷ்டப்படறா..இதே பொழப்பா போச்சு உனக்கு..

அம்மா ,சித்திகளின் திட்டுகளின் மழையில்..

எப்ப போனாலும் அந்த டாக்டர் 50 ரூபாய் வாங்கிண்டு அதே pendits எழுதி கொடுக்கப்போறார்...வீட்டிலிருந்த tablet போட்டுண்டு..school க்கு ஓடி..ஒரு பாவ மூஞ்சி வெச்சுண்டு..friends எல்லாரும்..miss miss இவளுக்கு ரொம்ப தொண்டை வலினு சொல்ல..ஒரு சோக கீதம் தான்..

இப்படியே..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண மாய்..என் தொண்டை அடைபட..ஒரு level க்கு மேல..காலம்பற எழுந்து good morning சொல்லலாம்னா..காத்து மட்டுமே வரும்..எல்லாம் உப்பு தண்ணி போடு கொப்பளிச்சா.. சரியாகிடும்..காப்பி கிடைக்காது.. உப்பு தண்ணி தான்....அம்மா அப்போ..finance officer....எல்லா மெடிகல் காலேஜ் professor paybill table ல வந்து குவியும்.. கண்ணு ..கண்ணுனு..ஒரு கடைநிலை ஊழியர்..பாப்பாவுக்கு எப்பபார்த்தாலும் கஷ்டப்படுதே..இங்கின் இருக்கற நல்ல specialist கிட்ட காட்டலாமேனு வழி சொல்ல..

 ENT department head..தலைமையில் சிகிச்சை ஆரம்பம்..

நீங்க MMC வந்துடுங்கோ ..அங்கே எல்லா check up பண்ணிடலாம்நு சொல்லிட்டு..தலை சொறிந்தவாறே..madam..arrears வரணும்   ..கொஞ்சம் ஹெல்ப் பண்னுங்கோ..

ஐயோ..சாமி..எங்கே வந்து மாட்டிண்டோம்னு நானும் அம்மாவும் விழிக்க..

நான் ENT ward நுழஞ்சதும்...ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்கார வெச்சுடுவா.. திடீர்னு..திபுதிபுனு..ஒரு பத்து பதினஞ்சு வெள்ளை க் கோட்டு போட்டுண்டு students ...எல்லாரும் என்ன சுத்தி நிப்பா..டாக்டர்..வரார்..டாக்டர் வரார்..ஆஜானுபாவான டாக்டர்..என்னோட வாயை ஒரு clip போட்டு திறந்து வெச்சு..இது ஒரு serious case of tonsillitis.. கேள்வி க் கணைகளை தொடுக்க ஆரம்பிப்பார்..நீயெல்லாம் எப்படி முன்னேறப் போற..திட்டு வேற..(வசூல் ராஜா.. அந்த கால ஸ்டைல்)...doctor..doctor..என் வாய் வலிக்கறது....சொல்ல முடியாமல்..திரு திரு முழியில் நான்..என்னைப் பார்த்ததும்..பல்லை நற நறனு கடிச்சு..எனக்கு சாபம் கொடுக்கும்..students . 

அந்த நாளும் வந்தது..ஆபரேஷன் தான்..முடிவாச்சு..ராஜீயும் கூட கண்கலங்க...மயக்க மருந்து கொடுத்தாச்சு..உலகம் கொஞ்சம் கொஞ்சமாக..

நழுவியது..எல்லார்க்கும் பத்து நிமிஷத்தில நடக்கற விஷயம்..நமக்கு ஒரு மணி நேரம் ஆச்சு..ரொம்ப சோர்ந்து போன டாக்டர்..'its a medical miracle'...என்னொட தொண்டையிலிருந்த எடுத்த சதை போல..இதுவரை யாருக்குமே..இருந்ததில்லையாம்..

அப்பறம் என்ன..இது வரை ice cream கண்ணால கூட பார்க்கக் கூடாதுநு மெரட்டிய அப்பா...டப்பா டப்பாவா.ice cream வாங்கி வர..ஐயோ...எறியுது எறியுது..ice cream வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்னு..நான் அழ....

சொட்டு தண்ணீர் பட்டாலே சொர்ருனு எறியற தொண்டையில...ஒரு கரண்டி உப்பை போட்டு..மூணு வேளையும்.. கொப்பளிச்சு..எனக்காக வாங்கிண்டு வந்த குலாப் ஜாமுன்..எல்லாரும் ரசிச்சு ருசிக்க...

national channel 1.30 மணி news வாசிக்கறாப்போல..சைகையில் காரியம் நடக்க..

ஒரு பத்து நாள்..பண்டிகை போல எல்லாரும் ஒரே தாங்கல்..

பதினோறாவது நாள்...எப்பவும் போல.. திறந்தா ..காத்து தானே வரப்போறதுனு பழக்க தோஷத்தில் ..நினக்க..ஆஹா..என் குரல் வெளியே வர...

ஓ..என் குரலா....ராஜீ....ராஜீ... மூணாவது மாடியில் குடியிருந்த அவள்..பாரதிராஜா தேவதைகள் style இல் slow motion ல ஓடி வர..

இனிமேல் canteen la ice cream சாப்பிடலாம் ஜாலியா மழையில நனையலாம்..அவள் சொல்ல.

அங்கே வந்து ஆடி மாசம் அம்மன் போல என் சித்தி வந்து பிரசன்னமாக..

எத்தன தடவை சொல்றது..இவ கூட சேராதேனு..அதே பல்லவி..


இன்றுவரை உறுதியாய்..

தொடர்கிறது எங்கள் நட்பு..

Friends for ever

No comments: