மூக்குக்_கண்ணாடி இங்கே..
மூக்கு எங்கே?
உன் மூக்கெனும் லாக்டவுனில் இருக்கும் எனக்கு..
உன் மறதி தந்ததே விடுதலை..
காற்று வாங்க வந்த எஜமான்..மூக்கு
கண்ணாடி என்னை கழற்றி வைக்க..
கால் பேசும் சுவாரஸியத்தில்..தன்
இரண்டாவது கண்ணை விட்டுச் சென்றார்.
ஆஹா..
மேகம் சூழ்ந்த வானம்..
மணம் வீசும் மலர்கள்..
தலையாட்டும் மரங்கள்
தாளம் போடும் பறவைகள்..
மொட்டை மாடியில் ..
தனிமையில் நான்..
உன் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கும் எனக்கும்..
ஆக்ஸிஜன் வேண்டாமா?
Freelancer ஆக இந்த fantasy உலகை ரசிக்கும் வேளை..
என் லென்ஸ் வழி தெரிந்தது..மொபைல்
காமிரா லென்ஸ் ஒன்று..
பிடிபட்டேன்..
இனி..வாட்ஸப்பில் வலம் வருவேன்..
ஏலம் போட்டு கூவினதும்
எஜமான்/னி வந்திடுவார்..
மீட்ட சந்தோஷத்தில்..
மீண்டும் அவர்.
மீளாத் துயரில்..
மீண்டும் நான்..
அவர்..
மூக்கின் மேல்..
சிறை படுவேன்..
#மறதி_நல்லது..
No comments:
Post a Comment