Saturday, April 29, 2017

ஒரு வாண்டுக் கூட்டமே

ஒரு வாண்டுக் கூட்டமே...
(ராஜா சார் பாடல் வரி)..


வெறிச்சோடிய வராண்டாக்கள்
விழாக்கோலத்தில் இப்போ
விடுமுறை விட்டாச்சே..ஒரு
வழி பண்ணிடும் வாண்டுகள்.

பூங்காக்களில் பூத்தது
புத்தம்புது மழலைப் பூக்கள்.

ஓடிப் பிடித்து விளையாடி
ஒரு சிறு சிராய்ப்புக்காக
ஓவெனெ அழுது
ஊரைக் கூட்டிய குட்டீஸ்.


'பால்' பொறுக்கிப் போட்டா
'பாட்டிங்' உண்டு நாளையென
ஒட ஒட விரட்டிய
புதுசா மீசை முளைத்த
பந்தா பார்ட்டிகள்.

மாடிப்படி ஏறுகையில்
மறைஞ்சிருக்கேன் நானிங்கே
மாட்டி விட்டுடாதீங்கனு
மன்றாடிய மழலைகள்.

பாவனையாய் பெரியவன்
பின்னால் அமர
பறக்குது தன் சைக்கிளென்று
பரவசத்தில் தம்பிகள்.

கதவைத் தட்டி விட்டு
காணாமல் மறைந்து போன
குறும்புக் குட்டி வால்கள்.

வெய்யிலை வீணாக்காமல்
விளையாடுவோர் பலரிருக்க
வீடியோ கேம்ஸ் போதுமென்று
வீட்டுக்குள் ஒரு கூட்டம்.



பாட்டி வீடு அத்தை வீடு
பக்கத்தில் இருந்தாலும்
பழகின என் வீடே
படு சொர்க்கம் என்றே..

நாளும் போனதிங்கே..
நாள் முழுதும் நாடகம்
நடப்பதெல்லாம் பரவசம்..
நாளும் போனதிங்கே
நானும் குழந்தையாய்..
இவர்களில் ஒருவராய்..

சிவக் குமார் இவரு
சிவப் பழமும் இவரு
சிறந்த படைப்பாளர் இவரு
சிவக்கும் கண்ணோடு இவரு
சிக்கும் பார்வையில் தவறு
அம்மையப்பன் ஆசிபெற்ற இவரு
ஆன்மிகம் அறிவியல்
அழகாய் எழுதுமிவரு..
நலங்கள் யாவும் பெற்று
நல்லா வாழணு மிவரு
சந்திர சேகர் இவரு
வந்து பிறககலை இன்னொருவரு
தரமென்றும் பிரித்ததில்லை இவரு
தந்து மகிழ்வார் ஊக்கம்
தரணியில் இவர்போல சிலரு


சமையல் பாடம்

சமையல் பாடம்

அப்பாவுக்கு ஆகாது
ஆயிலும் புளியும்
ஆத்துக்காரருக்கோ..
அரை மிளகா அதிகமாகும்.
கண்ணின் மணிகளுக்கோ
கரம் மசாலா காரமுடன்
நால்வகை சமைத்த பின்னும்
நாக்கில் ருசி ஏறலையே
பிடித்தது பண்ணிபோட
பெற்றவளும் இங்கில்லை..
புரிந்தது இப்போதம்மா..நீ
பட்ட கஷ்டமெல்லாம்..

Friday, April 28, 2017

மேகமே.. மேகமே..
எட்டிப் பார்க்காதே இன்றென
எத்தனை பாடு பட்டும்
சுட்டெரிக்க வந்தே தீருவேனென
சூளுரைக்கும் சூரியனே..
நீயும்.. சோர்ந்து போவாய்
களைப்பும் வருமுனக்கு
காத்திருப்பேன்..
கம்பளிப் போர்வையாய் ..நீ
கண்ணுறங்கும் போதினிலே

வெற்றி இன்று உனது
வெறுத்து ஓட மாட்டேன்..
விடாது முயல்வேன்
அடை மழையாய்ப் பெய்து
அவணியைக் காக்கும்வரை

Monday, April 17, 2017

பழி ஒரு இடம்

பழி ஒரு இடம்...

அணைந்து போன கைப்பேசி
அடிக்க மறந்த அலாரம்..
அதிகாலை நேரத் துவக்கம்
அரக்கப் பரக்க அவசரம்

காலியாய்த் தொங்கும் பால்பை
காலையில் வராத செய்தித்தாள்
கழுத்தை அறுக்கும் மின்வெட்டு
கிண்டிப் போன தோசை

கையில் கிட்டா காலுறை
காணாமல் போன ஐடி கார்ட்
கசங்கி கிடந்த பள்ளிச்சீருடை
காக்க மறுத்த ஆட்டோக்காரன்

மூடியைத் தேடிய பாட்டில்கள்
முடியல உடம்புக்கென்று
மூணு நாள் விடுப்பில்
மூச்சிலும் மேலான முனியம்மா..

ஒண்ணுமே சரியா இல்லை
ஒரு வேலையும் நடக்கலையே

ஓடிய சிந்தனை கலைந்தது
'ஒன்னோட பொட்டு
ஒருபக்கமா இருக்கேனு'
ஓடி வந்து ஆசையுடன்
ஒட்டிக் கொண்ட பெண்ணை
ஓங்கி விட்டாள் ஓர் அறை..

ஓவெனெ அழது புரண்டது
ஒண்ணும் புரியாத குழந்தை

சமாதானம் செல்லுபடியாகாதே
சாட்சியம் இருக்கே
சாத்திய அடியின் சுவடுகள்
சிவந்த அவளின் கன்னத்திலே

...

ஓ..பாப்பா லாலி

..பாப்பா..லாலி..


ஆயா(aunty) வந்ததும் தான்
அம்மாவுக்கு உயிரே வரும்
அவசர ஆணைகள் பிறப்பித்தே
அவளும் ஒப்படைப்பாள்..தன்
அன்புச் செல்லத்தை..
அலுவலகம் ஓடியபடி..

ஆயாம்மா..

பாலும் சோறும் தருவாள்
பாதி அவளும் தின்பாள்.
(தெம்பு வேணுமே)

பாப்பாவுக்கு பிடித்த தெல்லாம்
ஆயாவுக்கு ரொம்ப அத்துப்படி
கவனிப்பாள் தன் குழந்தைபோல
கவனிப்பாள் எசமானி தன்னையென்றே
ஆட்டுவாள் தலை எப்போதும்
ஆட்டுவிக்கும் பாப்பாவின் பொம்மையாய்
பொழுதைக் கழிக்கும் வித்தையில்
பல்கலைக் கழக பட்டதாரி

முள்ளும் ஆறைத் தாண்ட
முள் மேல் இருப்பாளே
மூச்சும் வந்திடுமே..எசமானி
முகம் கண்டேதுமே..

பையை எடுத்து புறப்பட்டு
பைபை சொல்ல..அவள்
புடவைத் தலைப்பை இழுத்து
போகாதே..நானும் வரேன்னு
பிடிவாத அழுகையில்
படுத்துமே பாப்பாவும்..

பயமும் பிடித்ததே..
பதிக்கணுமே  மனதிலே
பாப்பாவின் அம்மா..
படுபாவி நானென்று.



அரை நேர அம்மாக்களாக
ஆயாக்கள் ஆனபிறகு..
அக்குழந்தைக்கு தெரிவதில்லை..
ஆறு வித்தியாசங்கள்..
ஆயாவுக்கும் அம்மாவுக்கும்..



Friday, April 14, 2017

ஹேவிளம்பி

ஹேவிளம்பி..
விளம்ப என்னப் போகிறாய்..

வெண்பா விளம்பும் வாக்கெல்லாம்
வெரும் பாவாய் விளங்கட்டும்
வளமும் நலமும் நல்கிடவே
வந்து பிறந்திடு ஹேவிளம்பி..



தனமும் இன்பமும் பெருகட்டும்
தரணியில் ஒற்றுமை ஓங்கட்டும்
துன்பம் துடைக்கும் திருக்கரமாய்
வந்து பிறந்திடு ஹேவிளம்பி





பருவ மழை பொழியட்டும்
பாயும் நதிகள் நிரம்பட்டும்
பஞ்சம் பட்டினி மறைந்திடவே
பிறந்திடு நீயும் ஹேவிளம்பி
,

குறைகள் யாவும் தீரட்டும்
குற்றங்கள் எல்லாம் குறையட்டும்
குடிசைகள் கோபுரமாய் மாறிடவே
வந்து பிறந்திடு ஹேவிளம்பி

 சுற்றமும் நட்பும் கூடட்டும்
சூழும் பகையை எதிர்க்கட்டும்
சீரும் சிறப்பும் கொணர்ந்திங்கே
வந்து பிறந்திடு ஹேவிளம்பி.
கசப்பு நினைவுகள் ஒன்றன்றி
கரும்பாய் இனிப்பாய் இருந்திடவே
கவிஞர் பலருன் புகழ்பாட
வந்து பிறந்திடு ஹேவிளம்பி

Thursday, April 13, 2017

புது யுகம்

சுட்டெரிக்கும் வெயிலிலே
சுள்ளி பொறுக்கி
பள்ளி செல்லும் தன் மக்களுக்கு
சல்லிக் காசு சேர்த்து வைக்க
சலிக்காமல் இவள் உழைப்பாளே.
தலையில் பாரம் இருந்தாலும
தவழும் புன்னகையோ டிவள
தன்னம்பிக்கை துணை வரவே
தூரம் பலவும் நடப்பாளே.
தூக்கில் சோறும் குடிக்க நீரும்
இடுக்கிய குடையும் விறுவிறு நடையும்
இருக்கு இன்னும் தூரமென்றாலும்
இனிதாய் எளிதாய் கடந்தே போவோம்..
புண்ணேறிய கால்கள்
புன்னகை மாறா முகங்கள்..
புறப்பட்டதோ இங்கே.
புது யுகம் படைக்க
சிரிப்பு மாறா முகத்தோடு

சுமைகள்யாவும்  சுகமாய்த் தோன்ற
சுவடுகள் பதிக்க துவளுவதில்லை.
சுவர்கள் எல்லாம் சுளுவாய்த் தாண்டி
சரித்திரம் நாமும் படைத்திடுவோமே

கோயில் பிரசாதம்

கொழுப்பைக் குறைக்க
காலை நடை பயிற்சி..
காலெல்லாம் கெஞ்ச
காதில் விழுந்தது
கோவில் மணியோசை..
கண்ணைப் பறிக்கும்
அலங்காரத்தில்..
கடவுளும் காட்சி தர
கும்பிட்டு நான் நின்றேன்
குறையெல்லாம் கொட்டித் தீர்த்தேன்..
பிரகாரம் சுற்றி வந்து
பிரசாத வரிசையில் நின்றேன்
பாத்திரத்தில் நிரம்பிய தெல்லாம்
பசியும் கிளறி விட்டதே
மிதக்கும் முந்திரியில்
மிதமான தித்திப்பில்
மயக்கும் கேசரியும்
மணமணக்கும் புளியோதரை யும்
(படத்தில் கேசரியில் முந்திரியைக் காணொமேனு தேடாதீங்க..மூளை வேலை செய்ய வச்ச முந்திரி..)
முழுங்கிடலாமா இங்கேயே என்று
முழித்துக் கொண்டிருந்த நேரம்..
மனசாட்சி சொன்னது..
மரியாதையா..நடையைக் கட்டு..
மண்ணாகிப் போகுமே..
மாங்கு மாங்கென்று நடந்ததெல்லாமென்றே.

பழி ஒரு இடம்...

பழி ஒரு இடம்...


அணைந்து போன கைப்பேசி
அடிக்க மறந்த அலாரம்..
அதிகாலை நேரத் துவக்கம்
அரக்கப் பரக்க அவசரம்


காலியாய்த் தொங்கும் பால்பை
காலையில் வராத செய்தித்தாள்
கழுத்தை அறுக்கும் மின்வெட்டு
கிண்டிப் போன தோசை

கையில் கிட்டா காலுறை
காணாமல் போன ஐடி கார்ட்
கசங்கி கிடந்த பள்ளிச்சீருடை
காக்க மறுத்த ஆட்டோக்காரன்


மூடியைத் தேடிய பாட்டில்கள்
முடியல உடம்புக்கென்று
மூணு நாள் விடுப்பில்
மூச்சிலும் மேலான முனியம்மா..

ஒண்ணுமே சரியா இல்லை
ஒரு வேலையும் நடக்கலையே

ஓடிய சிந்தனை கலைந்தது
ஒன்னோட பொட்டு ஒருபக்கமா இருக்கேனு
ஓடி வந்து ஒட்டிக்கொண்ட பெண்ணை
ஓங்கி விட்டாள் ஓர் அறை..
ஒண்ணும் புரியாத குழந்தை
ஓவெனெ அழது புரண்டது..

Friday, April 7, 2017

தலை வாரிப் பூச்சூடி உன்னை

தலை வாரிப் பூச்சூடி உன்னை
பாட சாலைக்கு போ என்று
சொன்னாள் உன் அன்னை
முடியிலுள்ள சிடுக்கெடுத்து
முடிந்து கொண்டை போடுவேன்..
உன் ...
முகத்திலுள்ள சுருக்கத்துக்கு
முழு டப்பா கிரீமும் போதாதே..
மூட் அவுட் ஆகாதே பாட்டி
முடிஞ்ச வரைக்கும் ..உன்
முதுமையையும் மறைப்பேனே..
மலர்ந்த புன்னகை நீ சிந்து
மறைந்து ஒடிப் போகுமே ..உன்
வயதைக் காட்டும் ரேகையெல்லாம்

Wednesday, April 5, 2017

ஒரு வார்த்தை

ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..
'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு தடவை என்னைக் கேட்டிருக்கலாமே அம்மா..என்ன வேண்டுதல் இதெல்லாம்..
தாயும் சொன்னாள்
தலைப் பிரசவம்...
தாயும் சேயும் நலமா இருக்க
திருமலையானை தரிசனம் பண்ண
 தூக்கிண்டுனு வரேன் நடைபாதி வழியாக..
இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..
அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு தடவை என்னை கேட்க மாட்டியா...
நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே..
ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..
கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.
கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடைவாதம் பிடிக்க..
இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..
ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..
Sriram Jayaram Jaya Jaya ram

Rama navami

Ramanavami special
பானகமும் நீர்மோரும்
பகவான் பேர்சொல்லி
பவ்வியமாய் விநியோகம்..
பக்தனை மெச்சியே
ப்ரதிஷ்டையும் ஆனார்..
பட்டுத் தெறித்த
படபட மழைத்துளியிலே..
Jai seetharam