Monday, April 17, 2017

ஓ..பாப்பா லாலி

..பாப்பா..லாலி..


ஆயா(aunty) வந்ததும் தான்
அம்மாவுக்கு உயிரே வரும்
அவசர ஆணைகள் பிறப்பித்தே
அவளும் ஒப்படைப்பாள்..தன்
அன்புச் செல்லத்தை..
அலுவலகம் ஓடியபடி..

ஆயாம்மா..

பாலும் சோறும் தருவாள்
பாதி அவளும் தின்பாள்.
(தெம்பு வேணுமே)

பாப்பாவுக்கு பிடித்த தெல்லாம்
ஆயாவுக்கு ரொம்ப அத்துப்படி
கவனிப்பாள் தன் குழந்தைபோல
கவனிப்பாள் எசமானி தன்னையென்றே
ஆட்டுவாள் தலை எப்போதும்
ஆட்டுவிக்கும் பாப்பாவின் பொம்மையாய்
பொழுதைக் கழிக்கும் வித்தையில்
பல்கலைக் கழக பட்டதாரி

முள்ளும் ஆறைத் தாண்ட
முள் மேல் இருப்பாளே
மூச்சும் வந்திடுமே..எசமானி
முகம் கண்டேதுமே..

பையை எடுத்து புறப்பட்டு
பைபை சொல்ல..அவள்
புடவைத் தலைப்பை இழுத்து
போகாதே..நானும் வரேன்னு
பிடிவாத அழுகையில்
படுத்துமே பாப்பாவும்..

பயமும் பிடித்ததே..
பதிக்கணுமே  மனதிலே
பாப்பாவின் அம்மா..
படுபாவி நானென்று.



அரை நேர அம்மாக்களாக
ஆயாக்கள் ஆனபிறகு..
அக்குழந்தைக்கு தெரிவதில்லை..
ஆறு வித்தியாசங்கள்..
ஆயாவுக்கும் அம்மாவுக்கும்..



No comments: