Thursday, March 31, 2016

March 31st

முப்பத்தொன்று மாrச்
சில closing..
பல..carry forwards..
tally ஆகாத
trial balances..
பலமும்..பலவவீனமும்
அம்பலமாகும்..
balance sheet ..

target achieve பண்ண
தலை அடகு வைக்கும் ..
தனிக் கூட்டம்..

advance எல்லாம்..
anakonda முழுங்க..
auditor எல்லாம்..
ஆடிப் போய்..
அரையாண்டே அரைகுறை..
ஓராண்டு ..ஒரு நாளில் முடிக்க..
super man ஆகணும்...
suspense ல போட்டுடு..
சூட்சுமம் சொல்லித் தரும்..
senior.. கணக்கர்கள்..

 விளக்கெண்ணெய் விட்டு...
விடிய விடியத் தேடினாலும்..
அகப்படாத.
அரையணாவும.. காலணாவும்..
(பெரிசில் விட்டதை சிறுசில் பிடிப்பது இதுதானா)..
இப்படி..
மூளையை கசக்கி..
முப்பதொன்னை முடித்து..
முனைப்பாய் ஒரு ஆரம்பம்..
முட்டாள் தினத்தில்..


Wednesday, March 30, 2016

இருந்துட்டு போகட்டுமே..


இருந்துட்டு போகட்டுமே..


எடுத்து விட்டெறிய

என் கை  பரபரக்க..

இருந்துட்டு போகட்டும்..

இது ஒன்னு மட்டுந்தானே..

இதயஞ் சொல்ல..

இப்படியாக..

SHELF ஒழிக்கும் படலம்..

 போகியும் பொங்கல் போல

வருஷாந்திர  மேளா..

 
பழையது கழித்து

புதியதுக்கு..இடம் தரணும்.

புது வாசம் வீசும் ..

புத்தகமும் நோட்டும்..

புதுமனை புகு விழா..

 
கடை பரப்பினேன்..

கழித்துக் கட்ட..

 
google இருக்கே..

GK books க்கு வேலை?

பொது அறிவை..

பேப்பர்காரன்..பேரத்துக்கா..??

சாமி(சரஸ்வதி) கண்ணைக் குத்தும்

இருந்துட்டு போகட்டுமே..

 

ஆசையாய் சேர்த்த

amarchitra katha வோடு

fairy யும் jataka வும்

ராமாயண மும்,பாரதமும்..

படமும் கதையுமாய்..

பழைய நினைவுகளும்..

இருந்துிட்டு போட்டுமே..

 

இலக்கணம் இழந்த பேச்சிங்கே

wren and martin...தேவையா.

என்னிக்காவது உதவும்..

இருந்துட்டு போட்டுமே...

 

படித்த பள்ளிகளின்(ஒரு பெரிய list உண்டு)

school magazines..

கட்டுரையும்..ஓவியமும்..

group photoக்களும்..

குழந்தைகளின் கைவண்ணமும்

இருந்துட்டு போட்டுமே..

 

சோழியும்.. தாயமும்..

snake nd ladder m

சோகமா...என்னைப் பார்க்க

இது என்ன இடம் அடைக்கும்..

இருந்துட்டு போகட்டுமே..

 

இப்படியாக..

பழசுகளின்..

பாசப் பார்வை..

இரக்கம் காட்டினேன்..

இருந்துட்டு போகட்டுமேனு

கஷ்டந்தான்..

புதுசே..

கொஞ்சம்..adjust பண்ணு..

பழசாக நீயும் ஆகும் வரை..

வழிந்தது...

மீண்டும் shelf..

இடிசலோடு..ஒர் இட ஒதுக்கீடு..

எதிர்ப்புகள்...ஏதுமின்றி..

 

Monday, March 28, 2016

தங்கமணி எங்கே நீ.....இரண்டாம் வருடம்


சத்தம் போடாத..

சாதனை யாளர்..

சரித்திரத்தில்.. பலர்

எம் குடும்ப ….. சரித்திர நாயகி..

எங்கள் தங்கமணி நீதானே

 

”வயசாச்சு எனக்கு..

வேறெதுவும் முடியாதுனு..”

வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை

Versatile blogger award….

விருதுக்கு சொந்தக்காரி நீ

 

திருக்கயிலை நாதன் முதல்..

..திருவொற்றி யுறைக்கோன் வரையில்

திரும்பிய திசையெலாம்..

திருக்கோலம் கொண்டவனை..

தேடிப் போய்ப் பார்த்ததில்லை..

தேன் சொட்டும் பாவின் வழி

”என் பணி அரன்  துதியென்று”..

என்னாளும் துதித்த நீ..

எம்மை விட்டுச் சென்ற நாள்..

இன்னாள்..28-03-2014

வருத்தங்கள்….. …

தேடுது.. வார்த்தைகளை..

Miss you thangamani..

Wednesday, March 23, 2016

புத்தம் புது காலை..

good morning சொன்னது 
கொஞ்சியே..குயில்கள்..
பூபாளம் இசைத்தது..
பட்டாம் பூச்சிகள்..
கடைசி சொட்டு தூக்கத்தை
விட்டுக் கொடுத்து..
விரிய விழைந்த பூக்கள்..

பரீட்சைக்கு நேரமாச்சு
பதறியபடி..பள்ளிச்சிறார்கள்..
குழந்தைகளை பஸ் ஏற்றி
குட்டி மாநாடு போடும்...அம்மாக்கள்
jogging நு சொல்லி ஜகா வாங்கி
jolly அரட்டை அடிக்கும்...அப்பாக்கள்
மருமகளுக்கு டிமிக்கு கொடுத்து
மாங்கு மாங்கென்று 
exercise செய்யும்..மாமியார்கள்
மாமி கொடுத்த காபி!(கஷாயம்..) மறக்க
MTR வாசலில் க்யூவில் நிற்கும்..மாமாக்கள்..
காதலியின் தரிசனம் காலையிலேயே கிடைக்க
காத்துக் கிடக்கும்...கட்டிளங் காளையர்கள..
senior citizens சிரிப்பது எப்படினு ..
seriousஆ கத்துக்கும்..laughter clubs
(என்னையும் கேட்டார்கள்.. கொஞ்ச நாள் போட்டும்னேன்)
வாக்கிங் வந்தும் வானத்தை பார்த்து
வாழ்க்கை யோசனையோடு ஒரு சிலர்
இப்படி தினம் வந்து போவோரை ந்ம்பி
வியாபாரம் நடத்தும் ஒரு கூட்டம்....
காலை வீசி நடக்கத் தானே வந்தே.
கவிதை என்ன வேண்டிக் கிடக்கு..
கடமை நினைவில் வர..
நடக்க ஆரம்பித்தேன்...
இந்த நாள் நல்ல நாளாய்
எல்லாருக்கும் இருக்கனும் என்று..
good day to all

Friday, March 11, 2016

வயது..

வயது..
வயதே..
நீ ஏறினாய்
இறங்கியது...
என் இயக்கம்..

வயது  ஏற
வியாதி பெருக
வலி  ஏற
வலிமை  குறைய..

அழுகையில் தொடங்கி
மகிழ்ச்சியில் முடிய
விதியே..
வளையாதா..
உன் விதி..

( ஓடி ஆடி வேலை செய்து
ஒரு நொடியில் படுக்கையில் விழுந்து
ஒவ்வொரு கணமும் துடிக்கும்
ஓராயிரம் உள்ளங்களுக்கு
ஓர் அர்ப்பணம் இந்த கவிதை

Thursday, March 10, 2016

அழகு நிலையம்.

அழகு நிலையம்..

புருவம் வில்லாய் வளைந்தது
பருவும் பதமாய் உதிர்ந்தது..

முடி முகமூடி* போட்டது ..
படிந்த அழுக்கு போனது..

நகம் நளினம் ஆனது
முகம் முழுதாய் மலர்ந்தது..

தேவதை ஆனார்கள்...
தேடிப் போனோர் எல்லாம்..

ரசாயனதுக்கு ஒரு விலை
*கரிம சேர்மானமோ* கொள்ளை..

கூட்டம் அலை மோதுதப்பா..
கூட்ட புற அழகை..

நாட்டு மருந்து மறந்தோமே
பாட்டி வைத்தியம் இழந்தோமே..

இப்படி சாடிப் பாடினாலும்
அப்பாடானு இருக்கு..
ஆனந்த தூக்கம் சொக்குது
அன்பாய் தலை வருடையிலே..
ஆர்வமாய் அழகு செய்கையிலே..
ஆர அமர ஓரிடம்
ஆஹா..இந்த இடம் தானோ..


* முகமூடி.-hair dye

*கரிம சேர்மானம் -organic

Tuesday, March 8, 2016

மகளிர் தினம்


சக்தி நீ..

சாந்தம் நீ..

புத்தி நீ..

பக்தி நீ..


அன்னை  நீ..

அணையிலா அன்பு நீ..

 துணைவி நீ..

தோள் கொடுப்பவள் நீ..

 மகள் நீ..

மண்ணின் சொர்க்கம் நீ...

 அக்கா நீ..

அக்கறையின் கரை நீ..

 தங்கை நீ...

தமயனனின் தங்கம் நீ..

 அத்தை நீ..

அன்பின் மொத்தம் நீ..

சித்தி நீ...

செல்லத் தோழியும் நீ..

 பாட்டி நீ...

வழி காட்டி நீ...
 
ஆசிரியை நீ...

ஆளாக்குபவள் நீ...

 ப்ரிய சகி நீ...

பேசும் தெய்வம் நீ...

தோழி நீ..

துணை யிருப்பவள் நீ..
 

உறவுகளின் உயிர் நீ..

உயிரின் ஓட்டம் நீ..
 
யாதுமாகி நின்றாய் நீ

அணுவும் அசையாது நீயின்றி..


 உலக மகளிர் தின மென்று

ஊரெல்லாம் கொண்டாட்டமின்று

உன்னத நிலை  நீ இன்னுமடைய

உடைத்தெ றிவாய் தடைகளுமே..

 
என் சமர்ப்பணம்

அகிலா