Sunday, August 28, 2022

Happy birthday ரோஹிணி ..

 Happy birthday ரோஹிணி ..


"கண்ணுக்குள் இத்தனை பவரா?'

இப்படிநு  பாட மாட்டார்..


"கண்ணு காட்டு போதும்' நு சொல்லிடுவார்..


"கண் டாக்டரே....என் ஸ்பெக்ஸை நேற்றோடு காணவில்லன்னு வருவாங்க இவரைத் தேடி..


"கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்" ..ரோ ..பாட..


"உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே"..என்று கிருஷ்ணா  சார் டூயட் பாடுவார்.


' கண்ணான வருணே..கண்ணான வருணே' ..என பாடும் அன்பான அம்மா ரோ.


"சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா'..

ஆமாங்க..சுட்டிக் காட்டுவாங்க தப்பை எங்கிருந்தாலும்..


இவங்க கண்ல உண்டு..gun..


கண்ணும் கண்ணும் நோக்கியா..உன் பார்வை ..ரவை கொண்ட துப்பாக்கியா..?


கண் கண்ட தெய்வம் இவர்..பலருக்கு..


"உன்னைக் கண் தேடுதேனு..'

இவர் பதிவைத் தேடும் நட்புக் கூட்டம்..


கலங்கும் கண்கள் ..இவர் பதிவால்..

அட..சிரிச்சு சிரிச்சு..கண்ல தண்ணி வரும்ங்க..

காமெடி பதிவில் crown வெச்ச ராணி இவங்க..


கண் எதிரே தோன்றினாள்..

கனி முகத்தை காட்டுவாள்..

வேதனையும்  மாற்றுவாள்..


கண்ணம்மா..கண்ணம்மா..நீ அழகுப் பூஞ்சிலையன்றோ..?


கண் வழியே உள்ளத்தையும் பார்க்கும் உன் லென்ஸ் பார்வைக்கு ..

ஆயிரம் வந்தனம்.


"கண்ணால் பேசும் பெண்ணே..'

கோடி வாழ்த்துக்கள் உன் பிறந்த நாளுக்கு..


#Happy_birthday Rohini Krishna..

Wednesday, August 24, 2022

இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

 இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

"சொன்னபடி கேளுு மக்கர் பண்ணாதே"னு பாடினப்பறமும் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை.

எந்தக் கிக்குக்கும்..கிக்கே ஆகாமல்..மெளனமே பார்வையாய்..

'ஸ்கூட்டி இல்லாத வாழ்வு என்னது.?.என்று ரேவதி ஸ்டைலில் என் மை.வா. பாட..

"நான் அசைந்தால் அசையும் அகில(லா)மெல்லாமும்'னு என் ஸ்கூட்டி எச பாட..

என் சோகத்தை பார்த்த பக்கத்தில் கருமமே கண்ணாய் கார் துடைத்தபடி இருந்த பையன்..'என் கிட்ட மோதாதேனு'  வீரமா ஸ்கூட்டியை உதை உதைனு உதைக்க ஆரம்பிச்சான்.

'உனக்கும் பெப்பே..உங்க அப்பாவுக்கும் பெப்பேனு ' என் 'pep'.. நக்கலாய் ஒரு சிரிப்புடன்.

hato  hato..mein karunga நு நேபாளி செக்யூரிடி வந்து ஒரே கிக்..வண்டி வேதனையில் முனக ஆரம்புச்சது..அடுத்த அடியில்.."பறந்து செல்லவா..பறந்து செல்லவா" நு பாட்டு பாட ஆரம்பிச்சது..


செக்யூரிட்டி ஒரே குஷியில் ' mere paas maa hai' என்று கழுத்தில் போட்ட டாலரை கண்ணில் ஒற்றியபடி..கார் துடைத்த பையனுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

பாவம்..அந்தப் பையன்..கால் மணி நேரம் போராடியதன் பலனை செக்யூரிட்டி தட்டிச் சென்றார். இவன் செக்யூரிட்டி இல்லை..சகலகலா வல்லவன்னு அந்த வழியா போன மாமா..கொஞ்சம் ஐஸ் வெச்சுவிட்டு போனார்.


நன்றி சொல்லவே எனக்கு ஒரு வார்த்தையில்லையேனு சுவர்ணலதா என் மன BGM ல் ..

ஃப்ரண்டுக்காக காத்திருந்த வேளையில்..இப்படி எத்தனை பல்பு வாங்கியிருக்கோம்னு ஒரு 

மண்டையில் flash back ஓடியது..


'பா'ட்டில் மூடியே தாழ் திறவாய'்னு  தட்டிப் பார்த்து..திருகு திருகுனு திருகினப்பறம் கழற்ற வராத மூடி..

வூட்டுக்காரர் 'திறந்திடு சீசே(சா)'நு சொல்றதுக்கு முன்னாடியே..வாயைப் பிளக்க..

அதெல்லாம் ஒரு technique நு சொல்லிண்டே போக  .நானோ..'உன்  பார்வையில் ஓராயிரம்  சயின்ஸ் நான் தெரிஞ்சுப்பேன்..வாழ்வில் தானேனு '  அம்மன் கோயில் கிழக்காலே ராதா மாதிரி ஆனந்தக் கண்ணீருடன் .


flash back வளையம் இன்னொரு முறை சுற்றியது. இப்போ..பெண்ணோட turn.


பெண்ணின் கட்டுரைப் போட்டிக்கு கண் முழிச்சு..நோட்ஸ் எடுத்து ..கருத்து கொப்பளிக்க எழுதி கொடுக்க..அங்கே வந்த தோழி..ஒரே ஒரு quote  சொன்னாள்.

ஸ்கூல் போய்ட்டு வந்த பெண்..Amma..aunty சொன்ன quote...made my day என்று சொல்ல.. heart ல லேசா  crack விழற சத்தம்..

'பெத்த மனசு..பித்தத்திலும் பித்தமடானு..அடுத்த போட்டிக்கு நோட்ஸ் ரெடி செய்ய துவங்கினது..ஞாபகம் வர..


ஹலோ..எந்த உலகத்தில இருக்கே? எத்தனை தடவை ஃபோன் பண்ணியிருக்கேன் பாருனு..என்ன மத்யமருக்கு எழுத ஏதேனும் topic கிடைச்சுடுத்தா.. வா கிளம்பலாம்னு வண்டியை கிளப்ப..

அங்கே ஒரு scene.் என் அபார்மெண்ட்டின் குட்டி வால்..அவன் குட்டி சைக்கிளின் செயின் கழன்று..அவன் கூட இன்னும் சில வாண்டுகள் பிரம்ம பிரயத்தனத்தில் செயினை மாட்ட..

அப்போது அங்கே வந்த அபார்ட்மெண்ட்டின் அண்ணங்கள் ரெண்டு பேர்..அசால்ட்டா மாட்டிக் கொடுத்துவிட்டு போக...'அண்ணா சூப்பர் ண்ணா..' வாழ்த்து மழை


' இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..' என்ற SPB யின் குரல்..எங்கிருந்தோ காதில் வந்து விழுந்தது.

Prelude to diwali

 Prelude to diwali

ஒரு மாசம் முன்பே..

அட்டை டப்பாவில்..

புஸ்வாணமும்..சக்கரமும்..

லக்‌ஷ்மியும்..குருவியும்..

மத்தாப்பும்....ராக்கெட்டும்.

அட்டத்தை அடையும்..


வெயில் இருக்கானு பார்த்து..

வடாம் மாறி பரப்பி...

வரிசையா அடுக்கி வெச்சு..

தம்பியுடன் பாகம் பிரிச்சு..

தப்பக் கூடாது வாக்குனு..

தலையிலடிச்சு..சத்தியம் வாங்கி..

திருட்டுத் தனமா..

திருடு போகலயேனு..

திடம் பண்ணிண்டு..

தீபாவளி சூடுபிடிக்கும்..


முதல் நாள் சாயந்திரமே..

மூக்கை பிடிக்க..

மெனுக்கள் துவங்கும்..

போட்டது போட்டபடி..

கோப்புகளை விட்டுவிட்டு..

அம்மா ஓடி வருவாள்..

ஆபீஸ் வேலை விட்டு..


புகுந்த வீடு பெருமை காக்க

புதுக்கோட்டை வழக்கம்..

பஜ்ஜியும்..பக்கோடாவும்..

பறிமாறியே ஆகனும்..

இரவுச் சாப்பாடு..

இருக்குமே ஒரு லிஸ்ட்.

சேமியா பாயசமும்..

சின்ன வெங்காய சாம்பாரும்..

உருளைக்  கறியோடு..

அப்பளம் பொரியலோடு..

ஆடைத் தயிரோடும்..

கண்ணை சொருகும் தூக்கம்..


மூணு மணி அலாரம்..

முணுமுணுக்க தொடங்கும்...

பல் விளக்கி வருமுன்..

பலகையில் போட்ட கோலம்..

பாத்திர த்தில் நல்லெண்ணெய்..

பாங்காய் மடித்த ..

பாக்கு வெத்தலையுடன்..

கெளரி கல்யாணம் பாடி..

சொட்ட சொட்ட எண்ணெய்..

சீயக்காய் போட்டு நீராடி..

குங்கும மிட்ட துணியுடுத்தி..

பட்டாசு வெடிக்க..

சிட்டாய் பறக்கும் வேளை..

சின்ன கிண்ணியில்..

சுருளக் கிளறிய

மருந்து உருண்டை.

விடாது கருப்பாய் தொடர..

விட்டேன் ஜூட்டென்று..

வாசலுக்கு ஒடிப் போய்..

வெடிக்க துவக்கம்..

தம்பி..தைர்யசாலி..

நீள ஊதுவத்தி..

ஊதி ஊதி..

ஓடிப் போய் வைப்பான்..

சரமும்..யானையும்..

அட்டகாச atom bomb ம்..


அடுத்த வேலை..

பக்கத்து வீட்டுக்கெல்லாம்

பக்‌ஷண பரிமாறல்..

அங்கொரு பாட்டி உண்டு..

பத்து ரூவாய் தருவாள்..

பக்கத்து கடைக்குப் போய்..

கேப்பு வாங்கி வந்து.

சுத்தியலை வெச்சு..

ஒவ்வொண்ணா..அடிச்சு..

மிஞ்சிய ஒத்தையும் .

ஊசி வெடியும் 

மனசு வராமல்..

காலி பண்ணி. 

கடைசியில்..

சுருளும் பாம்புடன்..

குப்பையயும் சேர்த்து கொளுத்தி..

குட்பை...சொல்லி விட்டு..

குட்டித் தூக்கம் போட்டு..

புதுப்படம் ஒன்னு பார்த்து..

புதுத் துணிகள் கதை பேசி..

வந்திருந்த சித்தி சித்தப்பா..

தம்பியுடன் கிளம்பியதும்..

வெறிச்சோடிப் போகுமே..

வீடும் மனமும்..

ஆண்டுகள் போனாலும்..

அசை போடும் எண்ணங்கள்..

என்றென்றும்..சுகமே..சுகமே

மூழ்காத ship..ஏ friendship aa..

 மூழ்காத ship..ஏ friendship aa..

எத்தன தடவ சொல்றது இந்த ராஜியோட சேர்ந்து மழையில கும்மாளம் அடிக்காதேனு....லொக்கு லொக்குனு இரும்பிண்டு..தொண்டை வலி வந்து அவளா கஷ்டப்படறா..இதே பொழப்பா போச்சு உனக்கு..

அம்மா ,சித்திகளின் திட்டுகளின் மழையில்..

எப்ப போனாலும் அந்த டாக்டர் 50 ரூபாய் வாங்கிண்டு அதே pendits எழுதி கொடுக்கப்போறார்...வீட்டிலிருந்த tablet போட்டுண்டு..school க்கு ஓடி..ஒரு பாவ மூஞ்சி வெச்சுண்டு..friends எல்லாரும்..miss miss இவளுக்கு ரொம்ப தொண்டை வலினு சொல்ல..ஒரு சோக கீதம் தான்..

இப்படியே..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண மாய்..என் தொண்டை அடைபட..ஒரு level க்கு மேல..காலம்பற எழுந்து good morning சொல்லலாம்னா..காத்து மட்டுமே வரும்..எல்லாம் உப்பு தண்ணி போடு கொப்பளிச்சா.. சரியாகிடும்..காப்பி கிடைக்காது.. உப்பு தண்ணி தான்....அம்மா அப்போ..finance officer....எல்லா மெடிகல் காலேஜ் professor paybill table ல வந்து குவியும்.. கண்ணு ..கண்ணுனு..ஒரு கடைநிலை ஊழியர்..பாப்பாவுக்கு எப்பபார்த்தாலும் கஷ்டப்படுதே..இங்கின் இருக்கற நல்ல specialist கிட்ட காட்டலாமேனு வழி சொல்ல..

 ENT department head..தலைமையில் சிகிச்சை ஆரம்பம்..

நீங்க MMC வந்துடுங்கோ ..அங்கே எல்லா check up பண்ணிடலாம்நு சொல்லிட்டு..தலை சொறிந்தவாறே..madam..arrears வரணும்   ..கொஞ்சம் ஹெல்ப் பண்னுங்கோ..

ஐயோ..சாமி..எங்கே வந்து மாட்டிண்டோம்னு நானும் அம்மாவும் விழிக்க..

நான் ENT ward நுழஞ்சதும்...ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்கார வெச்சுடுவா.. திடீர்னு..திபுதிபுனு..ஒரு பத்து பதினஞ்சு வெள்ளை க் கோட்டு போட்டுண்டு students ...எல்லாரும் என்ன சுத்தி நிப்பா..டாக்டர்..வரார்..டாக்டர் வரார்..ஆஜானுபாவான டாக்டர்..என்னோட வாயை ஒரு clip போட்டு திறந்து வெச்சு..இது ஒரு serious case of tonsillitis.. கேள்வி க் கணைகளை தொடுக்க ஆரம்பிப்பார்..நீயெல்லாம் எப்படி முன்னேறப் போற..திட்டு வேற..(வசூல் ராஜா.. அந்த கால ஸ்டைல்)...doctor..doctor..என் வாய் வலிக்கறது....சொல்ல முடியாமல்..திரு திரு முழியில் நான்..என்னைப் பார்த்ததும்..பல்லை நற நறனு கடிச்சு..எனக்கு சாபம் கொடுக்கும்..students . 

அந்த நாளும் வந்தது..ஆபரேஷன் தான்..முடிவாச்சு..ராஜீயும் கூட கண்கலங்க...மயக்க மருந்து கொடுத்தாச்சு..உலகம் கொஞ்சம் கொஞ்சமாக..

நழுவியது..எல்லார்க்கும் பத்து நிமிஷத்தில நடக்கற விஷயம்..நமக்கு ஒரு மணி நேரம் ஆச்சு..ரொம்ப சோர்ந்து போன டாக்டர்..'its a medical miracle'...என்னொட தொண்டையிலிருந்த எடுத்த சதை போல..இதுவரை யாருக்குமே..இருந்ததில்லையாம்..

அப்பறம் என்ன..இது வரை ice cream கண்ணால கூட பார்க்கக் கூடாதுநு மெரட்டிய அப்பா...டப்பா டப்பாவா.ice cream வாங்கி வர..ஐயோ...எறியுது எறியுது..ice cream வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்னு..நான் அழ....

சொட்டு தண்ணீர் பட்டாலே சொர்ருனு எறியற தொண்டையில...ஒரு கரண்டி உப்பை போட்டு..மூணு வேளையும்.. கொப்பளிச்சு..எனக்காக வாங்கிண்டு வந்த குலாப் ஜாமுன்..எல்லாரும் ரசிச்சு ருசிக்க...

national channel 1.30 மணி news வாசிக்கறாப்போல..சைகையில் காரியம் நடக்க..

ஒரு பத்து நாள்..பண்டிகை போல எல்லாரும் ஒரே தாங்கல்..

பதினோறாவது நாள்...எப்பவும் போல.. திறந்தா ..காத்து தானே வரப்போறதுனு பழக்க தோஷத்தில் ..நினக்க..ஆஹா..என் குரல் வெளியே வர...

ஓ..என் குரலா....ராஜீ....ராஜீ... மூணாவது மாடியில் குடியிருந்த அவள்..பாரதிராஜா தேவதைகள் style இல் slow motion ல ஓடி வர..

இனிமேல் canteen la ice cream சாப்பிடலாம் ஜாலியா மழையில நனையலாம்..அவள் சொல்ல.

அங்கே வந்து ஆடி மாசம் அம்மன் போல என் சித்தி வந்து பிரசன்னமாக..

எத்தன தடவை சொல்றது..இவ கூட சேராதேனு..அதே பல்லவி..


இன்றுவரை உறுதியாய்..

தொடர்கிறது எங்கள் நட்பு..

Monday, August 22, 2022

கண்ணனின் கருணை

 கண்ணனின் கருணை


தட்டைக்கு மாவு பிசைந்து பிள்ளையாரும் பிடிச்சு வெச்சு..


கண்ணா..நாலே நாலு தட்டை..ரவுண்ட் ரவுண்டா வரணும்ப்பா..ஃபோட்டோ போடாட்டி சாமி குத்தமாகிடும்னு நான் வேண்டிக்க..


நாலு என்ன நாற்பதும் நல்லா வரும்ணு அருள்புரிந்த..கண்ணா..really you are so chweetu..


நாம வேலை செய்யணும்னுனா பக்கத்தில் ராஜா சாரோ ரஹ்மானோ..கண்டிப்பா வேணும்..


டப்பா ரொம்பி நான் ஃபோட்டோ எடுக்கும்போது..

YouTube ல் பாடிக் கொண்டிருந்த பாடல்..

#மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..

ஆஹா..சந்தோஷம் இரட்டிப்பு😀


கொசுறு_தந்த_கொடை_வள்ளல்

 #..கொசுறு_தந்த_கொடை_வள்ளல்




கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தி பின்னோக்கி போறேன்..


போன வருஷம்


பிள்ளையாரை வாங்கிக் கொண்டு பெருமிதத்தோட வீட்டுக்குள் நுழைஞ்சேன்..


என் extra 😃 சந்தோஷத்துக்கு காரணம்..

பிள்ளையார் விற்றவர் கொடுத்த கொசுறு தான்...


Guess what..


#கொஞ்சம்_களிமண் 😃


"ஏம்மா...கொத்தமல்லி கருவேப்பிலை தான் கொசுறு வாங்குவே..இப்போ வேற லெவலுக்கு போய்ட்டியா? ..' 

பெண் சொல்ல..


" களிமண் godown ..மண்டையில் வெச்சுண்டு....கொசுறு வாங்கிண்டு வந்திருக்கா பாருடா அம்மானு' 

வூட்டுக்காரார் கண் ஜாடையில் சொல்ல..


Me ..no tension.. As usual..ஊ..லல..லா..பாடிக் கொண்டு..

உள்ளே வைத்தேன்..


இந்த லாக் டவுனில்....அந்தக் கொசுறு தான்..கைக்கு அடக்கமா ஒரு cute pillaiyar ஆனார்


ஆனால்..அதை எடுத்து..பிள்ளையார் செய்ய ஆரம்பிக்கும் போது..

ஏனோ..அந்த வியாபாரி கண் முன்னால் வந்தார்..

இந்த வருஷம் என்ன வியாபாரம் செய்து கொண்டிருக்கிறாரோ தெரியாது..

முதல் பிரார்த்தனை அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அனுப்பிட்டேன்..


#குடை


Glitter craft sheet வெட்டி..grand ஆ ஒரு குடை..


விக்னம் நீக்க..விரைந்து வாப்பா🙏

Thursday, August 11, 2022

தாயின்_மணிக்கொடி_பாரீர்

 



#செவ்வாய்_கவிதை


#தாயின்_மணிக்கொடி_பாரீர்



Thanks sankari CA 


தறியிலே நெய்த கொடி

பறையரை வென்று

நிலைநாட்டிய கொடி

நொடியில் வந்ததல்ல சுதந்திரமென்று...

நித்தமும் உணர்த்தும் எம் கொடி


சிறை விடுத்து..

சிறகடித்து ..சீறிப் பறக்க

தடை உடைத்து

தரணி வெல்ல..

தாரகம் சொல்லும் எம் கொடி.



அன்பில் ..

ஆன்மீக த்தில்

இயலில்

இசையில்

உழைப்பில்

ஊக்கத்தில்

எந்திரமயமாக்கலில்.

ஏவுகணை சோதனையில்

ஐக்கிய சபையில்..

ஒருமைப்பாட்டில்

ஓங்கும் புகழில்

ஒளடத ஆராய்ச்சியில்


கொடிகட்டி பறக்குதே..

கொடி கட்டிப் பறக்குதே..இந்தியக்

குடிமகனின் பெருமை.



தலைமைப் பொறுப்புகள் பல

தானாய் வந்து சேருதே..

இணையில்லை இந்தியர்க்கென்றே..

அண்டை தேசமெலாம் ..வியக்குதே


கடமை உணர்ந்த மக்களும்

கைக் கோர்த்த.. நாள் வந்ததே..

தூய்மை நாட்டை உருவாக்கும்

திண்ணமும் பிறந்ததே..


வீழும் இந்த தேசமென்று...

பாழாய்ப் போனோர்..

கண்ட கனவு..

பாதாளத்தில் வீழ்ந்ததே..


பாரத மணிக் கொடியும்

பட்டொளி வீசிப் பறக்குதே..

எட்டுத் திக்கும் எம் புகழும்

வெற்றி முரசும் கொட்டுதே


வீடு தோறும் ..தேசியக் கொடி

நாடெங்கும் ஒற்றுமையின் ஒலி..

சங்க நாதம் ஒலிக்குதே..

இதயங்கள் இணையுதே..



நிமிர்ந்த நெஞ்சுடன்

நேர்கொண்ட பார்வையுடன்

தாயின் மணிக் கொடி வணங்குவோம்..

தரணியில்..நமக்கு

ஈடில்லை என உணர்த்துவோம்.






















 

Friday, August 5, 2022

ஒரு நாள்

 மொபைலில் வந்து விழுந்த Watsapp msg.. .,'our day out tomorrow . be ready'.. oh..சொன்னபடியே..

காலம்பர எழுந்து வந்து பார்த்தா..'Paa ' ல வர அமிதாப் பச்சன் மாதிரி...ready aa..எங்கே போகணும்..மார்க்கெட் தானே..நானும் வரேன்..ஒவ்வொரு இடமா நின்னு நின்னு காய்,பழமெல்லாம் நான் வாங்க..ஒரே கடையில வாங்காம..இது எதுக்கு இப்படி அலையறே..கொடு என்கிட்ட பையை..நான் தூக்கிண்டு வரேன்..ஆஹா..என்ன ஒரு கரிசனம்..எல்லாம் வாங்கிட்டு கடைசில கொத்தமல்லி கொசுறு கேட்ட நேரம்...விட்ட ஒரு முரையில்..(சரி..சரி..நாளைக்கு கொசுறு வாங்கிக்கலாம்..நல்ல மூட் ஏன் கெடுக்கணும்)..

வீடு வந்ததும் கூட மாட ஒரே உதவி..திக்கு முக்காடிட்டேன்..என்ன சமைக்கட்டும்..என்று கேட்க..அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..இன்னிக்கு..வெளிய சாப்பிட்டுக்கலாம்..அந்த pink saree கட்டிக்கறயா..மந்திரத்தில் கட்டுண்டது போல..துரித கதி்யில்...uber book பண்ணியாச்சா...நான் கேட்டு முடிப்பதற்க்குள்..இல்ல இல்ல..இன்னிக்கு உனக்கு பிடிச்ச மாதிரி பஸ்லயே போலாம்..ஐயோ..நிசமாவா...பஸ் பயணம் எனக்கு அலாதிப் பிரியம்..நிறைய மனிதர்கள்..உயரத்திலேர்ந்து எல்லாரையும் பார்க்கலாம்...சீட்டில் அமர்ந்ததும்...முன் சீட் பெண் கட்டியிருந்த புடவையின் கலர் கண்ணை க் கவர...வாய் திறந்து சொல்ல எத்தனித்த வேளை...என் மனசப் படிச்சாப்போல..வீட்டுக்குப் போய் பேசிக்கலாமே...ஒகே..ஓகே..

பஸ்ஸை விட்டிறங்கி ஓட்டல் நுழைந்தோம்..எனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து...பாந்தமாய் எனக்கு அந்த ஹண்டி லேர்ந்து பரிமாறி..ஐயோ..சாமி நான் எந்த உலகத்தில இருக்கேன்...பில்லுக்கு காசு கொடுத்து கிளம்பும்வேளை..கால் பாட்டில் aquafina  என்னை விட்டுட்டு போறியேநு பார்க்க..லபக்கென்று எடுக்க முனைந்த என் கையை...டபக்கென்று பிடித்து.. வெச்சுடு அங்கேயே..வா போலாம்..(இது cheap ஓ...)

வெளியே வந்த நேரம் ,மெல்ல சொன்னேன்..எதுத்த நகை கடையில ஒரு சின்ன விளக்கு வாங்கனும்னு..அவ்ளோதானே...selection over..கையில் கிடைச்ச பில்லை தூக்கிண்டு manager கிட்ட போய் ...என் அம்மா..பாட்டி..கொள்ளு பாட்டியெல்லாம்..உங்க கடையில தான் வாங்கிண்டிருந்தா..நாங்கள்ளாம்..very old customers..சேதாரம் கொஞ்சம் கம்மி பண்னுங்கோனு சொல்ல..முன்னேற்பாட்டின்படி..அவர்  100 ரூபாய் கம்மி பண்ண..இது தேவையானு முரைப்பை தள்ளிவிட்டு..போலாமா..என்ற கேள்விக்கு.. ஐயோ ஒரு நிமிஷம்....பில்லை காம்பிச்சு..காலண்டர் வாங்கனும்..shelfக்கு பேப்பர் போடணும்..இவா காலண்டர் தான் ரொம்ப நாள் நன்னா இருக்கும்..அப்படியே குட்டி மணிபர்ஸ் வாங்கணும்...நான் அடுக்கிக் கொண்டே போக..இப்பொ போலாமா..(சரி சரி..நாளைக்கு இந்த பக்கம் வரும்போது வாங்கிக்கலாம்..)....காலாற கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சோம்...எதிர்க்க பார்த்த சக ஊழியரோடு பேச..அவர்..உங்களைப் பத்தி பேசாத நாளில்லை..உச்சி குளிர்ந்து..ஓ..அப்படியா..அடக்கிய ஆனந்தத்துடன்..

ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்...அடுக்களையில் நுழைந்த எனக்கு மீண்டும் ஒரு Watsapp msg..' how was the day out with me maa...?..

என்ன சொல்ல..precious and  treasurable moments da..பதில் தந்தேன்....

இன்னும் blue tick வரவில்லை..என் பதில் கூட பார்க்க நேரமில்லாமல்...மீண்டும் விட்ட இடத்தில் தொடர work from home..பாவம்..இந்த காலத்து குழந்தைகள்..

Happy birthday geethmala

 Happy birthday Geethmala Raghavan 


அஞ்சு ஆகஸ்ட்டில் பிறந்த

அஞ்சாத (பெண்) சிங்கம்..🦁


பஞ்சாய்ப் பறக்குமே கவலையெலாம்.

பதிவு இவளது படிக்கையிலே...


கஞ்சத் தனம் இல்லாது..

காமெடி அள்ளித் தருவாள்..


வஞ்சனை இல்லாது ..

வெடிச் சிரிப்புக்கு கியாரண்டி.


அஞ்சாத இவளும் ..அஞ்சும் ஒரு 

ஆள் உண்டு.

அஞ்சனா என்ற பெயர் கொண்டு..இவளை

மிஞ்சும் பெண்ணுண்டு..


வெங்கலக் குரலுண்டு..

விவேகமான பேச்சுண்டு..

வட்டமடிக்கும் நட்புண்டு..எதிலும்

விடா முயற்சி உண்டு..


வஞ்சி இவளைப் பாடவே..

வார்த்தைகள் வரிசையில் நிற்க..

வளமும் நலமும் நீ பெற

வாழ்த்துக்கள் பல சொல்லிடுவேனே..💐🎊🎉



#கீத்மாலா..


பழமொழியா..

பாசுரமா?


பாகவதமா?

பகவான் நாமமா?


படபட பேச்சா?

பட்டாசுப் பதிவா?


பட்டு மாமியா?

படா ஷோக்கா?


பாசமுள்ள அக்காவா?

பழகும் இனிய நட்பா?


பக்குவமான தயிர் வடையா?

பேச்சில் என்றும் பலாச்சுவையா?


பெண்ணுடன் எப்போதும் போட்டியா?

அடிப்பது எப்போதும் லூட்டியா?


பதிவைப் படித்தால் போதும்...மனக்

கவலையும் பறந்து ஓடும்..


நகைச்சுவை மன்னி  இவளுக்கு..

நகையென்ன தருவேன் நானும்..


ஸ்கூட்டியில் சுற்றி எங்கும்..தன்

ட்யூட்டியை செய்து முடிப்பாள்..


கேக்கும் ஹல்வாவும் ..

கேட்காமலேயே வீட்டில் கிடைக்க..


கொடுப்பேனே தோழிக்கு

கோர்த்த மாலையில் 💐 ஒன்று..

பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி..


Happy birthday Geethmala Raghavan💐🎂🍰🍭🍫🍬🍪🍩🍨🍧🍦🍡😃🍡


Happy birthday Geethmala Raghavan


geethu..

பேரைக் கேட்டாலே பிறக்குமே enththu.

பேச்செல்லாம் படா கெத்து


இவ போஸ்ட்டுன்னா எனக்கு பித்து

எங்க நட்பு ஒரு பூங்கொத்து.


இவ செய்யும் தயிர்வடை மெத்து

எழுதித் தருவேனே என்் சொத்து.


சிரிக்க வைக்கும் கீத்து..நீங்க

சிறப்பாய் வாழ என் வாழ்த்து.