Friday, August 5, 2022

ஒரு நாள்

 மொபைலில் வந்து விழுந்த Watsapp msg.. .,'our day out tomorrow . be ready'.. oh..சொன்னபடியே..

காலம்பர எழுந்து வந்து பார்த்தா..'Paa ' ல வர அமிதாப் பச்சன் மாதிரி...ready aa..எங்கே போகணும்..மார்க்கெட் தானே..நானும் வரேன்..ஒவ்வொரு இடமா நின்னு நின்னு காய்,பழமெல்லாம் நான் வாங்க..ஒரே கடையில வாங்காம..இது எதுக்கு இப்படி அலையறே..கொடு என்கிட்ட பையை..நான் தூக்கிண்டு வரேன்..ஆஹா..என்ன ஒரு கரிசனம்..எல்லாம் வாங்கிட்டு கடைசில கொத்தமல்லி கொசுறு கேட்ட நேரம்...விட்ட ஒரு முரையில்..(சரி..சரி..நாளைக்கு கொசுறு வாங்கிக்கலாம்..நல்ல மூட் ஏன் கெடுக்கணும்)..

வீடு வந்ததும் கூட மாட ஒரே உதவி..திக்கு முக்காடிட்டேன்..என்ன சமைக்கட்டும்..என்று கேட்க..அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..இன்னிக்கு..வெளிய சாப்பிட்டுக்கலாம்..அந்த pink saree கட்டிக்கறயா..மந்திரத்தில் கட்டுண்டது போல..துரித கதி்யில்...uber book பண்ணியாச்சா...நான் கேட்டு முடிப்பதற்க்குள்..இல்ல இல்ல..இன்னிக்கு உனக்கு பிடிச்ச மாதிரி பஸ்லயே போலாம்..ஐயோ..நிசமாவா...பஸ் பயணம் எனக்கு அலாதிப் பிரியம்..நிறைய மனிதர்கள்..உயரத்திலேர்ந்து எல்லாரையும் பார்க்கலாம்...சீட்டில் அமர்ந்ததும்...முன் சீட் பெண் கட்டியிருந்த புடவையின் கலர் கண்ணை க் கவர...வாய் திறந்து சொல்ல எத்தனித்த வேளை...என் மனசப் படிச்சாப்போல..வீட்டுக்குப் போய் பேசிக்கலாமே...ஒகே..ஓகே..

பஸ்ஸை விட்டிறங்கி ஓட்டல் நுழைந்தோம்..எனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து...பாந்தமாய் எனக்கு அந்த ஹண்டி லேர்ந்து பரிமாறி..ஐயோ..சாமி நான் எந்த உலகத்தில இருக்கேன்...பில்லுக்கு காசு கொடுத்து கிளம்பும்வேளை..கால் பாட்டில் aquafina  என்னை விட்டுட்டு போறியேநு பார்க்க..லபக்கென்று எடுக்க முனைந்த என் கையை...டபக்கென்று பிடித்து.. வெச்சுடு அங்கேயே..வா போலாம்..(இது cheap ஓ...)

வெளியே வந்த நேரம் ,மெல்ல சொன்னேன்..எதுத்த நகை கடையில ஒரு சின்ன விளக்கு வாங்கனும்னு..அவ்ளோதானே...selection over..கையில் கிடைச்ச பில்லை தூக்கிண்டு manager கிட்ட போய் ...என் அம்மா..பாட்டி..கொள்ளு பாட்டியெல்லாம்..உங்க கடையில தான் வாங்கிண்டிருந்தா..நாங்கள்ளாம்..very old customers..சேதாரம் கொஞ்சம் கம்மி பண்னுங்கோனு சொல்ல..முன்னேற்பாட்டின்படி..அவர்  100 ரூபாய் கம்மி பண்ண..இது தேவையானு முரைப்பை தள்ளிவிட்டு..போலாமா..என்ற கேள்விக்கு.. ஐயோ ஒரு நிமிஷம்....பில்லை காம்பிச்சு..காலண்டர் வாங்கனும்..shelfக்கு பேப்பர் போடணும்..இவா காலண்டர் தான் ரொம்ப நாள் நன்னா இருக்கும்..அப்படியே குட்டி மணிபர்ஸ் வாங்கணும்...நான் அடுக்கிக் கொண்டே போக..இப்பொ போலாமா..(சரி சரி..நாளைக்கு இந்த பக்கம் வரும்போது வாங்கிக்கலாம்..)....காலாற கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சோம்...எதிர்க்க பார்த்த சக ஊழியரோடு பேச..அவர்..உங்களைப் பத்தி பேசாத நாளில்லை..உச்சி குளிர்ந்து..ஓ..அப்படியா..அடக்கிய ஆனந்தத்துடன்..

ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்...அடுக்களையில் நுழைந்த எனக்கு மீண்டும் ஒரு Watsapp msg..' how was the day out with me maa...?..

என்ன சொல்ல..precious and  treasurable moments da..பதில் தந்தேன்....

இன்னும் blue tick வரவில்லை..என் பதில் கூட பார்க்க நேரமில்லாமல்...மீண்டும் விட்ட இடத்தில் தொடர work from home..பாவம்..இந்த காலத்து குழந்தைகள்..

No comments: