Wednesday, August 24, 2022

இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

 இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

"சொன்னபடி கேளுு மக்கர் பண்ணாதே"னு பாடினப்பறமும் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை.

எந்தக் கிக்குக்கும்..கிக்கே ஆகாமல்..மெளனமே பார்வையாய்..

'ஸ்கூட்டி இல்லாத வாழ்வு என்னது.?.என்று ரேவதி ஸ்டைலில் என் மை.வா. பாட..

"நான் அசைந்தால் அசையும் அகில(லா)மெல்லாமும்'னு என் ஸ்கூட்டி எச பாட..

என் சோகத்தை பார்த்த பக்கத்தில் கருமமே கண்ணாய் கார் துடைத்தபடி இருந்த பையன்..'என் கிட்ட மோதாதேனு'  வீரமா ஸ்கூட்டியை உதை உதைனு உதைக்க ஆரம்பிச்சான்.

'உனக்கும் பெப்பே..உங்க அப்பாவுக்கும் பெப்பேனு ' என் 'pep'.. நக்கலாய் ஒரு சிரிப்புடன்.

hato  hato..mein karunga நு நேபாளி செக்யூரிடி வந்து ஒரே கிக்..வண்டி வேதனையில் முனக ஆரம்புச்சது..அடுத்த அடியில்.."பறந்து செல்லவா..பறந்து செல்லவா" நு பாட்டு பாட ஆரம்பிச்சது..


செக்யூரிட்டி ஒரே குஷியில் ' mere paas maa hai' என்று கழுத்தில் போட்ட டாலரை கண்ணில் ஒற்றியபடி..கார் துடைத்த பையனுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

பாவம்..அந்தப் பையன்..கால் மணி நேரம் போராடியதன் பலனை செக்யூரிட்டி தட்டிச் சென்றார். இவன் செக்யூரிட்டி இல்லை..சகலகலா வல்லவன்னு அந்த வழியா போன மாமா..கொஞ்சம் ஐஸ் வெச்சுவிட்டு போனார்.


நன்றி சொல்லவே எனக்கு ஒரு வார்த்தையில்லையேனு சுவர்ணலதா என் மன BGM ல் ..

ஃப்ரண்டுக்காக காத்திருந்த வேளையில்..இப்படி எத்தனை பல்பு வாங்கியிருக்கோம்னு ஒரு 

மண்டையில் flash back ஓடியது..


'பா'ட்டில் மூடியே தாழ் திறவாய'்னு  தட்டிப் பார்த்து..திருகு திருகுனு திருகினப்பறம் கழற்ற வராத மூடி..

வூட்டுக்காரர் 'திறந்திடு சீசே(சா)'நு சொல்றதுக்கு முன்னாடியே..வாயைப் பிளக்க..

அதெல்லாம் ஒரு technique நு சொல்லிண்டே போக  .நானோ..'உன்  பார்வையில் ஓராயிரம்  சயின்ஸ் நான் தெரிஞ்சுப்பேன்..வாழ்வில் தானேனு '  அம்மன் கோயில் கிழக்காலே ராதா மாதிரி ஆனந்தக் கண்ணீருடன் .


flash back வளையம் இன்னொரு முறை சுற்றியது. இப்போ..பெண்ணோட turn.


பெண்ணின் கட்டுரைப் போட்டிக்கு கண் முழிச்சு..நோட்ஸ் எடுத்து ..கருத்து கொப்பளிக்க எழுதி கொடுக்க..அங்கே வந்த தோழி..ஒரே ஒரு quote  சொன்னாள்.

ஸ்கூல் போய்ட்டு வந்த பெண்..Amma..aunty சொன்ன quote...made my day என்று சொல்ல.. heart ல லேசா  crack விழற சத்தம்..

'பெத்த மனசு..பித்தத்திலும் பித்தமடானு..அடுத்த போட்டிக்கு நோட்ஸ் ரெடி செய்ய துவங்கினது..ஞாபகம் வர..


ஹலோ..எந்த உலகத்தில இருக்கே? எத்தனை தடவை ஃபோன் பண்ணியிருக்கேன் பாருனு..என்ன மத்யமருக்கு எழுத ஏதேனும் topic கிடைச்சுடுத்தா.. வா கிளம்பலாம்னு வண்டியை கிளப்ப..

அங்கே ஒரு scene.் என் அபார்மெண்ட்டின் குட்டி வால்..அவன் குட்டி சைக்கிளின் செயின் கழன்று..அவன் கூட இன்னும் சில வாண்டுகள் பிரம்ம பிரயத்தனத்தில் செயினை மாட்ட..

அப்போது அங்கே வந்த அபார்ட்மெண்ட்டின் அண்ணங்கள் ரெண்டு பேர்..அசால்ட்டா மாட்டிக் கொடுத்துவிட்டு போக...'அண்ணா சூப்பர் ண்ணா..' வாழ்த்து மழை


' இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..' என்ற SPB யின் குரல்..எங்கிருந்தோ காதில் வந்து விழுந்தது.

No comments: