Tuesday, May 31, 2016

வெய்யில்..

சீலைத் தலைப்பில் ஒளிந்து..
சிறு விழி ஜாலம் காட்டும்..
சின்னக் குழந்தை போல...
வெள்ளித்திரை நீக்கி..
வெளி வர யோசனையோ..

'என்ன வெய்யில்'..
'என்ன வெய்யில'்..
வெய்யாமல் நானிருக்க..
வியர்வை கொட்டா..
வெளிச்ச மட்டுமேந்தி..
வெளியே வா..
வெஞ்சுடரே..

Monday, May 30, 2016

அருவே..உருவே..அரனே..சிவனே..
தருதரும் நிழலாய்த் தொழுவோர்க் கருள்வன்..
வருத்தும் வல்வினை வீழ்த்திட வருவன்..
நீறு புனைந்தோன் நிம்மதி அளிப்போன்.
பாதம் பணிவோம்...பாவம் பறந்திட..
Om nama shivaya..Om..nama Shivaya..

Sunday, May 29, 2016

mall..mall..maalu..

மால்கள்.
மயக்க வைக்கும்..
மாயாஜால உலகம்..
மாசச் சம்பளம் பூராவும்..
மாயமாகும் அவலம்..


வாராந்திர விடுமுறை
வெட்டியா..வீணாக..
விரயமாகும் பணம்..
வீட்டில் நிரம்பும் குப்பை...

வளைஞ்சு..வளைஞ்சு..
வந்த வழி மறக்க...
வாய் பிளந்தே வேடிக்கை..
விழுவோம்..பாதாள உலகில்.

பகவானே..
buy one get one..
படு குழியில் விழாம..
பத்திரமாய் வெளியேரணுமே..

(பால்)பாட்டில் ஒரு கையும்..
பாப்பா மறுகையும்..
'பர்ஸே'ந்தி பின்தொடரும்
பரிதாப 'பதி'கள்..

ஒவ்வாத உடுப்புகளில்.
ஒய்யார நடை போட்டு..
ஒரு முறை முறைத்து
ஓகே சொல்ல வைக்கும்..
ஒன்றில் கலந்த பத்தினிகள்..

சாப்பாடு வகைகளோ..
சகட்டு மேனிக்கு..
வாயில் நுழையா பெயர்கள்..
விறுவிறு வியாபாரம்..
வீங்கும் வயிறுகள்..

அம்மாக்கள் பாடோ..
அது மிகத் திண்டாட்டம்..
coat stand ஆ மாறணும்..
கோபமே கூடாதங்கே..

காமிரா ஒளிச்சிருக்காணு..
கவனமாப் பார்க்கணும்..
காவலாய் இருக்கணும்..
கால் கடுப்பை பொறுக்கணும்..

ஒரு  மூட்டையிலிருந்து..
ஒண்ணே ஒண்ணு..
ஒரு வழியாப் பிடிக்கும்..
ஒம் சாந்தி மனஞ் சொல்லும் .

அங்கே ..
காலை முதல்..
கால் கடுக்க நின்னு..
கசக்கிப் போட்டு..
குப்பை மேடாக்கி்யதை
கரிசனமா..மடித்து..
கடமை செய்யும்..
காவல் பெண்ணுக்கு...
கைக் கொடுக்கத் தோணும்..

'மணி'யும்..
'money 'யும் ..
மதிப்பிழந்த ஓர் இடம்..
மால்களே..மால்களே..மால்களே..

Saturday, May 21, 2016

மல்லிச்சரம்

மல்லிச்சரம்..
என் முறை..
எப்போ வருமென்று..
ஏக்கமாய் காத்திருக்கேன்..
காய்ந்து உதிருமுன்..
கிட்டுமா உன் பாதம்..
இராணி ஆனாலும்
இன்று என் விதியென்ன..
இதுவரையில் நானறியேன்..
இறங்கி அருளாயோ.
இந்நாள்... பொன்னாளாக..


Result day

சில நினைவுகள்..
கணிணியில்லா..
கடந்த காலம்..

செல்லில்லா.
செய்தித்தாள் காலம்..

மாலை இதழ்கள்..
முடிவேந்தி வரும்..

பரீட்சை எண்கள்..
பக்கம் பூராவும்..

மேலிருந்து கீழா..
வடமிருந்து இடமா..
தேடல்..தேடல்..
ஒரு வழியா கண்டுபிடுச்சு..
'ஒ'..அம்மா நான் பாஸ்ஸாகிட்டேன்..

பச்சை கலர்..
மிட்டாய் வழங்கி...
பெரிசா சாதிச்ச
பெருமிதம்..

பள்ளிக்கு போனாதான்..
வண்டவாளந் தெரியும்..
வாங்கின மதிப்பெண்கள்
வெளியில சொல்ல முடியுமானு..

இறுதித் தேர்வு முடிவுகள்..
அன்றும் ..
tension..
இன்றும்..
tension..

இதில என்கதை..
வேற கதை..
அம்மா..
அரசு அதிகாரி..

நான் நீ என போட்டி..
என் மார்க் முதலில் பார்க்க.
அம்மா கொஞ்சம் senti..
செல்வராஜ் கிட்ட கொடுத்தா..
centum கண்டிப்பா வரும்..
சொல்லவா முடியும்..
எப்படிப் பார்த்தாலும்
எண்பதைத் தாண்டாதுனு..

இப்படியாக..
ஊருக்கு முன்னாடி..
மார்க்கும் தெரிந்து..
மன நிம்மதியும் போயி..
இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்..
இன்னும் கொஞ்சம்..
நன்னா படின்னு...

ஒரு பக்கம்...
அப்பாடா.
மறுபக்கம்..
அப்பப்பா..

போதுண்டா சாமி..
இந்த result ..
படுத்தும் பாடு..??!!!


Thursday, May 12, 2016

தேர்தல்

தேர்தல்..
மன்னாராட்சி மறை'தல்'
மக்களாட்சி உதித்'தல்'...
உரிமை பெறு'தல்'...
உள்ளங்கள் நிறை'தல்'..

ஆனால் இப்போ..!!!

துருவங்கள் இணை'தல்'.
துட்டுக்கு வளை'தல்'..

சட்டங்கள் மீறு'தல்'.
திட்டங்கள் வீசு'தல்'..

சாதிபேரில் சாய்த்'தல்'..
சாமானியன் வீழ்'தல்'..

கட்டுக்கள் கடத்'தல்'..
பெட்டகங்கள் நிறைத்'தல்'..

உண்மை மறைத்'தல்'..
பொய்கள் இறைத்'தல்'..

வீரமாய் பேசு'தல்'..
வரம்பின்றி ஏசு'தல்'..

சீட்டுக்கு மோ'தல்'..
ஓட்டுக்கு அலை'தல்'..

சிங்கம்போல்  சீறு'தல்'
நரிவேடம் போடு'தல்'..

மக்களைப் போற்று'தல்'
மன்னராய் வணங்கு'தல்'..

மனங்களை மாற்று'தல்'..
மாயமாய் மறை'தல்'..

முதுகெலும்பின்றி வளை'தல்'..
சுயமரியாதை தொலைத்'தல்'..

கூழைக் கும்பிடு 'தல்'..
இதுதானா தேர்'தல்'?...

வாக்கு மழை பொழி'தல்'..
வென்றபின் ஓடு'தல்'..

நாடகம் நடித்'தல்'..
நன்றி மறத்'தல்'..

கஷ்டங்கள் சூழு'தல்'..
கனவுகள் கலை'தல்'..

எதிர்ப்பார்ப்புகள் சிதை'தல்'..
ஏமாற்றம் மிகு'தல்'..

தேர்தல் ...
கெடுதலா..????
நம்பிக்கை குறைதலால்..!!!

மக்கள் தேடும் மாறு'தல்'..
தருமா இந்த தேர்தல்..??

Sunday, May 8, 2016

அம்மா..

the first enemy and a first friend  to any girl ..we feel many times that she is  demanding..sometimes dominating..many times dictating...talking discipline..at the same time taking you to shopping s..loading your wardrobes with colors ..never tired of preparing your favourite dishes...even after you become a mother ..she continues with the same trend..teaches you petty things that no school ever can teach..
who else except a mom..
I know you will now be having a good time with your mom dad and leading a tranquil heavenly life..
give me strength amma as always..
I don't miss u..
you are always with me..


இறந்த காலம்...அது
அம்மா இருந்த காலம்..

கார் சத்தம் கேட்குமுன்..
கதவு திறந்து காத்திருப்பாள்..
கைப்பை வைப்பதற்குள்..
கமகம ..காப்பியோடு நிற்பாள்..

அலமாரி ஒழித்து இருக்கும்..
அழகாய் நான் துணி அடுக்க..
காலில் சக்கரம் கட்டி..
கடிகாரத்தோடு..போட்டி
வருகை ப் பதிவில்லா..
வந்து போவோர்கள்
விருந்துககள்..விருந்தோம்பல்கள்..

அது இறந்த காலம்..
அம்மா இருந்த காலம்..

இப்போதும் செல்கிறேன்..
என் அம்மாவே இல்லா..
அம்மா வீட்டுக்கு....

வரவேற்கும்....
வெறிச்சென்ற வாசல்..
வாசமில்லா சமையலறை.
வாடிய பூந்தோட்டம்..
மூலையிலே ..
எஜமானியைத் தேடும்..
எந்திரங்கள் எல்லாம்..
பொங்கிப் போட்ட நாட்கள்
பழஙகதையாய்ப் போச்சு..
பொட்டலத்தில் கட்டிச் சென்ற
பருப்பும் அரிசியும் போட்டு..
பல நாளாய்க் காத்திருக்கும்
பழகிய காக்கைக்கு..படையல்..
அடுக்கிய புடவைகள்..
அம்மாவின் வாசனை..
உன் தகனத்திற்கு பின்..
தகவல் அறிந்தேன்..
தான தருமம்..நீ
தாராளமாய்ச் செய்ததை..
சண்டைகள்..
சமாதானங்கள்..
எங்கே போவாய்..அம்மா..
என்னை விட்டு .
எப்போதும் என்னுள்ளே..
எப்பவும் போல..
என்னை ஆண்டு கொண்டு..

அம்மா..இருந்்த காலம்..
இருக்கும் நினைவில்..என்
உயிருள்ள காலம்..

Wednesday, May 4, 2016

அக்கா..பூ..க்கா..

அக்கா..பூ..க்கா..

அக்கா ...பூ க்கா.
பத்து ரூபாய் முழங்க்கா..
போணி பண்ணுக்கா..
பழுப்பேறிய பள்ளிச் சீருடை
படிந்து வாரிய இரட்டைச் சடை
பள்ளிச் சுமை இறைக்குமுன்..
பூக்கூடை கையி லேற்றம்..
பளீர் பேச்சு..கணீர் குரல்..

பச்சை விளக்கு வருமுன்
பரபர விற்பனை..
பச்சிளங் குழந்தையிடம்
பேரம் செய்யும் பாவங்கள்..
குட்டிக் கை உன்னுது.
கூடக் கொஞ்சம் போடென.
குரூரம் பிடிச்ச நெஞ்சங்கள்..

வாங்கி வந்த பூச்சரம்
வீடெல்லாம் மணக்குது..
கனத்த மனமும் நினைக்குது..
பத்திரமாய் போய் இருப்பாளா..
பாடம் படிக்க நேரமுண்டா..
பழஞ் சோறாவது பாக்கி இருக்குமா..
பகவானே காப்பாற்று..
பாரபட்சம் ஏனுனக்கு..???

( child labour..
common topic  for ages in school projects and group discussions..
..what is achieved ultimately..??
collecting data
copying from Google
print & paste pics
decorating the files..
focus on marks..
discussions on destiny ..
evergreen topic of
never ending sufferings..!!!
child labour..

waiting for a dawn....