Thursday, August 30, 2018

மாகி(மை)

மாகி(மை)
maggiyananda Mayi.என் கடைக்குட்டியின் செல்லப் பேர் ஒரு காலத்தில். A for apple சொல்லும்போது கூட M for maggiனு சொல்வோம் நாங்க.மாகி ban ஆனப்போ ஆடிப்போன குடும்பத்தில் நாங்களும் ஒண்ணு.
மாகி படைத்து விட்டால்
மாமலையும் ஓர் கடுகாய்
மளமளனு வேலை நடக்கும்.
காலம் மாறித்தானே போகும்.

ஏன்னா...இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டோமே.. weight conscious..diet plan..etc..etc..மாகிக்கு வந்தது முதல் வேட்டு.பாக்கெட் பாக்கெட்டா ரொம்பி வழிஞ்சது போய்..
போதும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு மாசத்துக்குனு மனதை அடக்க ஆரம்பிப்பு.
இரண்டு நாள் முன்னாடி ..இருந்த பொட்டலமெல்லாம் காலியாக எங்களுக்குள் நடந்த conversation.
அவள்: அம்மா..மாகி காலி.வாங்கிண்டு வா. ஒரே ஒரு பாக்கெட் போதும்.என்னை tempt பண்ற மாதிரி offer ல கிடச்சுதுனு அள்ளிண்டு வராதே.ஆமாம் சொல்லிட்டேன்.
நான்: அட என செல்லமே மாகியானந்தமயி..உன் சித்தம் என் பாக்கியம்.
பையை தூக்கிண்டு கடைக்கும் போயாச்சு.எல்லா சாமானும் வாங்கினப்பறம் என்னவோ மிஸ் ஆறதேனு மண்டை குடைய..(மைண்ட் வாய்ஸ் இதுக்குத்தான் வயசான காலத்தில லிஸ்ட் எழுதிண்டு வரணுங்கறதுனு என்னை உசுப்பித்து.)
பில் போடும் வேளையில் ..கண்டேன் சீதையை..மாகி ..மாகி..வரிசையா அடுக்கி வைத்தபடி ,என்ன தேடறீங்க அக்கா..என்னைக் கேட்டாள் கடையில் வேலை செய்யும் பெண்.இதே தான் ம்மா..
ஒரு பாக்கெட் கொடு என்றேன். பழக்கப்பட்ட அவள் சொன்னாள்..அக்கா இப்போ ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு சூப்பர் மாகி bowl free க்கா..இந்த offer
இப்பவே முடிஞ்சிடும் . ஒரு இரண்டாவது எடுத்துப் போங்க என்றாள்..ஓசிக்கு ஆசை யாரை விட்டது. very colorful and catchy bowl. வாங்கியாச்சு.
வீட்டுக்கு வந்ததும் மகளைக் கூப்பிட்டு மாகி இந்தாம்மா என்றேன்.
யக்..இது யார் கேட்டா..எனக்கு இந்த flavour பிடிக்காதே..அதைக் கூட பாக்க மாட்டியா.. ஏம்மா free கிடைச்சதால்் என் favourite மறந்து போச்சா ..சரி சரி..போ..adjust பண்ணிக்கறேன் இந்த டைம் என்றாள்.
டீவில  ஓடிக் கொண்டிருந்த ரஜினி பாட்டு..என்
காதில் இப்படி விழுந்தது..

cupக்கும் , glassக்கும், spoonக்கும் ஆசைப்பட்டு..
வாழ்கின்ற வாழ்வுக்கு
என்றைக்கும் அர்த்தமில்ல..
இதைப் புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..?
 culprit நான் தானே?

Wednesday, August 29, 2018

.உன்னை விட

உன்னை விட..

விதையே இருக்காது..
 காயே கனியாய் இனிக்கும்..
நான் வெச்ச கொய்யா மரம்..

இது என் பொண்ணு
நட்ட மாமரம்..
மல்கோவா ...சுவையோ சுவை..
மண்ணு நல்ல மண்ணு இது..

அளவில சிறிசுதானாலும்
அன்னாசிப் பழம்..
அருமையா இருக்கும்..

வாழை இலைக்கு..
வெளியே போறதே இல்லை

இந்த மரக் கிளை இருக்கே
மங்களத்தின் அடையாளம்..

இந்தப் பூச்செடி ..
புது வகையாக்கும்..
பார்க்கவே கொள்ளை அழகு..

பக்கத்து வீடு நல்லவங்க..
பக்கத்துணையா இருப்பாங்க..

சுவற்றில் தொங்கும் படம்..
சின்னப் பைய்யன் வரைஞ்சது..

அணில் புறா மைனா எல்லாம்..
அடிக்கடி வந்து விளையாடும்..

தண்ணீர் வருகை பார்த்து
தவறாமல் மோட்டார் போடணும்..
இந்த குழாய் மட்டும்..
கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..

திருட்டு பயமே இல்லையிங்கே..
தைரியமா இருக்கலாம்..

ராசியான வீடுங்க..
வரிசையாய்..விளக்கங்கள்

வீட்டுச் சாவியை
வீட்டுச் சொந்தக்காரர் கையில்
் கவலையுடன் கொடுத்தபடி.
பல ஆண்டாய்...
குடியிருந்தவர்..

வாங்கிய வீடோ..
வாடகை வீடோ..
வாழ்ந்த விட்டை
விட்டு வரும் வலி..
வலி ....வலி்தான்...

பிடிக்கும்..பிடிக்கும்..

பிடிக்கும்..பிடிக்கும்..

அடித்து அணைத்த அலாரம் பிடிக்கும்
அப்போது காணும் கனா பிடிக்கும்.
சுப்ரபாதம் பிடிக்கும்..பாடும்
சுப்புலக்ஷ்மி அம்மா பிடிக்கும்.
இழுத்துப் போர்த்தி தூங்கப் பிடிக்கும்..அங்கே
இழுக்கும் காபி மணம் பிடிக்கும்

என் வீட்டுத் தோட்டம் பிடிக்கும் ..அங்கே
கூடு கட்டும் குருவி பிடிக்கும்.
கரைந்துண்ணும் காகம் பிடிக்கும்..அங்கே
காத்திருக்கும் அணில் பிடிக்கும்.

கொள்ளை அழகு கனகாம்பரம் பிடிக்கும்...அங்கே
 துரத்தும் பட்டாம்பூச்சி பிடிக்கும்.
பக்கத்து வீட்டு மாங்காய் பிடிக்கும்..அதை
பறித்துத் தரும் பாட்டி பிடிக்கும்.

கொட்டும் மழை பிடிக்கும்..அதில்
குட்டிக் கப்பலோட்டப் பிடிக்கும்.
ஐந்து ஓட்டையிட்ட அடை பிடிக்கும்..அதோடு
ஆனியன் ரவாவும் பிடிக்கும்(திருச்சியில்ல நாங்க)

அரட்டை ரொம்ப பிடிக்கும்..அதோடு
நொறுக்கும் தீனி பிடிக்கும்..

வாழ்க்கை இதை மிகப் பிடிக்கும்..அதில்
வரும் சவால்கள் அதைவிடப் பிடிக்கும்..
என் சிறு உலகம் பிடிக்கும்..அதில்
சிறகடிக்கும் நட்புப் பறவைகள் பிடிக்கும்

பிடிக்குமென்பது பல இருக்கு
பிடிக்காததைப்  பேசியே..
பொழுதும் போகுமிங்கே..
நேர்மறைச் சிந்தனையது
நாளும் வழிகாட்ட
நாமும் வாழ்ந்து காட்டுவோம்..
நமக்குப் பிடித்தபடி
நல்லதை அனுபவித்தபடி..

Thanks Saratha Sanal for your thought provoking post.
And Shiv K Kumar Sir's poetic comments

Sunday, August 26, 2018

Mother theresa

'உதவறேன்னு போய் உதை வாங்கிட்டு வரப்போற..உனக்கென்ன பெரிய மதர் தெரஸானு நினப்பா'..ஆஃபீஸ் தோழிகள் ஒரே இடி இடித்தார்கள்.
மதர் தெரஸா. .அந்தப் பேரைச் சொல்லும்போதே ஒரு சுகம் எப்போதும். எப்படி இப்படி இருக்க ஒருத்தரால் முடியும் ..நாள் பூரா அவர்களைச் சுற்றியது என் எண்ணம்.
வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டு முடித்து
 டீவி ஆன் செய்ய ..மதர் தெரஸா அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்த செய்திகள் வாசிக்கப்பட்ட 1991 ம் ஆண்டின் ஓர் இரவு. ஏதோ ஒரு மன உளைச்சல். அப்படியே தூங்கிட்டேன்.
ஆழ்ந்த உறக்கத்தில..அதோ தெரிந்தது.. ஆஸ்பத்திரி படுக்கையில்  அன்னை தெரஸா..ஈனஸ்வர்த்தில் அருகிலிருந்த சிஸ்டரை கூப்பிடுகிறார்..எனக்கு ஒரு உதவி செய். அதோ அங்கே குரோம்பேட்டை யில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அவளை கல்கத்தாவுக்கு கூட்டி வாருங்கள்..எனக்குப் பிறகு இந்த மக்களுக்கு அவள் சேவை செய்வாள்.டைலாக் முடிவதற்குள் கனவைக் கலைத்தாள் அம்மா..தண்ணி நின்னு போய்டும் ..சீக்கிரம் எழுந்திரு..வேக வேக..மிக வேக வேகமா ஓடி ஓடி .அம்மாக்கு ஒத்தாசைப் பண்ணி..ஓடி ஓடி ஃபுட்போர்டில் பஸ் ஏறி..சிக்னலில் குதிச்சு ஆஃபீஸ் போயாச்சு.தோழிகளைக் கூப்பிட்டு கனவைச் சொன்னேன். ஒரே கிண்டல்..
கேலிதான்.

கனவு மெய்ப்பட வேண்டும்..ஆசை எப்போதும் உண்டு.ஆனால் இந்தக் கனவு மெய்ப்பட மனப்பக்குவம் வேண்டும். மதர் தெரஸா..பேர் சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது இன்றும்.
இன்று அன்னை தெரஸாவின்  பிறந்த் தினமாம். என்னைப் பொறுத்தவரை எந்த இடத்தில்  அன்பும் இரக்கமும்  பிறக்கிறதோ..அந்த க்ஷணத்தில் பிறந்து கொண்டே இருப்பாள் இந்த அன்னை.. என் பிரார்த்தனை இவரிடம் இன்று.
என்னுள்ளும் ஒரு தெரஸா் இருக்கிறாள். அவளை நான் அடிக்கடி தட்டி எழுப்பணும்..முடிந்த வரை நல்லது செய்யணும்..
mother Teresa...

Saturday, August 25, 2018

கண்ணா வருவாயா..2

வெல்ல சீடை..
உப்பு சீடை..
தட்டை..
தேன்குழல்..
அவல் பாயசம்..
வடை..
பால்..பழம்...
தயிர் ..வெண்ணை..
எல்லாம் வெச்சாச்சு..
வாசலில்லேர்ந்து..
உள் வரை..
உன் காலும் போட்டாச்சு..
விளக்கும் ஏற்றி..
ஆயர் பாடி மாளிகையில்..
cassette பூரா பாடியாச்சு..
எப்பவும்..வந்துடுவியே..
இன்னிக்கு எங்கே காணோம் இன்னும்..
பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்க..
என்னனு போய் எட்டிப் பார்த்தேன்..
என்னத்த சொல்ல..
நீயுமா..கண்ணா..இப்படி..
கையில் pizza piece ம்..
வாயில் maggi யும் ரொப்பிண்டு..
ரொம்ப நன்னா இருக்கு..
பேஷ் பேஷ் னு..
இனிமே மெனுவை மாத்துங்கோ..
I need a change ..
சொல்றது நீதானா..
fast food க்கு..
flat ஆகிட்டயா நீயும்..

சந்தோஷத்தில்...
வரும் சந்ததிகள்..
கண்ணா..so sweet..
கொஞ்சலும் ..கூத்தும்..

Happy janmashtami ..

கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா...???

அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவ ஸு்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி ....குடைய நான்..!!!

Happy janmashtami

Friday, August 24, 2018

காலமிது காலமிது

காலமிது..காலமிது..
கண்டுக்காதீங்க அம்மாக்களே
ஆனந்த யாழ்கள்
ஆசை கீதம் பாடட்டும்

மடிக்கப்படாத போர்வை
மின்னும் மடிக்கணினி
மூடாத பேனா
மூடியிழந்த பெர்ஃப்யூம்

விரிக்கப்பட்ட யோகா பாய்
சுருட்டி எறியப்பட்ட் துணி
முறுக்கிக் கிடக்கும் வயர்கள்
காய்ந்து கிடக்கும் கப்புகள்

கண் மை துடைத்த பஞ்சு
காது குடைந்த buds
கழற்றி வைத்த காது வளையம்
கதவோரம் சுற்றும் முடிக்கொத்து
மூக்கொழுகும் ஷாம்ப்பூ
முடியோடு சீப்பு
முடிவே இல்லையா
முடியலையே சுத்தமாக்க..

இடிப்பாரே என்னையும்
வளர்ர்ப்பு இதுவா என்று
வாதமும் ் செய்யவே
வந்தது பதிலுமே..

போட்டது போட்டபடி இருந்தால்
பொங்கும் இன்ப வீடாமதென்றாள்
பொங்கிய பொய்ச் சினமடக்கி
போடா..உன் பேச்சென்றேன்..

போகட்டும் போ..
போய் விடுவாள்
புக்ககம் ஒருநாள்..
பார்த்து வளர்ந்தவள்
பக்குவமாவாள்..
பார் என் வீடிதென்று
பீற்றுவாள் ஓர்நாளும்

அன்னையின் பாடம்
அழியாது என்னாளும்
அந்த நாளுக்காக்வே
அடியேனும் காத்திருக்கேன்..

(டிஸ்கி: 'மகள்களைப் பெற்ற  அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் ..
சுத்தம் சத்தம் போட வேண்டிய விஷய்மல்ல என்று'..(ஆனந்த யாழ் effect)

Sunday, August 19, 2018

My cam

My cam ..
My forever companion..
Through the tiny lens..
learning to look around.
The big beautiful world..

Journeys ..long or short..
With you
Worthy my trips..

கருப்போ..கலரோ..
கதை பல சொல்லும்..

கருப்பா இருந்ததா என் கூந்தல்..
கண்ணாடி போடாம..எப்படி இருந்தேன்..
இன்னும் கொஞ்சம்..கம்மியா makeup
போட்டு இருக்கலாமோ..
கல்யாண ஆல்பம்..கவலை கொள்ளச் செய்யும்..
எத்தனை ஊர்கள்..
எத்தனை வழிகள்..
எத்தனை மனிதர்கள்..
எல்லாவற்றையும்..
எனக்குத் தோணும் போதெல்லாம்..
புரட்டி ப் பார்க்க உதவும்..
புகைப்படங்கள்..
உயிர் கொடுக்கும்....
உன்னத நினவலைக்கு..
என்னோடு..வா வா என்று..
எப்போதுமே சொல்லுவேன்..
கையிலும்..கண்ணிலும் வைத்து
கண்ணுங் கருத்துமாய் காப்பேன்..
Thanks for being with me ..always my dear cam

Friday, August 10, 2018

மூழ்காத ship ..friendship aa

மீள்கள்..மீண்டு வரா நாட்கள்

மூழ்காத ship..ஏ friendship aa..

எத்தன தடவ சொல்றது இந்த ராஜியோட சேர்ந்து மழையில கும்மாளம் அடிக்காதேனு....லொக்கு லொக்குனு இரும்பிண்டு..தொண்டை வலி வந்து அவளா கஷ்டப்படறா..இதே பொழப்பா போச்சு உனக்கு..
அம்மா ,சித்திகளின் திட்டுகளின் மழையில்..
எப்ப போனாலும் அந்த டாக்டர் 50 ரூபாய் வாங்கிண்டு அதே pendits எழுதி கொடுக்கப்போறார்...வீட்டிலிருந்த tablet போட்டுண்டு..school க்கு ஓடி..ஒரு பாவ மூஞ்சி வெச்சுண்டு..friends எல்லாரும்..miss miss இவளுக்கு ரொம்ப தொண்டை வலினு சொல்ல..ஒரு சோக கீதம் தான்..
இப்படியே..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண மாய்..என் தொண்டை அடைபட..ஒரு level க்கு மேல..காலம்பற எழுந்து good morning சொல்லலாம்னா..காத்து மட்டுமே வரும்..எல்லாம் உப்பு தண்ணி போடு கொப்பளிச்சா.. சரியாகிடும்..காப்பி கிடைக்காது.. உப்பு தண்ணி தான்....அம்மா அப்போ..finance officer....எல்லா மெடிகல் காலேஜ் professor paybill table ல வந்து குவியும்.. கண்ணு ..கண்ணுனு..ஒரு கடைநிலை ஊழியர்..பாப்பாவுக்கு எப்பபார்த்தாலும் கஷ்டப்படுதே..இங்கின் இருக்கற நல்ல specialist கிட்ட காட்டலாமேனு வழி சொல்ல..
 ENT department head..தலைமையில் சிகிச்சை ஆரம்பம்..
நீங்க MMC வந்துடுங்கோ ..அங்கே எல்லா check up பண்ணிடலாம்நு சொல்லிட்டு..தலை சொறிந்தவாறே..madam..arrears வரணும்   ..கொஞ்சம் ஹெல்ப் பண்னுங்கோ..
ஐயோ..சாமி..எங்கே வந்து மாட்டிண்டோம்னு நானும் அம்மாவும் விழிக்க..
நான் ENT ward நுழஞ்சதும்...ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்கார வெச்சுடுவா.. திடீர்னு..திபுதிபுனு..ஒரு பத்து பதினஞ்சு வெள்ளை க் கோட்டு போட்டுண்டு students ...எல்லாரும் என்ன சுத்தி நிப்பா..டாக்டர்..வரார்..டாக்டர் வரார்..ஆஜானுபாவான டாக்டர்..என்னோட வாயை ஒரு clip போட்டு திறந்து வெச்சு..இது ஒரு serious case of tonsillitis.. கேள்வி க் கணைகளை தொடுக்க ஆரம்பிப்பார்..நீயெல்லாம் எப்படி முன்னேறப் போற..திட்டு வேற..(வசூல் ராஜா.. அந்த கால ஸ்டைல்)...doctor..doctor..என் வாய் வலிக்கறது....சொல்ல முடியாமல்..திரு திரு முழியில் நான்..என்னைப் பார்த்ததும்..பல்லை நற நறனு கடிச்சு..எனக்கு சாபம் கொடுக்கும்..students .
அந்த நாளும் வந்தது..ஆபரேஷன் தான்..முடிவாச்சு..ராஜீயும் கூட கண்கலங்க...மயக்க மருந்து கொடுத்தாச்சு..உலகம் கொஞ்சம் கொஞ்சமாக..
நழுவியது..எல்லார்க்கும் பத்து நிமிஷத்தில நடக்கற விஷயம்..நமக்கு ஒரு மணி நேரம் ஆச்சு..ரொம்ப சோர்ந்து போன டாக்டர்..'its a medical miracle'...என்னொட தொண்டையிலிருந்த எடுத்த சதை போல..இதுவரை யாருக்குமே..இருந்ததில்லையாம்..
அப்பறம் என்ன..இது வரை ice cream கண்ணால கூட பார்க்கக் கூடாதுநு மெரட்டிய அப்பா...டப்பா டப்பாவா.ice cream வாங்கி வர..ஐயோ...எறியுது எறியுது..ice cream வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்னு..நான் அழ....
சொட்டு தண்ணீர் பட்டாலே சொர்ருனு எறியற தொண்டையில...ஒரு கரண்டி உப்பை போட்டு..மூணு வேளையும்.. கொப்பளிச்சு..எனக்காக வாங்கிண்டு வந்த குலாப் ஜாமுன்..எல்லாரும் ரசிச்சு ருசிக்க...
national channel 1.30 மணி news வாசிக்கறாப்போல..சைகையில் காரியம் நடக்க..
ஒரு பத்து நாள்..பண்டிகை போல எல்லாரும் ஒரே தாங்கல்..
பதினோறாவது நாள்...எப்பவும் போல.. திறந்தா ..காத்து தானே வரப்போறதுனு பழக்க தோஷத்தில் ..நினக்க..ஆஹா..என் குரல் வெளியே வர...
ஓ..என் குரலா....ராஜீ....ராஜீ... மூணாவது மாடியில் குடியிருந்த அவள்..பாரதிராஜா தேவதைகள் style இல் slow motion ல ஓடி வர..
இனிமேல் canteen la ice cream சாப்பிடலாம் ஜாலியா மழையில நனையலாம்..அவள் சொல்ல.
அங்கே வந்து ஆடி மாசம் அம்மன் போல என் சித்தி வந்து பிரசன்னமாக..
எத்தன தடவை சொல்றது..இவ கூட சேராதேனு..அதே பல்லவி..

இன்றுவரை உறுதியாய்..
தொடர்கிறது எங்கள் நட்பு..
Friends for ever

பவழமல்லி

#nammabengaluru_drizzle

பொழிந்த சிறுமழையில்
நனைந்த பவளமல்லிகள்
பார்த்து எடுக்கோணும்..
கோர்த்து மாலையாக்க..

நாட்டு மருந்தாமே
நலமும் தருமாமே
காம்பும் தருமாமே
கலரும் ..டஸ்ஸர் பட்டுக்கு

வீட்டுக்கு வெளியே
விழுமே வழியிலுமே
வருவோர் போவோர்
வசதியாய் வாரிச்செல்ல..

அழகின் இலக்கணமே
அழைப்பாய் வாசமுடனே
அருளும் பெறுவேனே
அவனுக்கு சூட்டியுனையே