Saturday, December 30, 2017

Happy birthday Mythili aunty

Mythili aunty..என்
மனம் கவர்ந்த aunty.

மகளும் பேத்தியும் ..கண்
மணியாம்  இவருக்கு.
மகனாய் ஒரு மருமகன்..
மகிழ்ச்சிக்கு எல்லையில்லை..

புத்தகக் குவியலில்..
புதைந்து கிடப்பார்..
புதுப் புது முத்தெடுத்து
புத்துணர்ச்சி பெறுவார்..

வலை தந்த நட்பிலே..
கவலையும் மறப்பார்..
ஆங்கிலமும் தமிழும்..
அழகாய் விளையாடும்..
அற்புத பதிவரிவர்..
'சரஸ்வதி'கள் துணையிருக்க..
சுலபமாய் வாழ்விப்போது..

இவருக்கு..
அழகான அஸ்தமனம் பிடிக்கும்..
அலைசூழ் கடல் பிடிக்கும்..
வசந்த காலம் பிடிக்கும்..
வானெட்டும் ஹிமாலயம் பிடிக்கும்..

சூடான சமோசா பிடிக்கும்..
சுடச்சுட சாதம் பிடிக்கும்..
சுட்டாலும் பிடிக்காது..கத்திரி..
சும்மாவே சாப்பிடுவார் உருளையை..
நகைச்சுவை பிடிக்கும்..
நேர்மை பிடிக்கும்..
பிடிக்கும்..பிடிக்கும்..
பெரிய பட்டியலுமுண்டு..

பேத்தியின் படங்கள் ..புதுத்
தெம்பு தரும் மருந்தாமே..

நேருவின் எழுத்து எழுச்சியூட்ட..
ஞாயிறாக மாற நாளும் ஆசை..

எழுபத்தைந்து வயதாம்..
எனதருமை auntyக்கு..
என்ன தர என்னிடமிருக்கு..
என் அன்பு ஒன்றைத் தவிர..
ஆரோக்கியமும்..ஆனந்தமும்..
ஆண்டு முழுதும்  உனை ஆள..
அடியேனின் வாழ்த்திதுவே..
அன்பில் தோய்த்த கவியிதுவே..


Mythili aunty..
mind blowing aunty..
bonded with her family..
boundless is her extended family..
family is her treasure..her
extended family gives her pleasure
she is a bookworm..
the warmth she enjoys the most..
Spring..samosa..sunset..savoury..
the S(ess)ence of her life..
 potato and rice..her
forever choice..
 waves of a beach and
wind of the himalayas
wander she wishes..
with a book in hand..
albums of malaikka..
all time her pastime..
humor she likes..
honesty she salutes..
plunging into her bookshelf..
passionate about her writing..
turning seventy five years..
tuning her life day by day..
wishing her  health and happiness..
wonderful years..
with all cheers.
happy birthday aunty..seeking your blessings.Wednesday, December 27, 2017

Happy birthday madhu

Your favourite three P's..
Potato,puliyodare rice and above all...PERFUMES..PERFUMES..
your favourite birthday gift has always been  a perfume bottle.
the curiosity you show to open the gift pack..and smell . ..and jump with joy..

but do you know Madhu Ramasami how much fragrance you brought to our life.
no sentiments...
your smile being your strength ..
Your perseverance paving way for pleasure..
Wishing you a very happy birthday and sending
loads and loads of wishes on your very special day..
Appa..Amma..Aishu.. Appu thatha💐💐💐💐

Friday, December 22, 2017

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு
கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

Thursday, December 21, 2017

கெளரி கல்யாணம் வைபோகமே." .

சிறுகதை
"கெளரி கல்யாணம் வைபோகமே."
.
'சுகன்யா..ரெடியா..நாழியாச்சும்மா.
ப்ளான் பண்ணபடி எல்லாம் எடுத்து வெச்சியா? வாட்சப் க்ரூப்பில எதுக்கும் செக் பண்ணிடு..அப்பறம் அது இல்ல இது இல்லனு சொன்னா கூட அங்கே எதுவும் கிடைக்காது..நாணா அடுக்கிக் கொண்டே போனான். ராதுக் குட்டி தன் பையுடன் ரெடி..அப்பா..அப்பா.. அண்ணா..அக்கா எல்லாரும் வராளாப்பா..ஜாலியா இருக்குப்பா..என்றாள்..
நாணா ஃபோனும் கையுமா..டேய் சுந்து கிளம்பிட்டியா ..map அனுப்பி இருக்கேன் பார் க்ரூப்பில..
அதுக்குள்..மூர்த்தி கிட்டேர்ந்து ஃபோன் வரதுடா..நாம நேரா பேசலாம்..
லலிதா அக்காவையும் அத்திம்பேர் குழந்தைகளை நீ பிக் அப் பண்ணிடுடா..
ராமு  குடும்பம் சுகந்தி கார்ல வந்துடுவா.. பாட்டி, தாத்தா, பெரிம்மாவுக்கு நான் வண்டி அனுப்பிச்சுட்டேன'்..ரெடியான
சுகன்யா கிளம்பலாமானு முறைக்க..ஒரு வழியா கேட் பூட்டி கிளம்பியாச்சு..
வழியெல்லாம் ராஜா ரஹ்மான் துள்ளல் இசையில் பயணம்..
ஹையா..அப்பா resort வந்தாச்சு..ராது குட்டி குதிக்க..அங்கே ஏற்கனெவே சுந்து வந்தாச்சு. ஒவ்வொருவரா வர..பொண்டுகள் எல்லாம் பளபளனு ..புடவை,நகை,சீரியல்..
பேச்சுக்கா பஞ்சம்..
குழந்தைகள்..ஒரு சூப்பர் மழலைப் பட்டாளம்..இங்கேயும் அங்கேயும் ஓடி ஒடி ஆட்டம்..தாத்தாக்கள் ஒரு க்ரூப்..சித்தி,பெரிம்மா அத்தை எல்லாம்
இன்னொரு க்ரூப்..கும்மாளம் தான்..
சிரிப்புதான். குழந்தைகளா எல்லாரும் காலம்பற மூணு மணிக்கு எழுந்துக்கணும் ..போய்த் தூங்குங்கோ..பெருசெல்லாம் மிரட்டிட்டு சீட்டு கச்சேரியில் ..
அலாரம் அடிக்கும் முன்னாடியே கண்ணைக் கசக்கிண்டு ஒவ்வொருத்தரா முழிக்க..பாட்டி சூடாக் காய்ச்சின எண்ணெயும் கையுமா..மணையில் உக்கார வெச்சு..வெத்தலை குடுத்து கெளரிக் கல்யாணம் பாடி எண்ணை வெக்க..சீனு சித்தப்பா பட படனு ஒரு 1000 வாலா கொளுத்த..குளிச்சுட்டு வந்தவாளுக்கு ரெடியா மருந்து..குட்டீஸ் எல்லாம் புதுத் துணி போட்டுண்டு மத்தாப்பு கொளுத்த..டிபன் சாப்பாடு, ஃபோட்டோ என ....சந்தோஷம் பொங்கும் வேளையில் நாணாவுக்கு நாலு வருஷம் முன்னாடி அவன் வீட்டு தீபாவளி க்கு வந்த அத்தை கண் முன்னே வந்தாள்.
'நாணா..பண்டி்கைக்கு தான் எல்லாம் ரெடிமேட் ஆ வாங்கி வெச்சுருக்கே..எனக்கு ஒரே ஒரு ஆசை..
இங்கே இருக்கிற ராமு, சுந்து, மூர்த்தி லலிதா எல்லாரையும் தீபாவளிக்கு கூப்பிடேன் என்றதுதான்.. முதலில் தயங்கி சாக்கு போக்கு சொன்னவர்கள் , அத்தையின் ஆசை என்றதும் ஆமோதித்தார்கள். அன்று ஆரம்பித்தது தான் இந்த family reunion. ஒவ்வொரு வருஷமும் ஒரு ஒரு cousin வீட்டில்..குழந்தைகளுடன்..
அவள் செய்த பெரிய புரட்சி.. எல்லா உறவுகளையும் ஒன்று சேர்த்ததுதான்.. இந்த வருஷம் ஒரு மாறுதலா..
ஏன் resort ல கல்யாணம் தான் பண்ண்னுமா..கங்கா ஸ்னாமும் பண்ணி தீபாவளியும் கொண்டாடலாமே..அதான் இன்னிக்கு ஒண்ணா இங்கே எல்லாரும்..அத்தை நம்மள பார்த்து இப்போ சந்தோஷப்படுவா டா..மூர்த்தி கலங்கினான்...டேய்..FB ல நம்ம ஃபோட்டோ எல்லாம் பாத்துட்டு கலிஃபோர்னியா லேர்ந்து கண்ணன் புலம்பித் தள்றாண்டா..தானும் அடுத்த வருஷம் வருவானாம்..
சந்தோஷத்தில் மிதந்தபடி ..கார்கள் கிளம்பத் தொடங்கின..அவரவர் வீடு நோக்கி.. நெஞ்சு நிறைய ஆனந்தத்துடன்..
பண்டிகை அப்படி கொண்டாடினோம் இப்படிக் கொண்டாடினோம்..இப்போ ஒண்ணுமே இல்ல என்று ஒரு பக்கம் இருக்க..
இப்படி பாலமாய் ஒரு அத்தையோ சித்தியோ..எத்தனை சுகம்
அப்ப்டி யாருமே இல்லாவிட்டால்..நாமே ஏன் செய்யக்கூடாது..
பணம்..பொருள் விட்டுப் போகும் வேகத்தில் உறவுப் பாலம் அமைக்க மறக்கலாமோ..நமக்கு பின் நம் குழந்தைகளும் நாம் பெற்ற இன்பம் பெறட்டுமே..

காய்கறிகள் பிரமாதமா..பரிதாபமா..?

காய்கறிகள் பிரமாதமா..பரிதாபமா..?

பறிச்சு பல நாளாச்சு
பசுமையும் போயாச்சு
பல மைல் கடந்திங்கே
பட்டிணமும் வந்தாச்சு.

நடுங்கும் குளிரினிலே
கிடங்கிலே அடைஞ்சேனே
முடங்கிக் கிடந்தேனே
முறை எப்போ வருமென்று

பொரியலும் கூட்டுமாக
பயன் தரவே பொறந்தேனே
பாதி உயிர் போயாச்சு
மீதியும் போகுமுன்னே
மணப்பேனா சமையலிலே
மனமும் ஏங்குதடா.
மோட்சம் எப்போ எனகென்றே..

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...

வெடித்து வெளியேறிய கடுகு..
வா வேகமா என்றது
வெந்து முடித்த வாழை
வதக்கி எடு என்றது
விசிலடுத்து ஓய்ந்த குக்கர்
வெடிக்கட்டுமா நான் என்றது..
வாசனை போய்விடுமே.
வந்தணை என்றது ரசம்
வத்தல் போட்ட குழம்போ
வாட்டாதே எனை என்றது
வெக்கையில் வெந்த இட்லி
வெளியே விடென விரட்டியது

நிமிஷத்தில் சுடும் மின்சார அடுப்பு
நாலு எரிப்பானுடன் நாகரீக அடுப்பு
நளபாகம் தயாரிக்கும்் நுண்ணலை அடுப்பு
நாலும் இருப்பினும்..நம்மிடமோ 
இரண்டே கைகள்..
இதை எடுப்பதா..அதை எடுப்பதா
இரண்டுங் கெட்டான் நிலமை..
உள்ளம் ஏங்குதே..
உருண்டோடிய நினைவாலே..

ஊதி எறிந்த விறகடுப்பு
ஊற்றி எறிந்த கெரோசின் ஸ்டவ்வு
ஊருக்கே பெரும் படையல் நடப்பு
உண்மையில் தருமே இன்றும் வியப்பு.
கும்பிடு போடச் சொல்லுதே
கூட்டத்துக்கே பசியும் ஆற்றிய
குடும்பத் தலைவிகள் அவர்களுக்கே..

சுமை தாங்கி சாய்ந்தால்...சுமை என்ன ஆகும்?

சுமை தாங்கி சாய்ந்தால்...சுமை என்ன ஆகும்?


அம்மா..hand bag எடுத்துண்டியா..ரொம்ப பவ்யமா கேட்பா பொண்ணு.. வூட்டுக்காரரும் ரொம்பக் கரிசனமா..பையில எல்லாம் எடுத்து வெச்சாச்சா..சாவி ஞாபகமா வெச்சுண்டியா..
ம்ம்ம்ம்..என் பைக்குள் பர்ஸ்,கண்ணாடி டப்பா,சீப்பு,வாஸலின்,விக்ஸ்,அம்ரிதாஞன்,கைக்குட்டை,கார்டுகள்,ஒரு hand towel,zip lock ( கோயில் பிரசாதம் எல்லாம் போட்டுக்க),first aid kit,பாக்கு,சின்ன perfume, ....உஸ் அப்பாடா.பைக்குள்ள் அடுப்பு தவிர எல்லாம்..ஐயோ அப்பறம் என் செல்ல Sony cam. ....
அம்மானு ஒரு அன்பு ஆறாக ஓட அணுசரணையா  கூப்பிட்டாலே.ஏதோ ஆப்புனு அர்த்தமாக்கும்..என்னோட சின்ன மேக் அப் கிட்டும்,லென்ஸ் டப்பா, face tissue மட்டும் வெச்சுடறேன்..என் ஸ்வீட் அம்மானு கன்னத்தை தட்டி என் தலையில் முளகா அரைச்சா..அடுத்து வருவார் ஆத்துக்காரர்..எப்படி இருக்கு இந்த t- shirt. சொல்லிண்டே இருந்தியே போட்டுக்கறதே இல்லையேனு..அதான் போட்டுண்டுட்டேன்..நான் அப்படியே என் கால் தரை விட்டு நழுவ அவரைப் பார்க்க..அதுல பார்..ஒரு பிரச்சனை..pocket ஒண்ணு தான் இருக்கு.இந்த..என் கண்ணாடி டப்பா,mobile charger,power bank,  கொஞ்சம் உன்னோட handbag ல போட்டுடறேன்..சும்மா சும்மா பெரிய பையை தேடிண்டு இருக்க வேண்டாம் இதுக்காக எல்லாம். 
அதுவும் சரிதான்..போடு எல்லாத்தையும் உள்ள..அப்பா அவர் பங்குக்கு அங்கேருந்து..அம்மாடி இந்த பிஸ்கட் பாக்கெட் உன் பைல வெச்சுக்கோ..வயிறு காலியானா..ஏப்பம் வரும்..வேணுங்கும்போது வாங்கிக்கிறேன்..
இப்படியாக..எல்லா பையை விட என் கைப்பை பிணம் கனம் கனக்க ஆரம்பிக்கும்.லேசா சாய ஆரம்பிக்கிற தோள் . வழியில் வரக் கோயிலெல்லாம் வேறெ நிறுத்தி கன்னத்தில் போட்டுண்டு , விபூதி குங்குமம் சந்தனம் மஞ்சள்,பூ,துளஸி,கல்கண்டு...zip lock வாயைப் பொளக்கும். பை நிறை மாச கர்ப்பிணி மாதிரி ஆகும்.
இந்த குப்பைக்கெல்லாம் நடுவில இடுக்குல பர்ஸ் மாட்டிக்கும். டோலுக்கு காசு எடுத்து குடுக்கறதுக்குள்ள ..அப்பாடா..
இதுக்கு நடுவுல..'பச்சை நிறமே பச்சை நிறமேனு என் மொபைல் விடாமல் கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி.. ஃபோன் எடும்மானு எல்லாரும் அல்ற..அதள பாதாளத்திலேர்ந்து உருவி எடுத்து ஆன் செய்ய...திவ்வியமா ஒரு சாமி பாட்டு..இதை ரிங்க் டோனா வெச்சுக்க ஆகும் செலவு பத்தி மூச்சு விடாம பேச..
அப்பாடி..ஒரு வழியா ஹோட்டல் வாசல் வர.கை காலெல்லாம் முறுக்கி மடக்கி எறங்கப் போகும் நேரம்..' கண்ணா..கொஞ்சம் என் hand bag பிடியேனு அடியேன் சொல்ல...கையில் வாங்கினதும் சொன்னாளே ஒரு வார்த்தை..ஒரு வார்த்தை..
அம்மா ...ஒரு அல்றல்..இது hand bag aa..இல்ல உள்ள கல்லு எதாவது  வெச்சிருக்கியானு ஆரம்பிக்க..கூடவே வந்த குடும்பம் மொத்தமும்..என்ன தான் வெச்சிருப்பாளோ இதுல.. வீட்டில எத்தனை விதமான பை..எல்லாமே இப்படித்தான்.. எப்படித்தான் manage பண்றாளோ..
ஆளாளுக்கு அட்வைஸ்  வேற இதுல..
அட..சொகுசு செல்லங்களா..எல்லா பாரத்தையும் என் பையில போட்டுட்டு..
ஃபார்முலாவா பேசறீங்க..
வரேன்..வரேன்..அடுத்த தடவை நானும் sling  bag ஒண்ணு  மட்டும் எடுத்துப்பேன்.. யாருக்கும் அதில் பங்கு கிடையாதுனு மனசுல கறுவிண்டே..
ம்ம்ம்ம்ம்..இருக்கட்டும் பாத்துக்கறேன் உங்களை எல்லாமுனு மங்கம்மா சபதமெடுத்தபடி அடியேன்..
சரி சரி..சீக்கிர ரெடி ஆகிடலாம்.

கொஞ்ச நஞ்சம் இருக்கும் இடத்தை ரொப்ப ஒரு குட்டி ஷாப்பிங் பண்ணனுமே...
காலமிது..காலமிது

காலமிது..காலமிது..
கண்டுக்காதீங்க அம்மாக்களே..


மடிக்கப்படாத போர்வை
மின்னும் மடிக்கணினி
மூடாத பேனா
மூடியிழந்த பெர்ஃப்யூம்

விரிக்கப்பட்ட யோகா பாய்
சுருட்டி எறியப்பட்ட் துணி
முறுக்கிக் கிடக்கும் வயர்கள்
காய்ந்து கிடக்கும் கப்புகள்

கண் மை துடைத்த பஞ்சு
காது குடைந்த buds
கழற்றி வைத்த காது வளையம்
கதவோரம் சுற்றும் முடிக்கொத்து
மூக்கொழுகும் ஷாம்ப்பூ
முடியோடு சீப்பு
முடிவே இல்லையா
முடியலையே சுத்தமாக்க..


இடிப்பாரே என்னையும்
வளர்ர்ப்பு இதுவா என்று
வாதமும் ் செய்யவே
வந்தது பதிலுமே..
போட்டது போட்டபடி இருந்தால்
பொங்கும் இன்ப வீடாமதென்றாள்
பொங்கிய பொய்ச் சினமடக்கி
போடா..உன் பேச்சென்றேன்..

போகட்டும் போ..
போய் விடுவாள் 
புக்ககம் ஒருநாள்..
பார்த்து வளர்ந்தவள்
பக்குவமாவாள்..
பார் என் வீடிதென்று
பீற்றுவாள் ஓர்னாளும்
அன்னையின் பாடம்
அழியாது என்னாளும்
அந்த நாளுக்காக்வே
அடியேனும் காத்திருக்கேன்..
(டிஸ்கி: 'மகள்களைப் பெற்ற  அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் ..
சுத்தம் சத்தம் போட வேண்டிய விஷய்மல்ல என்று'..(ஆனந்த யாழ் effect)

mother tersa

உதவறேன்னு போய் உதை வாங்கிட்டு வரப்போற..உனக்கென்ன பெரிய மதர் தெரஸானு நினப்பா..ஆஃபீஸ் தோழிகள் ஒரே இடி இடித்தார்கள்.
மதர் தெரஸா. .அந்தப் பேரைச் சொல்லும்போதே ஒரு சுகம் எப்போதும். எப்படி இப்படி இருக்க ஒருத்தரால் முடியும் ..நாள் பூரா அவர்களைச் சுற்றியது என் எண்ணம்.
வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டு முடித்து
டீவி ஆன் செய்ய ..மதர் தெரஸா அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்த செய்திகள் வாசிக்கப்பட்ட 1991 ம் ஆண்டின் ஓர் இரவு. ஏதோ ஒரு மன உளைச்சல். அப்படியே தூங்கிட்டேன்.
ஆழ்ந்த உறக்கத்தில..அதோ தெரிந்தது.. ஆஸ்பத்திரி படுக்கையில்  அன்னை தெரஸா..ஈனஸ்வர்த்தில் அருகிலிருந்த சிஸ்டரை கூப்பிடுகிறார்..எனக்கு ஒரு உதவி செய். அதோ அங்கே குரோம்பேட்டை யில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அவளை கல்கத்தாவுக்கு கூட்டி வாருங்கள்..எனக்குப் பிறகு இந்த மக்களுக்கு அவள் சேவை செய்வாள்.டைலாக் முடிவதற்குள் கனவைக் கலைத்தாள் அம்மா..தண்ணி நின்னு போய்டும் ..சீக்கிரம் எழுந்திரு..வேக வேக..மிக வேக வேகமா ஓடி ஓடி .அம்மாக்கு ஒத்தாசைப் பண்ணி..ஓடி ஓடி ஃபுட்போர்டில் பஸ் ஏறி..சிக்னலில் குதிச்சு ஆஃபீஸ் போயாச்சு.தோழிகளைக் கூப்பிட்டு கனவைச் சொன்னேன். ஒரே கிண்டல்..
கேலிதான்.

கனவு மெய்ப்பட வேண்டும்..ஆசை எப்போதும் உண்டு.ஆனால் இந்தக் கனவு மெய்ப்பட மனப்பக்குவம் வேண்டும். மதர் தெரஸா..பேர் சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது இன்றும்.
இன்று அன்னை தெரஸாவின்  பிறந்த் தினமாம். என்னைப் பொறுத்தவரை எந்த இடத்தில்  அன்பும் இரக்கமும்  பிறக்கிறதோ..அந்த க்ஷணத்தில் பிறந்து கொண்டே இருப்பாள் இந்த அன்னை.. என் பிரார்த்தனை இவரிடம் இன்று..என்னுள்ளும் ஒரு தெர்ஸா இருக்கிறாள். அவளை நான் அடிக்கடி தட்டி எழுப்பணும்..முடிந்த வரை நல்லது செய்யணும்..
mother tersa

பிடிக்கும்..பிடிக்கும்

பிடிக்கும்..பிடிக்கும்
அடித்து அணைத்த அலாரம் பிடிக்கும்
அப்போது காணும் கனா பிடிக்கும்.
சுப்ரபாதம் பிடிக்கும்..பாடும்
சுப்புலக்ஷ்மி அம்மா பிடிக்கும்.
இழுத்துப் போர்த்தி தூங்கப் பிடிக்கும்..அங்கே
இழுக்கும் காபி மணம் பிடிக்கும்

என் வீட்டுத் தோட்டம் பிடிக்கும் ..அங்கே
கூடு கட்டும் குருவி பிடிக்கும்.
கரைந்துண்ணும் காகம் பிடிக்கும்..அங்கே
காத்திருக்கும் அணில் பிடிக்கும்.
கொள்ளை அழகு கனகாம்பரம் பிடிக்கும்.அங்கே
துரத்தும் பட்டாம்பூச்சி பிடிக்கும்.
பக்கத்து வீட்டு மாங்காய் பிடிக்கும்..அதை
பறித்துத் தரும் பாட்டி பிடிக்கும்.
கொட்டும் மழை பிடிக்கும்..அதில்
குட்டிக் கப்பலோட்டப் பிடிக்கும்.
ஐந்து ஓட்டையிட்ட அடை பிடுக்கும்..அதோடு
ஆனியன் ரவாவும் பிடிக்கும்(திருச்சியில்ல நாங்க)
அரட்டை ரொம்ப பிடிக்கும்..அதோடு
நொறுக்கும் தீனி பிடிக்கும்..
வாழ்க்கை இதை மிகப் பிடிக்கும்..அதில்
வரும் சவால்கள் அதைவிடப் பிடிக்கும்..
என் சிறு உலகம் பிடிக்கும்..அதில்
சிறகடிக்கும் நட்புப் பறவைகள் பிடிக்கும்

பிடிக்குமென்பது பல இருக்கு
பிடிக்காததைப்  பேசியே..
பொழுதும் போகுமிங்கே..
நேர்மறைச் சிந்தனையது
நாளும் வழிகாட்ட
நாமும் வாழ்ந்து காட்டுவோம்..
நமக்குப் பிடித்தபடி
நல்லதை அனுபவித்தபடி..

அசர வைத்த அட்வகேட்.

அசர வைத்த அட்வகேட்.
எத்தனை சூப்பர் மார்க்கெட் சுத்தி இருந்தாலும் ..எனக்கு அந்த குட்டி ப்ரொவிஷன் கடை போகப் பிடிக்கும். ஒரு smile தந்தபடி என்ன வேணும் madam என்பாள். அங்கே அவளைத் துளைத்த ஒரு குட்டி வால்..சாக்கலேட் கொடு ..பிஸ்கட் கொடு என்று அவளைத் துரத்த... இரும்மா..தொல்லை பண்ணாதே என சுந்தரத் தெலுங்கில் கொஞ்சி கெஞ்சி மிரட்டினாள். இன்னோரு ஓரத்திலிருந்து..' அம்மா ..i am not getting the answer for this sum ' என்று தன் நாலாங் கிளாஸ் புத்தகத்துடன் இன்னோரு பெண் மல்லுக்கு நின்றாள்்.. இப்புடே செப்பு என்றபடி.
customers ஒரு பக்கம்..கண்மணி கள் ஒரு பக்கம். அவளைக் கூப்பிடபடி அவள் better half
'நான் போய் சாமான் எல்லாம் godown லெர்ந்து எடுத்து வரேன்.. தன் ஸ்கூட்டியைக் கிளப்பியபடி. 'ஏமண்டி நாலு  மணிக்கு யோகா கிளாஸ் இருக்கு..அதுக்குள்ள வந்...சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து பறந்து விட்டார் கணவர்.
பம்பரச் சுழற்சியில் எல்லாரையும் கவனித்து அனுப்பினாள். என் லிஸ்ட் கொஞ்சம் பெரிசு. so i was waiting. அப்போ ஒரு பெரியவர் வந்து நின்றார்
என்னைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தார். நானும் ஹலோ என்றேன்.
ship ல் வேலை செய்து ஓய்வு பெற்றவராம். சில ஐட்டம் பேரெல்லாம் சொல்லி அந்தப் பெண்ணிடம் take your time . I will wait என்றார்.
எடைப் போட்டு ஒவ்வொன்றும் எனக்காக pack பண்ணிக் கொண்டிருந்தாள் அந்த தேனீப் பெண்.
பெரியவர் என்னிடம் பேச ஆரம்பித்தார்.
you know something..இந்தப் பெண் இருக்காளே..நான் பார்த்து வள்ர்ந்தவ..
she is an advocate. but see..what is she doing now spoiling her career...!
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அப்படியா..நீங்க....madam..
அதுக்கு மேல என் குரல் வெளியே வரலை.
உடனே என் மனம் so called கவி பாடியது

கேஸ் கட்டு கையில் ஏந்த வேண்டியவள்
face pack அடுக்குகிறாள்
வாதம் செய்ய வேண்டியவள்
பாதாம் விலை சொல்கிறாள்.
கருப்புக் கோட்டில் உலவ வேண்டியவள்..
கல்லாவில் அமர்ந்தபடி இங்கே
தராசு தட்டும் இங்கே கொஞ்சம்
தவிக்குமோ இவளைக் கண்டு..

இப்படி என் மனம் ஓட..
'ஆமாம் மேடம்..குழந்தைகள் பார்த்துக்க ஆளில்லை..ஒரு அசாத்திய நம்பிக்கையுடன் ..yes uncle ..i left my career for my kids. there was a point i had to take a decision. I took this way. no regrets. கண்ணில் ஒளி மின்ன அவள் பேசியது இன்னும் கண்ணில் நிற்கிறது.
இவளின் மகள்களும் வளர்வார்கள்..ஏம்மா..நாங்கதான் இப்போ பெரியவராகிட்டோமே..நீ உன் career ஆரம்பி என்பார்கள்.
அப்போ...தூசி தட்டி எடுக்க நினைத்தாலும்..தங்கி இருக்கே பின்னால் என்று இடிக்கும் அவள் படித்த படிப்பு.
ஒரு நல்ல அட்வகேட்டை இந்தத் துறை இழந்ததென்று புலம்பியபடி  பெரியவர் கிளம்பினார் என்னிடம் விடை பெற்றபடி..
என்னைப் போல் ஒருத்தி..
ஆனால் ..என்னை விட உயர்ந்தவள் இவள். அசராமல் உழைத்துக் கொண்டு.
அடுத்த customer ஐ புன்னகையுடன் வரவேற்றபடி.
சாமான்கள் அள்ளி வந்த கணவனிடம்..
இண்டிக்கு போத்தானு..அன்னம்,புலுசு ,சாரு பெட்டாலி என்றபடி ,குழந்தைகளை கையில் பிடித்து அடுக்களைக்குள் நுழைய விழைந்தாள் அட்வகேட் தோழி.

பெண் சக்தியின் மொத்த உருவமாய் அவள் என் முன். கனவு கலைந்தது..
துவண்டிருக்கலாம்..தூணாய் தோளாய் தூண்டுதலாய் இவள். ஏணிகள் என்றும் ஏறத்தான் உதவும் சாய்ந்து நின்றபடி..பாரம் தாங்கியபடி..

happy teachers day

To all the teachers..
happy teachers day

running to wish a first good morning
always been a pleasure
rushing to carry the notebooks
always been a pride.

reducing your pressure
reminding your potential.
priceless is her commitment
power packed is her compliment

non stop stories of ' my teacher..my teacher..'
noise of 'yes miss .'.echoing in the class.
never prefer to leave her after we pass
nostalgic are those moments passed.

sitting at the back bench was our choice.
shifting us forward does her voice
correcting our papers made us shiver
concerned words of her wiped out our fear.

'good for nothing 'scolded everyone
'good you did ' consolation from her
moulding was  her job
golden are the memories.

years may roll..
but..
cheer you brought
yet so green.

குடும்ப project..

'ஏய் அம்ம்மா'......( என் பெண் அழைக்கவும்..என்னடா இது இந்த அகிலாக்கு வந்த சோதனைனு மைண்ட் வாய்ஸை சொன்னதை தள்ளிட்டு..)
'சொல்லுடா..என்ன வேணும்?'
'எனக்கு நாளைக்கு ஒரு group assessment submit பண்ணனும். இப்போதான் watsapp group ல mam topic post பண்ணியிருக்கா..வேற இன்னிக்கு ஒரு வேலையும் உனக்கு இல்லையே.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும் நீ என்றாள். 
டேய்..group project ல நான் எங்கடா வந்தேனு அலற..
அம்மா..உன்னை விட்டா எனக்கு யாரும்மா இருக்கானு ..ஒரே senti dialogue..
நாமதான் உடனே உருகி ஓடா தேய்வோமே..
புதுத் தெம்போடு..சொல்லுடா..என்ன பண்ண்ணும் ..அவள் லிஸ்ட் ஆரம்பிச்சது..அம்ம்மா..(இப்படி  ஒரு அழுத்தம் கொடுத்தா அந்த அம்மாக்குள்ள ஆயிரம் அர்த்தமாக்கும்).
business studies project...you have to write quotes on stereotypes, self- fulfilling prophecy and perception . we have to be creative. 
கண்ணே இதெல்லாம் நான் படிச்சதே இல்லையேடா..இதுல எப்படி..
அவள் தொடர்ந்த்காள். கூகிள் ப்ண்ணி நான் quotes எடுத்து வெச்சுடறேன் ...ஆமா..chart paper and black sketch இருக்கில்ல வீட்டில..அவள் பேசப் பேச...கண்ணே நீ தான் டா படிக்கிற..இதெல்லாம் என்னக் கேட்டுண்டு..
chill maa..shelf clean பண்றேனு இடத்தை மாத்தி மாத்தி வைக்கிறது நீதானே..நான் என்ன பண்ண..சொல்லிண்டிருக்கும் போதே செல்லில் டொடங் டொடங்னு மெஸேஜ் வந்து விழுந்த வண்ணம் இருக்க..அம்மா..please white chart வாங்கிண்டு வந்துடேன்நு ஒரு அன்புக் கட்டளை வேற.. சரினு பை தூக்கிண்டு கிளம்பியாச்சு.. ஒரு வாயா வார்த்தையா சொல்லிட்டு கிளம்பினேன்.' வேற ஏதாவது ஞாபகம் வந்தா ஃபோன் பண்ணு'
stationery shop ல் chart வாங்கிண்டு இருக்கற நேரம்..புதை குழி (அதான் என் பர்ஸ்ஸில் )இருந்த மொபைல் பாட ஆரம்பிச்சது..அவளே தான்..அம்ம்மா..black sketch ஒண்ணுதான் இருக்கு..50 quotes எழுதணும்.. ஒரு 2 வாங்கிடு..
சரி..சொல்வதற்குள் செல் கட்..
அந்த கடைக்காரந் கிட்டே ஒண்ணே ஒண்ணு கண்ணேகண்ணுனு ஒரு black sketch மட்டும் இருக்க அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன். வாங்கிண்டு வெளியே வரேன்..திருப்பியும் அவளே அழைப்பு.. அம்ம்மா...ஒரு decorative thread ம் வாங்கிடு..சரி..சரி..வாங்கறேன்..வேற எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லு..திருப்பி வரமாட்டேன்..
இப்படியே  வீடு வந்தாச்சு.
நுழைஞ்சதும்...மீண்டும் அதே tone ல் ..அம்ம்ம்மா...எனக்கு ஒரு ஐடியா..
இந்த quotes எல்லாம் palm script மாதிரி பண்ணா ..நல்லா இருக்கும் இல்ல என்றாள். டேய்..ஓலைச் சுவடில business quotes aa.. இதுவும் நன்னா இருக்கே..சரி பண்ணிடு..நான் போய் டின்னர் பண்றேன் என்றேன். 
அம்ம்மா..அம்மா..அப்படியே ஒரு tea decoction போட்டு கொடேன்..சார்ட்ல ஒலைச் சுவடி effect கொடுத்துடலாம் ..ப்ளீஸ் மா..ப்ளீஸ் மா..
டிகாக்‌ஷன் ரெடி ஆச்சு.. ஆற வைச்சு தர..அழகா அவள் brush வெச்சு light ஆ ஒரு எஃபக்ட் கொடுக்க..
இப்போ அடுத்த கட்டம்..கோடு கட்டம் போட்டு ஒரே அளவுக்கு ஓலை வெட்டி..முதுகு லேசா பெண்டாக..போறுமா..நான் போகட்டா..permission கேட்டபடி நான் .
அதுக்குள்ள எங்க போற..அந்த போன வருஷம் பண்ண ப்ராஜக்ட் ல ஒரு மெழுகுவர்த்தி எரிச்சு ஒரு பொசுங்கின effect கொடுத்தோமே..அதை கொஞ்சம் பண்ணித் தாயேன்...ப்ளீஸ் மா..
உருகி ஓடானேன்.. ஒரு  so called chart paper ஓலைச் சுவடி ஓரத்தை பொசுக்கி டிசைன் பண்ணியாச்சு..
இப்போ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து டும் டும் டும் முடிச்சு போட்டு தாலி கட்டணுமே.. விடிய விடிய வேலை செய்யறதப் பார்த்து விசனத்துடன் வந்தார் அப்பா. ..நான் என்ன பண்ணட்டும் சொல்லு ..காத்திருந்த நான்..ஒரே பாய் பாஞ்சு..அப்பா..இதெல்லாம் ஒழுங்கா அடுக்கி கட்டணும்ப்பா..
தலையாட்டிண்டே..பொறுமையா..ஒவ்வொண்ணா ஓட்டை போட்டு..கோர்த்து ஒரு அழகா ஓலைச் சுவடி கட்டு ரெடி.
ஒவ்வொரு quotes ம் ஒரு சின்ன பாடம்.

காசிக்கு போனாலும்.......விடாது என்பது மாதிரி..
காலேஜ் போனாலும் இந்த கோடு கட்டம், project work விடாது போல இருக்கேனு சலிப்பில் ஆரம்பித்த வேலை..
முடிச்சு நிமிரும் போது சந்தோஷம் தந்தது காற்றில் படபடத்த அந்த ஓலைச் சுவடிகள்..
group project ..குடும்ப project..

எங்கே அவள் என்றே மனம்

எங்கே அவள் என்றே மனம்
ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..
ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.
அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.
ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..
school student மாதிரி ஆனா..
சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.
திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அத்கெல்லாம் என்பேன்.
எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..
MND ( motor neuron disease) என்ற எமன்..
வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..
பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.
மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள்..சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..
் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..
இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..
ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..
விடை தெரியல..

பாடும் பறவை..

பாடும் பறவை..

காலை எழுந்ததும்..daily calendar கிழித்தபோது..டாலடித்த மூக்குத்தியுடன்..இழுத்துப் போர்த்திய MS blue கலர் பட்டுப் புடவையில்..இன்னிக்கு எனக்கு பிறந்தநாள் என்றாள்..சுப்புலக்ஷ்மி அம்மா.. happy birthday maa என்றபடி ரீல் கொஞ்சம் பின்னோக்கி சுத்தித்து.

1980s. ரம்மியமான காலம்.. ராஜா சார் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் முழங்கிண்டிருந்த காலம். சினிமாவைப் பார்த்து விட்டு வந்து அதில் வந்த super melodies எப்போ ரேடியோவில வருமுனு காதைத் தீட்டி வெச்சுண்டு இருந்தப்போ..அப்பாகிட்ட ஒரு petition போட்டேன்..ப்ளீஸ்..ப்ளீஸ் ப்பா..ஒரு two in one வாங்கித் தரேளா..
1500 ஆச்சே ம்மா..இப்போ தேவையா நமக்குனு தள்ளிப் போட..சில மாசங்களுக்கு பிறகு ஒரு சுப யோக தினத்தில் BPL two in one ஏக வரவேற்போடு வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தது. போனஸ் அதோட இரண்டு 25 ரூபாய் மதிப்புள்ள empty cassette. எதோ லாட்டரி அடிச்ச சந்தோஷம்.இதுல எப்படியும் ஒரு 35 இல்ல 40 பாட்டு record பண்ணிடலாம். ஒரே குஷி..
அப்பா மூச்சு விடறதே சங்கீதம் தான்..2 cassette MS Amma  வின் சுப்ரபாதமும் பஜ கோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம்
வாங்கிண்டு வந்திருந்தா..் முதல்ல சந்தனம் குங்குமம் வெச்சு..மெதுவா திறந்து முதல் பாட்டு எம் எஸ் அம்மாவோடது தான் ஒலிக்கணும்னு. suprabatham cassette போட்டு திறப்பு விழா..
அதுக்கப்பறம் எல்லா நாளும் அம்மா குரல் கேட்டு தான் விடியல்கள். பஜ கோவிந்தம் cassette ல் ராஜாஜி பேசறதும் ஃபுல்லா மனப்பாடம்.
பாட்டு என்றாலே..பத்தடி ஓடும் நான்..மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாய் ..அவள் இசையை ரசிக்கக் கற்றுக் கொண்டேன்..
super speed ல் ஸ்லோகம் சொல்லும் அம்மாவிடம் கற்றுக்கொள்ள முடியாத ஸ்லோகங்கள்..simple ஆ கத்துக் கொடுத்தது அவள் குரல்..
குறை ஒன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா..என் காலைக் கவலைகள் மறக்கடடித்தது.
ஹனுமன் சாலீசா ..அவள் பாடக் கேட்டபோது பக்தி பெருகியது..
கனகதாரா கற்ற போது கடாக்ஷம் பெருகியது.
மதுராஷ்டகம்..மனதிலே குட்டி கிருஷ்ணனை ஸ்மரனிக்க செய்தது..
அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள் கற்க அவள் எடுத்த முயற்சி வாழ்க்கை பாடமானது..
எதிலும் எங்கும் இறைவனைக் காண வைத்தது அவளின் கருணையும் கம்பீரமும் நிறைந்த குரல்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் ..வேறொருவர் குரலில் கேட்க மனம் ஒப்புவ்தில்லை.
நடுங்கும் ஒரு குளிர் விடியலில் பத்ரி கோயிலில் இவள் ் சுப்ரபாதம் கேட்டபோது...அடைந்த பரவசம்..அப்பப்பா..
பொதிகையில் MS Amma நிகழ்ச்சி வரும்போது ..என் அம்மா உடனே ஃபோன் பண்ணுவாள்..ஏய் பாருடி என்ன கலர் combination பட்டு புடவை..நோட் பண்ணி வெச்சுக்கோ..குமரன்ல அடுத்த தடவை கேக்கணும்..

அந்த வைர மூக்குத்தி..டாலடிக்கறது பாரு..சிலாகிப்பாள்..( அப்பா..உர்ருனு சைடில் முகத்தை திருப்பிப் பார்..பாட்டைக் கேக்காம ..அப்பவும் பட்டுப் புடவையா...கடுப்பாகிடுவார்)

காலம் மாறலாம்..இத அன்புக் காதல் மாறாது அம்மா..
என்னைப் போல கழுதை கூட தைரியமா பாட.. ஸ்லோகம் சொல்லக் கத்துக் கொடுத்த பெரிய வாத்தியாரம்மா நீ..

தீபம் ஆயில் வாங்கும்போது..MS CD இலவசம் ..( அல்ப்பைனு என்னை திட்டறது காதில விழறது..என்ன பண்றது..பொக்கிஷங்கள் எப்படி கிடைச்சாலும் வாங்கி வெச்சுக்கணும்..இன்னும் ஒண்ணு.. இப்பவே YouTube ல MS subbulakshmi நு search பண்ணினா..ஜூனியர் பாடினது தான் வரது....
எதிலும் எங்கும் இருப்பவள்.. பூபாளமாய்..நீலாம்பரியாய்..

ராகமென்ன தாளமென்ன
அறிஞ்சா..நான் படிச்சேன்..

நான் படிச்ச ஞானமெல்லாம்..
யார் கொடுத்தா..
சுப்பு. நீ..தான்..

இசையால் எம்மை அந்த  பிரம்மத்துடன
இணைக்க செய்த உனக்கு..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
அனுப்புகிறேன்..
சொர்க்கம் இன்னும் சிறப்படைந்து இருக்கும்..சுப்பு உன் இசையால்..

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..சாமானெல்லாம் தூங்கிண்டிருந்தது..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க ஆரம்பிச்சுட்டார். டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன் கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..
அந்தக் கோணக் கழுத்தோடயே பால கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.