Thursday, December 21, 2017

mother tersa

உதவறேன்னு போய் உதை வாங்கிட்டு வரப்போற..உனக்கென்ன பெரிய மதர் தெரஸானு நினப்பா..ஆஃபீஸ் தோழிகள் ஒரே இடி இடித்தார்கள்.
மதர் தெரஸா. .அந்தப் பேரைச் சொல்லும்போதே ஒரு சுகம் எப்போதும். எப்படி இப்படி இருக்க ஒருத்தரால் முடியும் ..நாள் பூரா அவர்களைச் சுற்றியது என் எண்ணம்.
வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டு முடித்து
டீவி ஆன் செய்ய ..மதர் தெரஸா அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்த செய்திகள் வாசிக்கப்பட்ட 1991 ம் ஆண்டின் ஓர் இரவு. ஏதோ ஒரு மன உளைச்சல். அப்படியே தூங்கிட்டேன்.
ஆழ்ந்த உறக்கத்தில..அதோ தெரிந்தது.. ஆஸ்பத்திரி படுக்கையில்  அன்னை தெரஸா..ஈனஸ்வர்த்தில் அருகிலிருந்த சிஸ்டரை கூப்பிடுகிறார்..எனக்கு ஒரு உதவி செய். அதோ அங்கே குரோம்பேட்டை யில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அவளை கல்கத்தாவுக்கு கூட்டி வாருங்கள்..எனக்குப் பிறகு இந்த மக்களுக்கு அவள் சேவை செய்வாள்.டைலாக் முடிவதற்குள் கனவைக் கலைத்தாள் அம்மா..தண்ணி நின்னு போய்டும் ..சீக்கிரம் எழுந்திரு..வேக வேக..மிக வேக வேகமா ஓடி ஓடி .அம்மாக்கு ஒத்தாசைப் பண்ணி..ஓடி ஓடி ஃபுட்போர்டில் பஸ் ஏறி..சிக்னலில் குதிச்சு ஆஃபீஸ் போயாச்சு.தோழிகளைக் கூப்பிட்டு கனவைச் சொன்னேன். ஒரே கிண்டல்..
கேலிதான்.

கனவு மெய்ப்பட வேண்டும்..ஆசை எப்போதும் உண்டு.ஆனால் இந்தக் கனவு மெய்ப்பட மனப்பக்குவம் வேண்டும். மதர் தெரஸா..பேர் சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது இன்றும்.
இன்று அன்னை தெரஸாவின்  பிறந்த் தினமாம். என்னைப் பொறுத்தவரை எந்த இடத்தில்  அன்பும் இரக்கமும்  பிறக்கிறதோ..அந்த க்ஷணத்தில் பிறந்து கொண்டே இருப்பாள் இந்த அன்னை.. என் பிரார்த்தனை இவரிடம் இன்று..என்னுள்ளும் ஒரு தெர்ஸா இருக்கிறாள். அவளை நான் அடிக்கடி தட்டி எழுப்பணும்..முடிந்த வரை நல்லது செய்யணும்..
mother tersa

No comments: