Thursday, December 21, 2017

காலமிது..காலமிது

காலமிது..காலமிது..
கண்டுக்காதீங்க அம்மாக்களே..


மடிக்கப்படாத போர்வை
மின்னும் மடிக்கணினி
மூடாத பேனா
மூடியிழந்த பெர்ஃப்யூம்

விரிக்கப்பட்ட யோகா பாய்
சுருட்டி எறியப்பட்ட் துணி
முறுக்கிக் கிடக்கும் வயர்கள்
காய்ந்து கிடக்கும் கப்புகள்

கண் மை துடைத்த பஞ்சு
காது குடைந்த buds
கழற்றி வைத்த காது வளையம்
கதவோரம் சுற்றும் முடிக்கொத்து
மூக்கொழுகும் ஷாம்ப்பூ
முடியோடு சீப்பு
முடிவே இல்லையா
முடியலையே சுத்தமாக்க..


இடிப்பாரே என்னையும்
வளர்ர்ப்பு இதுவா என்று
வாதமும் ் செய்யவே
வந்தது பதிலுமே..
போட்டது போட்டபடி இருந்தால்
பொங்கும் இன்ப வீடாமதென்றாள்
பொங்கிய பொய்ச் சினமடக்கி
போடா..உன் பேச்சென்றேன்..

போகட்டும் போ..
போய் விடுவாள் 
புக்ககம் ஒருநாள்..
பார்த்து வளர்ந்தவள்
பக்குவமாவாள்..
பார் என் வீடிதென்று
பீற்றுவாள் ஓர்னாளும்
அன்னையின் பாடம்
அழியாது என்னாளும்
அந்த நாளுக்காக்வே
அடியேனும் காத்திருக்கேன்..
(டிஸ்கி: 'மகள்களைப் பெற்ற  அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் ..
சுத்தம் சத்தம் போட வேண்டிய விஷய்மல்ல என்று'..(ஆனந்த யாழ் effect)

No comments: