Thursday, December 21, 2017

மாமி சுண்டல்...

மாமி சுண்டல்...

watsappம் , விரலுமா இருக்கும் எனக்கு வந்த சோதனை.  நான் பயணம் செய்த சேலம் பஸ் கரெக்ட் டயத்துக்கு பஸ் ஸ்டாண்டில்  அன்றைக்குனு பார்த்து கரீட்டா நுழைய..முதல் படியில் கால் வைக்கையில் க்லிங்னு என் watsapp msg tone. 'the slots are open என்று க்ரூப்பில் செய்தி .. ஒரு நாளைக்கு 2 slot .ஆஹா..அலை மோதிடுமே கூட்டம் இதுக்கு ..எறங்கி முதல் வேலை புக் பண்ணனும்..இல்லாட்டி இந்த வருஷ சான்ஸ் போயிடும்னு நினைச்சிண்டே
மூன்றாம் படி தாண்டி தரை இறங்கறதுக்குள்ள...எல்லாரும் லபக் லபக்னு புக்கிங்..எல்லா நாளும் ரொம்பிடுத்து..
ஃபுல்லோ ஃபுல்.
என்ன எல்லாரும் ஏதாவது பரீட்சைக்கு புக்கிங்னு நினைக்காதேள்..இது எங்க அபார்ட்மென்ட் நவராத்திரி க்கு லலிதா சஹஸ்ரநாமம் slot. admin க்கு ஒரு அம்மணி அட்வைஸ்..' ஏன் மத்தியானம் ஒரு ஸ்லாட் இருக்கக் கூடாது?..
'உங்கள் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வரப்போகும் என்னை கொஞ்சம் நினச்சு பாருங்க ..இசை (இம்சை) அரசிகளேநு அம்பாள் நினைக்குமுன் அந்த மாபெரும் யோசனை கைவிடப்பட்டது..
எம் எஸ் அம்மா மாதிரி ஆரம்பிச்சு கடைசியில எல் ஆர் ஈ ஸ்டைலனா போயிடும் அப்பறம்..இன்னொரு பெரிய கவலை எல்லா பொண்டுகளுக்கும்..மூணு தரம் மேக்கப் மாத்தணும்..accessories match ஆகணும்..ரிபீட் வரக் கூடாது புடவையில..உலக மகா கவலை இதை வுட வேற என்ன?
சுண்டல் ...அது வேற கிண்டுமே வயத்தை ..no way ..only two தான்.
நம்ம இடத்தை யாரோ புடிச்சுட்டா..போனால் போகட்டும் போடானு பாடிண்டே..நடக்க..
அப்போதான் நினைவுக்கு வந்தது..'ஐயோ..ஐஷூ..இன்னிக்கு மத்தியானம் 12 மணிக்கு பரீட்சைக்கு ஸ்லாட் புக் பண்ணணுமே..பண்ணிட்டியானு கலங்கி ஃபோன் செய்ய..அவள் அசால்ட்டாய் all done maa..
chill என்றாள் எப்போதும் போல.
காலையில் அவளுக்கு slot booking, timing பத்தி எடுத்த கிளாஸ் அப்படியே action replay ஆச்சு..சொல்லிக் கொடுக்கத்தான் தெரியுமோ நமக்கு..செயல்ல காட்டத் தெரியாதோனு ஒரு பக்கம் மனசு ஒரு இடி இடிச்சது..
ஸ்லாட் கிடைக்காட்டி என்ன..நமக்கு சுண்டல் நிச்சயமா உண்டு..
இன்றைய ஸ்பெஷல் என் குஜராத்தி தோழி வீட்டில் சீதாப் பழ பாயசம் (வேலை பின்னி எடுக்கும் இத உரிச்சு பண்றதுக்குள்ள..ஆனா..சுவையோ..தேவாமிர்தம்.. அதுக்கு இணையா..சூப்பர் சுண்டல்..
சொர்க்கமே என்றாலும்..அது பக்கத்து வீட்டு சுண்டல் போலாகுமானு பாடிண்டே இந்த post.
happy navarathri

No comments: