Thursday, December 21, 2017

தேவி நின் பாதம் சரணம்

தேவி நின் பாதம் சரணம்

வரந்தரும் நாயகிகள் வரிசையாய்
வலம் வரும் நாட்களிது..

துக்கங்கள் நீக்கியே வருந்
துன்பங்கள் ஓடிடும் காலமிது..

இருளது   அகலும்  - அன்னை
அருளது கிட்டும் வேளையிது..

சக்திக ளிங்கே  சங்கடந்தீர்க்க
சங்கமிக்கும்   மங்கள நேரமிது..

அன்பைப் பொழியும் அல்லல் நீக்கும்
அவள் பதமலர் போற்றி போற்றி..

கமலத்தில் அமர்ந்த தேவி
கலையும் கல்வியும் அருள்வாளே..

கலைவாணி  கழற்பாதம் தொழ
கருணை மழை பொழிபவளே.

வீணை மீட்டும் வளைக்கரத்தாள்
வினை யாவும் நீக்குவளே..

வெள்ளைத் தாமரையில் வீற்று
அள்ளி அருள் தருபவளே..

வித்தையும்  சித்தியும் வீரமும் வெற்றியும்
நித்தமும் யாம்பெற அருள்வாய் தேவி.
அன்புடன்
அகிலா


பத்துத் தலை ராவணனை
பயங்கர அரக்கன் இவனென்றோம்
பொசுக்கிப் பொடிப் பொடியாக்க
போட்டி போட்டு கூட்டமிட்டோம்.

பதுங்கி நம்முள் ஒளிந்த
பலமுக துர்குண மெல்லாம்
போனால் போகட்டும் போ.
பிறவிக் குணம தென்றோம்..


வெளி் யிருக்கும் அரக்கனை
வெடி வைத்து தகர்த்திடலாம்
வாடை வீசும் மன அழுக்கை
வாசல் தள்ள வழி என்ன?

விஜய தசமி நாளுமிதுவே
விரட்டிடுவோம் வக்ரங்களை..

வெள்ளை எண்ணப் பூக்களால்
வண்ணப் பூமாலை கோர்த்து
 வளைய மிட்டு வரவேற்போம்
வரப் போகும் பொழுதுகளையே..
அன்புடன்
Akila
walking down the memory lane
its always been a pleasure to flip through the pages of your past and walk through the memory lane
those Dehradun days. Aishu and her friend Anmol's creation ..
presenting the  home made Raavan effigy.
the preparation would start from the time the holidays start and ends with bursting with crackers and distributing chocolates shouting in joy..'shree ramchandra bhagwan ki  jai'.
(its a tradition there and please friends don't get confused with the values we teach to kids.)

chart ல் வரைந்தோமே
சட்டை பாவடையில்
சாந்தமாய் ராவணன்..
சாகப் போகும் சோகத்தில்
சுரத்தில்லா இராவணன்..
சுள்ளியெல்லாம் சேர்த்தாச்சு
சர வெடியும் வெச்சாச்சு
சுத்து வட்டாரம் வந்தாச்சு
சரியா மணி ஆறாச்சு
சரக்கென்ற நெருப்புக்குச்சி
சுடராய் எரிய
சுட்டெரித்தனர் அங்கே
சூரனின் கொடும்பாவி..
சந்தோஷமாய் வினியோகம்
சக்கரையும் சாக்கலேட்டும் ..

விளையாட்டாய்ச் செய்தாலும்..
வெந்தெறிந்த கொடும்பாவி
விளக்கிடுமே ஒர் நாள்
வெல்வது என்றும் நல்லதுவே

வெளி் யிருக்கும் அரக்கனை
வெடி வைத்து தகர்த்திடலாம்
வாடை வீசும் மன அழுக்கை
வாசல் தள்ள வழி என்ன?
வருகின்ற சந்ததிக்கு
விளக்கணுமே தெளிவாக..

விஜய தசமி நாளுமிதுவே
விரட்டிடுவோம் வக்ரங்களை..

வெள்ளை எண்ணப் பூக்களால்
வண்ணப் பூமாலை கோர்த்து
 வளைய மிட்டு வரவேற்போம்
வரப் போகும் பொழுதுகளையே..



No comments: