Thursday, December 21, 2017

பாடும் பறவை..

பாடும் பறவை..

காலை எழுந்ததும்..daily calendar கிழித்தபோது..டாலடித்த மூக்குத்தியுடன்..இழுத்துப் போர்த்திய MS blue கலர் பட்டுப் புடவையில்..இன்னிக்கு எனக்கு பிறந்தநாள் என்றாள்..சுப்புலக்ஷ்மி அம்மா.. happy birthday maa என்றபடி ரீல் கொஞ்சம் பின்னோக்கி சுத்தித்து.

1980s. ரம்மியமான காலம்.. ராஜா சார் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் முழங்கிண்டிருந்த காலம். சினிமாவைப் பார்த்து விட்டு வந்து அதில் வந்த super melodies எப்போ ரேடியோவில வருமுனு காதைத் தீட்டி வெச்சுண்டு இருந்தப்போ..அப்பாகிட்ட ஒரு petition போட்டேன்..ப்ளீஸ்..ப்ளீஸ் ப்பா..ஒரு two in one வாங்கித் தரேளா..
1500 ஆச்சே ம்மா..இப்போ தேவையா நமக்குனு தள்ளிப் போட..சில மாசங்களுக்கு பிறகு ஒரு சுப யோக தினத்தில் BPL two in one ஏக வரவேற்போடு வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தது. போனஸ் அதோட இரண்டு 25 ரூபாய் மதிப்புள்ள empty cassette. எதோ லாட்டரி அடிச்ச சந்தோஷம்.இதுல எப்படியும் ஒரு 35 இல்ல 40 பாட்டு record பண்ணிடலாம். ஒரே குஷி..
அப்பா மூச்சு விடறதே சங்கீதம் தான்..2 cassette MS Amma  வின் சுப்ரபாதமும் பஜ கோவிந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம்
வாங்கிண்டு வந்திருந்தா..் முதல்ல சந்தனம் குங்குமம் வெச்சு..மெதுவா திறந்து முதல் பாட்டு எம் எஸ் அம்மாவோடது தான் ஒலிக்கணும்னு. suprabatham cassette போட்டு திறப்பு விழா..
அதுக்கப்பறம் எல்லா நாளும் அம்மா குரல் கேட்டு தான் விடியல்கள். பஜ கோவிந்தம் cassette ல் ராஜாஜி பேசறதும் ஃபுல்லா மனப்பாடம்.
பாட்டு என்றாலே..பத்தடி ஓடும் நான்..மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாய் ..அவள் இசையை ரசிக்கக் கற்றுக் கொண்டேன்..
super speed ல் ஸ்லோகம் சொல்லும் அம்மாவிடம் கற்றுக்கொள்ள முடியாத ஸ்லோகங்கள்..simple ஆ கத்துக் கொடுத்தது அவள் குரல்..
குறை ஒன்றுமில்லை..மறை மூர்த்தி கண்ணா..என் காலைக் கவலைகள் மறக்கடடித்தது.
ஹனுமன் சாலீசா ..அவள் பாடக் கேட்டபோது பக்தி பெருகியது..
கனகதாரா கற்ற போது கடாக்ஷம் பெருகியது.
மதுராஷ்டகம்..மனதிலே குட்டி கிருஷ்ணனை ஸ்மரனிக்க செய்தது..
அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள் கற்க அவள் எடுத்த முயற்சி வாழ்க்கை பாடமானது..
எதிலும் எங்கும் இறைவனைக் காண வைத்தது அவளின் கருணையும் கம்பீரமும் நிறைந்த குரல்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் ..வேறொருவர் குரலில் கேட்க மனம் ஒப்புவ்தில்லை.
நடுங்கும் ஒரு குளிர் விடியலில் பத்ரி கோயிலில் இவள் ் சுப்ரபாதம் கேட்டபோது...அடைந்த பரவசம்..அப்பப்பா..
பொதிகையில் MS Amma நிகழ்ச்சி வரும்போது ..என் அம்மா உடனே ஃபோன் பண்ணுவாள்..ஏய் பாருடி என்ன கலர் combination பட்டு புடவை..நோட் பண்ணி வெச்சுக்கோ..குமரன்ல அடுத்த தடவை கேக்கணும்..

அந்த வைர மூக்குத்தி..டாலடிக்கறது பாரு..சிலாகிப்பாள்..( அப்பா..உர்ருனு சைடில் முகத்தை திருப்பிப் பார்..பாட்டைக் கேக்காம ..அப்பவும் பட்டுப் புடவையா...கடுப்பாகிடுவார்)

காலம் மாறலாம்..இத அன்புக் காதல் மாறாது அம்மா..
என்னைப் போல கழுதை கூட தைரியமா பாட.. ஸ்லோகம் சொல்லக் கத்துக் கொடுத்த பெரிய வாத்தியாரம்மா நீ..

தீபம் ஆயில் வாங்கும்போது..MS CD இலவசம் ..( அல்ப்பைனு என்னை திட்டறது காதில விழறது..என்ன பண்றது..பொக்கிஷங்கள் எப்படி கிடைச்சாலும் வாங்கி வெச்சுக்கணும்..இன்னும் ஒண்ணு.. இப்பவே YouTube ல MS subbulakshmi நு search பண்ணினா..ஜூனியர் பாடினது தான் வரது....
எதிலும் எங்கும் இருப்பவள்.. பூபாளமாய்..நீலாம்பரியாய்..

ராகமென்ன தாளமென்ன
அறிஞ்சா..நான் படிச்சேன்..

நான் படிச்ச ஞானமெல்லாம்..
யார் கொடுத்தா..
சுப்பு. நீ..தான்..

இசையால் எம்மை அந்த  பிரம்மத்துடன
இணைக்க செய்த உனக்கு..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
அனுப்புகிறேன்..
சொர்க்கம் இன்னும் சிறப்படைந்து இருக்கும்..சுப்பு உன் இசையால்..

No comments: