Thursday, December 21, 2017

அசர வைத்த அட்வகேட்.

அசர வைத்த அட்வகேட்.
எத்தனை சூப்பர் மார்க்கெட் சுத்தி இருந்தாலும் ..எனக்கு அந்த குட்டி ப்ரொவிஷன் கடை போகப் பிடிக்கும். ஒரு smile தந்தபடி என்ன வேணும் madam என்பாள். அங்கே அவளைத் துளைத்த ஒரு குட்டி வால்..சாக்கலேட் கொடு ..பிஸ்கட் கொடு என்று அவளைத் துரத்த... இரும்மா..தொல்லை பண்ணாதே என சுந்தரத் தெலுங்கில் கொஞ்சி கெஞ்சி மிரட்டினாள். இன்னோரு ஓரத்திலிருந்து..' அம்மா ..i am not getting the answer for this sum ' என்று தன் நாலாங் கிளாஸ் புத்தகத்துடன் இன்னோரு பெண் மல்லுக்கு நின்றாள்்.. இப்புடே செப்பு என்றபடி.
customers ஒரு பக்கம்..கண்மணி கள் ஒரு பக்கம். அவளைக் கூப்பிடபடி அவள் better half
'நான் போய் சாமான் எல்லாம் godown லெர்ந்து எடுத்து வரேன்.. தன் ஸ்கூட்டியைக் கிளப்பியபடி. 'ஏமண்டி நாலு  மணிக்கு யோகா கிளாஸ் இருக்கு..அதுக்குள்ள வந்...சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்து பறந்து விட்டார் கணவர்.
பம்பரச் சுழற்சியில் எல்லாரையும் கவனித்து அனுப்பினாள். என் லிஸ்ட் கொஞ்சம் பெரிசு. so i was waiting. அப்போ ஒரு பெரியவர் வந்து நின்றார்
என்னைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தார். நானும் ஹலோ என்றேன்.
ship ல் வேலை செய்து ஓய்வு பெற்றவராம். சில ஐட்டம் பேரெல்லாம் சொல்லி அந்தப் பெண்ணிடம் take your time . I will wait என்றார்.
எடைப் போட்டு ஒவ்வொன்றும் எனக்காக pack பண்ணிக் கொண்டிருந்தாள் அந்த தேனீப் பெண்.
பெரியவர் என்னிடம் பேச ஆரம்பித்தார்.
you know something..இந்தப் பெண் இருக்காளே..நான் பார்த்து வள்ர்ந்தவ..
she is an advocate. but see..what is she doing now spoiling her career...!
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அப்படியா..நீங்க....madam..
அதுக்கு மேல என் குரல் வெளியே வரலை.
உடனே என் மனம் so called கவி பாடியது

கேஸ் கட்டு கையில் ஏந்த வேண்டியவள்
face pack அடுக்குகிறாள்
வாதம் செய்ய வேண்டியவள்
பாதாம் விலை சொல்கிறாள்.
கருப்புக் கோட்டில் உலவ வேண்டியவள்..
கல்லாவில் அமர்ந்தபடி இங்கே
தராசு தட்டும் இங்கே கொஞ்சம்
தவிக்குமோ இவளைக் கண்டு..

இப்படி என் மனம் ஓட..
'ஆமாம் மேடம்..குழந்தைகள் பார்த்துக்க ஆளில்லை..ஒரு அசாத்திய நம்பிக்கையுடன் ..yes uncle ..i left my career for my kids. there was a point i had to take a decision. I took this way. no regrets. கண்ணில் ஒளி மின்ன அவள் பேசியது இன்னும் கண்ணில் நிற்கிறது.
இவளின் மகள்களும் வளர்வார்கள்..ஏம்மா..நாங்கதான் இப்போ பெரியவராகிட்டோமே..நீ உன் career ஆரம்பி என்பார்கள்.
அப்போ...தூசி தட்டி எடுக்க நினைத்தாலும்..தங்கி இருக்கே பின்னால் என்று இடிக்கும் அவள் படித்த படிப்பு.
ஒரு நல்ல அட்வகேட்டை இந்தத் துறை இழந்ததென்று புலம்பியபடி  பெரியவர் கிளம்பினார் என்னிடம் விடை பெற்றபடி..
என்னைப் போல் ஒருத்தி..
ஆனால் ..என்னை விட உயர்ந்தவள் இவள். அசராமல் உழைத்துக் கொண்டு.
அடுத்த customer ஐ புன்னகையுடன் வரவேற்றபடி.
சாமான்கள் அள்ளி வந்த கணவனிடம்..
இண்டிக்கு போத்தானு..அன்னம்,புலுசு ,சாரு பெட்டாலி என்றபடி ,குழந்தைகளை கையில் பிடித்து அடுக்களைக்குள் நுழைய விழைந்தாள் அட்வகேட் தோழி.

பெண் சக்தியின் மொத்த உருவமாய் அவள் என் முன். கனவு கலைந்தது..
துவண்டிருக்கலாம்..தூணாய் தோளாய் தூண்டுதலாய் இவள். ஏணிகள் என்றும் ஏறத்தான் உதவும் சாய்ந்து நின்றபடி..பாரம் தாங்கியபடி..

No comments: