Thursday, December 21, 2017

கெளரி கல்யாணம் வைபோகமே." .

சிறுகதை
"கெளரி கல்யாணம் வைபோகமே."
.
'சுகன்யா..ரெடியா..நாழியாச்சும்மா.
ப்ளான் பண்ணபடி எல்லாம் எடுத்து வெச்சியா? வாட்சப் க்ரூப்பில எதுக்கும் செக் பண்ணிடு..அப்பறம் அது இல்ல இது இல்லனு சொன்னா கூட அங்கே எதுவும் கிடைக்காது..நாணா அடுக்கிக் கொண்டே போனான். ராதுக் குட்டி தன் பையுடன் ரெடி..அப்பா..அப்பா.. அண்ணா..அக்கா எல்லாரும் வராளாப்பா..ஜாலியா இருக்குப்பா..என்றாள்..
நாணா ஃபோனும் கையுமா..டேய் சுந்து கிளம்பிட்டியா ..map அனுப்பி இருக்கேன் பார் க்ரூப்பில..
அதுக்குள்..மூர்த்தி கிட்டேர்ந்து ஃபோன் வரதுடா..நாம நேரா பேசலாம்..
லலிதா அக்காவையும் அத்திம்பேர் குழந்தைகளை நீ பிக் அப் பண்ணிடுடா..
ராமு  குடும்பம் சுகந்தி கார்ல வந்துடுவா.. பாட்டி, தாத்தா, பெரிம்மாவுக்கு நான் வண்டி அனுப்பிச்சுட்டேன'்..ரெடியான
சுகன்யா கிளம்பலாமானு முறைக்க..ஒரு வழியா கேட் பூட்டி கிளம்பியாச்சு..
வழியெல்லாம் ராஜா ரஹ்மான் துள்ளல் இசையில் பயணம்..
ஹையா..அப்பா resort வந்தாச்சு..ராது குட்டி குதிக்க..அங்கே ஏற்கனெவே சுந்து வந்தாச்சு. ஒவ்வொருவரா வர..பொண்டுகள் எல்லாம் பளபளனு ..புடவை,நகை,சீரியல்..
பேச்சுக்கா பஞ்சம்..
குழந்தைகள்..ஒரு சூப்பர் மழலைப் பட்டாளம்..இங்கேயும் அங்கேயும் ஓடி ஒடி ஆட்டம்..தாத்தாக்கள் ஒரு க்ரூப்..சித்தி,பெரிம்மா அத்தை எல்லாம்
இன்னொரு க்ரூப்..கும்மாளம் தான்..
சிரிப்புதான். குழந்தைகளா எல்லாரும் காலம்பற மூணு மணிக்கு எழுந்துக்கணும் ..போய்த் தூங்குங்கோ..பெருசெல்லாம் மிரட்டிட்டு சீட்டு கச்சேரியில் ..
அலாரம் அடிக்கும் முன்னாடியே கண்ணைக் கசக்கிண்டு ஒவ்வொருத்தரா முழிக்க..பாட்டி சூடாக் காய்ச்சின எண்ணெயும் கையுமா..மணையில் உக்கார வெச்சு..வெத்தலை குடுத்து கெளரிக் கல்யாணம் பாடி எண்ணை வெக்க..சீனு சித்தப்பா பட படனு ஒரு 1000 வாலா கொளுத்த..குளிச்சுட்டு வந்தவாளுக்கு ரெடியா மருந்து..குட்டீஸ் எல்லாம் புதுத் துணி போட்டுண்டு மத்தாப்பு கொளுத்த..டிபன் சாப்பாடு, ஃபோட்டோ என ....சந்தோஷம் பொங்கும் வேளையில் நாணாவுக்கு நாலு வருஷம் முன்னாடி அவன் வீட்டு தீபாவளி க்கு வந்த அத்தை கண் முன்னே வந்தாள்.
'நாணா..பண்டி்கைக்கு தான் எல்லாம் ரெடிமேட் ஆ வாங்கி வெச்சுருக்கே..எனக்கு ஒரே ஒரு ஆசை..
இங்கே இருக்கிற ராமு, சுந்து, மூர்த்தி லலிதா எல்லாரையும் தீபாவளிக்கு கூப்பிடேன் என்றதுதான்.. முதலில் தயங்கி சாக்கு போக்கு சொன்னவர்கள் , அத்தையின் ஆசை என்றதும் ஆமோதித்தார்கள். அன்று ஆரம்பித்தது தான் இந்த family reunion. ஒவ்வொரு வருஷமும் ஒரு ஒரு cousin வீட்டில்..குழந்தைகளுடன்..
அவள் செய்த பெரிய புரட்சி.. எல்லா உறவுகளையும் ஒன்று சேர்த்ததுதான்.. இந்த வருஷம் ஒரு மாறுதலா..
ஏன் resort ல கல்யாணம் தான் பண்ண்னுமா..கங்கா ஸ்னாமும் பண்ணி தீபாவளியும் கொண்டாடலாமே..அதான் இன்னிக்கு ஒண்ணா இங்கே எல்லாரும்..அத்தை நம்மள பார்த்து இப்போ சந்தோஷப்படுவா டா..மூர்த்தி கலங்கினான்...டேய்..FB ல நம்ம ஃபோட்டோ எல்லாம் பாத்துட்டு கலிஃபோர்னியா லேர்ந்து கண்ணன் புலம்பித் தள்றாண்டா..தானும் அடுத்த வருஷம் வருவானாம்..
சந்தோஷத்தில் மிதந்தபடி ..கார்கள் கிளம்பத் தொடங்கின..அவரவர் வீடு நோக்கி.. நெஞ்சு நிறைய ஆனந்தத்துடன்..
பண்டிகை அப்படி கொண்டாடினோம் இப்படிக் கொண்டாடினோம்..இப்போ ஒண்ணுமே இல்ல என்று ஒரு பக்கம் இருக்க..
இப்படி பாலமாய் ஒரு அத்தையோ சித்தியோ..எத்தனை சுகம்
அப்ப்டி யாருமே இல்லாவிட்டால்..நாமே ஏன் செய்யக்கூடாது..
பணம்..பொருள் விட்டுப் போகும் வேகத்தில் உறவுப் பாலம் அமைக்க மறக்கலாமோ..நமக்கு பின் நம் குழந்தைகளும் நாம் பெற்ற இன்பம் பெறட்டுமே..

No comments: