அழகு நிலையம்..
புருவம்
வில்லாய் வளைந்தது
பருவும்
பதமாய் உதிர்ந்தது..
முடி முகமூடி* போட்டது ..
படிந்த
அழுக்கு போனது..
நகம் நளினம் ஆனது
முகம் முழுதாய் மலர்ந்தது..
தேவதை ஆனார்கள்...
தேடிப்
போனோர் எல்லாம்..
ரசாயனதுக்கு
ஒரு விலை
*கரிம சேர்மானமோ* கொள்ளை..
கூட்டம்
அலை மோதுதப்பா..
கூட்ட புற அழகை..
நாட்டு
மருந்து மறந்தோமே
பாட்டி
வைத்தியம் இழந்தோமே..
இப்படி
சாடிப் பாடினாலும்
அப்பாடானு
இருக்கு..
ஆனந்த தூக்கம் சொக்குது
அன்பாய்
தலை வருடையிலே..
ஆர்வமாய்
அழகு செய்கையிலே..
ஆர அமர ஓரிடம்
ஆஹா..இந்த இடம் தானோ..
* முகமூடி.-hair
dye
*கரிம சேர்மானம் -organic

No comments:
Post a Comment