Saturday, August 7, 2021

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..?

 என்னை விட்டு ஓடிப் போக முடியுமா..?


வரட்டும் இன்னிக்கு இந்த லக்ஷ்மி..நாலு வார்த்தை நறுக்குனு கேட்கணும்..கீழ் வீட்டு ஆண்ட்டியின் ஃபோன் வந்ததிலிருந்தே படு டென்ஸனாகிட்டேன்..

கதைக்கு வருவோம்..

intercom ஒலித்தது..மறு முனையில் கீழ் வீட்டு ஆண்ட்டி. குசலமெல்லாம் விசாரிச்சுட்டு மெதுவா இழுத்தா..அகிலா ஒண்ணு கேட்கணும் உன்கிட்ட..உங்க வீட்ல வேலை செய்யற லக்ஷ்மி எனக்கும் செய்ய ஆரம்பிச்சு எட்டே நாள் தான் ஆறது . ஆனா..மூவாயிரம் advance கேட்கிறா..எங்காத்து மாமா அதெல்லாம் தர மாட்டார்னு கட் அண்ட் ரைட்டா சொன்னேன். கேக்க மாட்டேங்கிறா..நீ அவளுக்கு நிறைய அட்வான்ஸ் கொடுப்பியாமே..இந்தக் காலத்தில இவாளையெல்லாம் நம்பலாமோ என்றாள். நான் சொன்னேன் ' ஆமாம்..அவ என்ன கம்பெனிலியா வேலை செய்யறா..educational loan, housing loan, medical reimbursement னு்கிடைக்க..அவ பைய்யனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட உதவுவேன். போன மாசம் அவ பெரிய பையனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை..உடனே கொடுத்தேன்..உயிருக்கே ஆபத்துனு சொல்றப்போ உதவலனா எப்படினேன்..

அப்போ ஒழுங்கா அட்வான்ஸ் கழிப்பாளோனோ..சரி என்ன பண்றது..கொடுத்துத்தான் ஆகணும்..இப்போ இங்கே சரியா ஆளே அமைய மாட்டேங்கிறா.இவ கொஞ்சம் நம்ம டயத்துக்கு வரா..நான் உங்கிட்ட கேட்டேனு அவ கிட்ட சொல்லாதே..எங்கியாவது நின்னுடப் போறா என்றபடி இணைப்பு துண்டித்தார்.

இப்போ ஒரு வாரமா தான் என் உடன்பிறவா வலக்கரம் கீழ் வீட்டுக்கும் வேலை செய்ய ஆரம்பிச்சிருந்தா. எனக்கு என்ன கோவம்னா..எதுக்கு நான் தரதை போய்ச் சொல்லி வாங்கணுங்கறதுதான்..

ஆடி ஆடி வந்தவளிடம் கேட்டேன்..' எதுக்கு ஒரு வாரத்துக்குள்ள இப்படி அட்வான்ஸ் கேட்டே ..(நம்ம வாய் தான் சும்மா இருக்காதே!) 

அவள் சொன்ன பதில் ..அப்படியே அடங்்கிட்டேன்..

madam..அவங்க வீட்டு பழைய வேலை செஞ்ச அம்மா இப்போ திரும்பி வரணும்னு try பண்றா.. எனக்கு ஒரு பிடிப்பு வேண்டாமா..அந்தம்மா திருப்பி கூப்பிட்டு என்னை போனு சொல்லிட்டா..அதான் முன் ஜாக்கிரதையா மூவாயிரம் கேட்டேன். மூணு மாசத்தில் கழிச்சுக்க சொல்லிட்டேன்..என்னை வேலைய விட்டு எடுக்க முடியாதில்ல..அதான் madam. போட்டாளே ஒரு போடு..

மாமியின் கணக்கு அங்கே..maid கணக்கு இங்கே..

Who is the management guru?

No comments: