Monday, January 24, 2022

காணி நிலம் வேண்டும்..

 #பாரதி_நினைவுநாள்_கவிதை.


காணி நிலம் வேண்டும்..


பாரதியே உன் பாணியே தனி..

பரந்து விரிந்த சிந்தனை.. உன்

பாட்டிலெ ல்லாம் கண்டேன்..

பரவசம் மிகக் கொண்டேன் .


காணி ..என்ன அது?

கணக்கு.. நான் போட

கை விரல் வலித்தது..தலை

கிறுகிறு வென்று சுற்றியது..


பஞ்சம் தலை விரித்தாடினாலும்....உன்

பாட்டால் நெஞ்சம் நிறைந்திடுமே..

பட்டா இல்லை..சிட்டா இல்லை..

பாட்டில் சொல்லி விட்டாய்..மிகச்

சுலபமாக..

காணி நிலம் வேண்டுமென்று..


காணி நிலம் வாங்க..

கோடிகள் வேண்டுமிங்கே..மனக்

கோட்டை யொன்று கட்டினேன்..

குடி புகவும் ஆசைக் கொண்டேன்..


மனைகள் பல அங்கிருக்க..இந்திய

மாநிலத்தவ ரெல்லாம்  குடியிருக்க..

மினி இந்தியா ஒன்று உருவாக்குவேன்..

மதம் மொழி இனமென்ற...

'மத'ங்க ளில்லா மனங்களுடனே..


பாரதிக்கும் ஆசை வரும்..

பார்த்து வரட்டுமா ஒருமுறை என்று..

பரமனிடம் கேட்பான்..

பரவசத்தில் திளைப்பான்..


கனவு மெய்ப்பட்ட தென்று..

கண்ணீர் ஆனந்தமாய் வழிய..

கவலை இனி எனக்கில்லை..

களிப்பில் ஆடுவான்..பாடுவான்..


கலையுமே என் கனவும்...

காணியு மில்லை ..அங்கே

காண வந்த பாரதியுமில்லை .

கண்கலங்கி நின்றேன்..

கைவிட்டதே.. கனவும் கூட என்னை என்று..

No comments: