Monday, January 24, 2022

அப்பா

 #ஸண்டே_ஸ்பெஷல்..

எனக்கு...

இரண்டு அப்பாங்க..என்ன ஷாக் ஆகிட்டீங்களா?


என்னோட அப்பா..

என் பெண்களோட அப்பா..

அதாங்க என்ற வூட்டுக்காரர்.😀


என்னோட சேட்டைகள், ஓவர் அன்பு, என் சமையல், என் கோபம், என் சிரிப்பு,என் அழுகை ..எதுவாக இருந்தாலும் என்னைப் பொறுத்துக் கொள்ளும் ஜீவன்கள் இவர்கள்.


#அப்பாவும்_நானும்

ஆண்பிள்ளை இல்லையே என்ற குறையே வைக்காமல்..

சைக்கிள் ரிப்பேரா..அழுக்குத் துணியோடு நிற்பேன்.

ட்யூப் லைட் மாட்டணுமா..ஸ்டூலைப் பிடிச்சுப்பேன்.

பூக்களோடு அவர் பேசும்போது ..பக்கெட் தண்ணீரோடு நிற்பேன்.

வெளியே நான் கிளம்பணும் என்றால்..வானிலை ரமணன் ஆகிடுவார் அப்பா.

நனைந்து வரும்போது துவாலை நீட்டுவார்.

நான் தூக்கி போடும் சாவியை ..தூக்கில் சரியா தொங்க விடுவார்.

நியூஸ் பேப்பர்..நியூவாகவே இருக்கணும்.அவருக்கு..

மழையும் புயலும் மெழுகு வர்த்தி ஒளியில் ரசித்தோம் ஒரு காலத்தில்.

இருமல் வரும்போது..இருக்கேன் எதற்கென்பார்.

அம்மா கோபிக்கும்போது அரணாய் வந்து நிற்பார்.

லேசாய் முகம் சோர்ந்தால் கூட..' அலையறியேம்மா ' என்று அரற்றுவார்.

"ஒரே ஒரு அப்பளம் சுட்டுத் தரியா" என்று கேட்கும் அழகு..


எந்தப் பிரச்சனை என்றாலும் ..முதலில் உன்னால் சரி பண்ண முடிகிறதா என்று பார் .என்று சொல்லிக் கொடுப்பதில் என் ரெண்டு அப்பாக்களும் எனக்கு ஆசான்.


#வூட்டுக்கார_அப்பா

ப்ராஜக்ட் சைட்டிலேயே வாழ்வதால் .பெரிதாய் எதிலும் எதிர்பார்ப்பில்லாத குணம்.


முழு சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது இந்த அப்பா என் வாழ்க்கையில் வந்தததும் தான்.


அவர் சொல்றதற்கெல்லாம்  வேகமா மண்டையாட்டினாலும் என்  மனசு "அணில் வால் உள்ளே இன்னும் கொஞ்சம் நுழையணும்னு ' எங்கோ சிந்தனையில் இருப்பது தெரிந்தும் விடா முயற்சியில் இருப்பவர்.


நான் எப்படி சமைத்தாலும் ,வாயில் போடும் முன்பே "சூப்பர்" நு சொல்லும்.மகானுபாவர்.


ராஜா சார் இசைதான் அவருக்கு உலகம்.

கத்திரிக்காய் கிலோ என்ன விலை எனும் சிந்து பைரவி  சுலக்ஷணா என்னை ..

 music என்றால் மிரண்டு ஓடியவளின் மைண்ட் செட்டை மாற்றியவர்.


 என் வூட்டுக்காரரையும் நான் 'அப்பா'னு தான் கூப்பிடுவேன். 

எல்லாப் பெண்களுக்குமே தன் அப்பா மாதிரி வாழ்க்கைத் துணை கிடைக்கணும்னு ஆசை உண்டு.


பொறுமை, எளிமை எல்லாம் சேர்ந்த என் பெண்களின் அப்பா..


எனக்கு என் இரண்டு பெண்களோடு அப்பாவையும் சேர்த்து மூன்று குழந்தை என்றால்..

என் கணவருக்கும் அதே தான். 

என் ரெண்டு பெண்களோடு சேர்த்து நானும் ஒரு வளர்ந்த குழந்தை அவருக்கு


ரெண்டு அப்பாக்களுக்கும் பொண்ணுன்னா உசுரு..

Cricket Match ம் ..music ம் இவர்களை இணப்பது போக இப்பொ கூட சேர்ந்திருக்கு இன்னொரு 'm"..அதான் மொபைலு😀


என் உலகம்...என் அப்பாகள்.


புதுக்கோட்டை ராஜாவும் கோயமுத்தூர் ராமும் சேர்ந்தால் ..நான் என்ன ஆகறது?


Happy father's day dears.


No comments: