#குறுங்கதை_போட்டி
#பாக்கெட்_உலகம்
சனிக்கிழமை...காற்றைக் கிழித்துக் கொண்டு பைக்கில் வேக வேகமாக நிறைய இடங்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் போய் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் ரகு.
ஒவ்வொரு ரெஸ்டாரெண்ட்டிலும் டெலிவரி பாய்ஸ்களின் கும்பல்தான் அதிகமாக இருந்தது.
அந்த சைனீஸ் ஹோட்டலில் ஆர்டருக்க்காக நின்று கொண்டிருந்த போது அவன் செல்லப் பெண் காவ்யாவிடமிருந்து ஃபோன். ' "அப்பா..அப்பா..எனக்கு chilly garlic noodles வாங்கிண்டு வரியா..ப்ளீஸ்ப்பா..'
அதற்குள் இவன் டோக்கன் வந்துவிட அங்கிருந்து டெலிவரிக்கு கிளம்பினான்.
வெயில் என்பதால் ஐஸ்க்ரீமுக்கு ஏக டிமாண்ட். வேகமாக கொண்டு போய். கொடுக்கணும்.
வேலைப் பளுவிலும் மகனின் பெயர் தாங்கி வந்த குறுஞ்செய்தி யை ஆவலுடன் திறக்க.. 'அப்பா..don't forget ப்பா..my favourite chocolate mint fudge from 'corner house'.
"ஓகே கண்ணா " பதிலளித்துவிட்டு தொடர்ந்தான் தன் வேலையை.
மனைவியின் மிஸ்ட் கால் இருப்பதை கண்டு ..அவன் தொடர்பு கொள்ள..' என்னங்க ..எங்க அக்கா வந்திருக்காங்க..
எனக்கும் அவளுக்கும் பார்ஸல் வாங்கிண்டு வந்துடங்க' சொல்லி முடித்தாள்.
ஏதோ மன உளைச்சல் காலையிலிருந்தே..
இப்போதெல்லாம் யார் வீட்டிலும் சேர்ந்தே உட்கார்ந்து சாப்பிடறதில்லையா? அவங்கவங்க வேண்டுமென்பதை வாங்கிக்கிறாங்க..வேற வேற நேரத்தில..
ஏன் இப்படி ஆச்சு நம்மூர்? "
எப்படியோ எல்லா வேலையும் முடித்து
மேனேஜரிடம் சொல்லி விட்டு ..எல்லாரும் ஆசையாய்க் கேட்ட உணவுகளோடு வீட்டின் கதவைத் த்ட்ட..
ஓடி வந்பெண்..'ஹாய்ப்பா..தாங்க்ஸ்ப்பா' அவன் கையிலிருந்த பேக்கை வாங்கியபடி சிட்டாகப் பறந்து சென்று விட்டாள்.
சத்தம் கேட்டு ஓடி வந்த மகன் .' என் ஃப்ரண்ட்டும் காத்துக் கொண்டிருக்கான்ப்பா..' பிடுங்காத குறையாக அவன் ஐஸ்க்ரீமை வாங்கி ஓடிப் போனான்.
அடுக்களையிலிருந்து வெளியே வந்த அவன் மைத்துனி..' வாங்க ரகு..எப்படி இருக்கீங்க? கேட்டபடி அவன் கையை நோட்டம் விட ..குறிப்பறிந்த ரகு ,அவர்களுக்காக வாங்கிய உணவைக் கொடுத்தான்.
"கை கால் அலம்பிட்டு , இட்லி உங்களுக்கு வெச்சிருக்கேன் ஹாட் பேக்கிலே சாப்பிடுங்க..நானும் அக்காவும் ரொம்ப நாளாச்சு இப்படி சேர்ந்து அரட்டை அடிச்சு" என்று மனைவி..வேகமாக விட்ட கதையை தொடரச் செல்ல..
காலியாக கிடந்த டைனிங் டேபிள் பரிதாபமாக அவனைப் பார்த்தது.😥
No comments:
Post a Comment