#மகளிர்_மட்டும்
#அரசியல்
#சமூக_நோக்கம்
கடையின் கதவு ஷட்டர் பாதி இறக்கி..மூடு விழா நடத்தும் நேரம்..' இருப்பா..இருப்பா..நான் கொஞ்சம் குனிஞ்சு உள்ளே வந்துடறேன்னு சொல்ற மாதிரி தான்..எங்கள ப்ராஜக்ட் வாழ்க்கையும்.நாங்க சாமான் செட்டெல்லாம் தூக்கிண்டு போய் செட்டில் ஆகும்போது ..மூடு விழா ஆரம்பிக்கும்.
இரண்டு ப்ராஜக்ட்..
1. முதல் முதலில் தனியான் நிறுவனம் எடுத்துக் கொண்ட hydel power project ..
ரம்மியமான நர்மதை நதிக் கரையில் வாசம்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமா andolan நடக்கும்.
வூட்டுக்காரர் சீக்கிரம் வந்தா..' வேலை போய்டுத்தா ? ' என்று அவரோட டென்சனை ஏத்தி விட்டு விடறது.
நிறைய குளறுபடிகள்..அரசாங்க தரப்பில்..கம்பெனியின் தரப்பில்..
ஆனால்..என் பார்வையில்..
1. பாரத விலாஸ் மாதிரி ..ஒரு மினி இந்தியா ..பல மொழி..பல கலாச்சாரம்.. பலவகை உணவு..ஒரே குடும்ம்பமாய் கும்மியடித்த நாட்கள்
2. ஒரே பள்ளி இருந்தது போய்..சின்ன சின்ன பள்ளிகள் முளைப்பு
3. படித்த , கற்றுக் கொடுக்க ஆர்வம் இருந்த ப்ராஜக்ட் வாழ் பெண்கள் , பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிவர். (நானும் போனேன்..பாவம் பசங்க தான்)
4. ஒரே ஒரு சந்தை நாளை நம்பி இருந்த கிராம மக்கள், வியாபாரிகள் எல்லா நாளும் கடை விரித்தனர். புது புது பொருள்கள் கிடைக்க ஆரம்பித்தது.( நீங்க எல்லாம் வந்ததில் இங்கே விலை ரொம்ப கூடிப் போச்சு என்ற குற்றச் சாட்டு உண்டு)
5.சலூனிலிருந்து ..browsing centre வரை ..எல்லாம் புதுப் பொலிவுடன்
6. பஸ் வசதி கொஞ்சம் ஆரம்பித்தது.
ஆனால்..கரையோர வாழ் மக்களுக்கு தகுந்த ஈடு தர முயலாததால்..வேறு பல அரசியல் காரணங்கள்..
ப்ராஜக்ட் மூடும் விழா தொடங்க..
அங்கே சேர்ந்த பறவைகள்..வேறு வேறு பாதையில் இரை தேடி பயணம் ஆரம்பிக்க
மெதுவாக களையிழக்க தொடங்கியது..அந்த இடம்..
மூட்டைக் கட்டி..அடுத்த முகாமுக்கு நாங்கள்.
மந்தாகினி நதிக் கரையில் முதல் hydel project.
BOOT (build -own-operate-transfer)project நு என் வூட்டுக்காரர் சொல்ல..ஏம்ம்ப்பா..அங்கே பெரிய முட்டி வரைக்கும் பூட்ஸ் போட்டுண்டு போகணுமானு கேட்கும் அம்மணி நான்.
குப்த் காசி கோயிலுக்குள் நுழைந்தேன்..டொனேஷன் சீட்டுக்கு காசு கொடு என்று ஒருத்தர் என்னை பிடுங்க.. திடீரென்று உரத்த குரலில்..' என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க எல்லாம்.. dam கட்டணும்னா விட்டுடுவோமா என்று கத்த ஆரம்பிக்க..குலை நடுங்கி குழந்தைகளோடு தப்பிச்சோம் பிழைச்சோம்னு என்னைக் கூட்டிச் சென்ற டிரைவர் காப்பாற்ற ஓடி வந்தேன்.
நான் கண்ட வளர்ச்சி அங்கே
1. நிறைய வேலை வாய்ப்பு. skilled,semi skilled ,in skilled labourers ..எல்லாருக்கும்
2. மலைவழி சாலை- எப்போது cloud burst ஆகும்..எப்போது landslide ஆகுமென்று கணிக்க முடியாத இடம். container லாரிகள் வந்து செல்ல செப்பனிடப்பட்ட சாலைகள்.(/அதுவும் செய்யக் கூடாது என்றும் சிலர்)
3. மலைப் பகுதி என்பதால் பல பொருட்கள் கிடைக்காது..கிடைக்க பல நாளாகும். போக்குவரத்து வசதி கொஞ்சம் வரத் தொடங்கியதால் வியாபாரிகள் கொண்டாட்டம். ( எல்லாம் மூன்று மடங்கு விலையில்)
4. தொலை தொடர்பு வசதி கொஞ்சம் பெருகியது.
இப்படி பல இன்னல்களும் :
1.பள்ளிகள் அங்கே மேல் வகுப்புக்கு கிடையாது.
so பாதி குடும்பம்..இங்கும் அங்கும்...
2. சரியான compensation தர மறுப்பு என்று குற்றச் சாட்டு.
3.சுற்றுச் சூழல் பாதிக்கும் என்று எப்போதும் கொடி தூக்கல்
இப்படியே இழுத்து..ஒரு வழியா இழுத்தே மூடிடலாம்னு முடிவு..மீண்டும் முகாம் தேடி..கூடு விட்டு அப்பா பறவைகள் ஓரிடம்..அம்மா தன் குஞ்சுகளுடன் ஓரிடம்.
ஆனால்..புத்தகத்தில் கற்றுப் புரியாத பாடம் நாங்கள் கற்றோம் இங்கெல்லாம்.
அரசியல்வாதியும் .சமூக ஆர்வலரரும் ஆதாயம் தேடும் இடங்களாக இந்த பெரிய பெரிய வேலைகள் ஆரம்பிப்பத்தும், நின்று போவதும்..
நஷ்ட்டம் பல கோடி என்று பேச்சு..
இதெல்லாம் ஏன் தீவிர ஆலோசனைக்கு பிறகு, மக்களுக்காக என்றால்..நல்ல முறையில் ..பாதகமில்லா முறையில் எடுத்துச் சென்றால்..
பல இல்லங்கள்,கிராமங்கள் ஒளியூட்டப்படலாமோ?
கொடி தூக்குபவர் யாருடைய கொட்டகை கூட இல்லை அங்கெல்லாம்.
நல்லது நடக்கும் என்றால்..நல்லபடியா யோசிச்சு நன்மை செய்யலாமே?
ஆரம்பிக்க வைத்து ,நட்டாற்றில் கை விடுவதால் யாருக்கு லாபம்?
நெஞ்சு பொறுக்குதிலையே..
No comments:
Post a Comment