Monday, November 28, 2022

தீராத_விளையாட்டுப்_பிள்ளை

 #ஸண்டே_ஸ்பெஷல்


#தீராத_விளையாட்டுப்_பிள்ளை..


நானா..இல்லவே இல்லை..


மிஸ்..எனக்கு இன்னிக்கு வயத்து வலி மிஸ்.. லேசா தலவலி மிஸ்..

மிஸ் மிஸ்..நளினி ஆசிரியை( தமிழ் டீச்சரை அப்படித்தான் கூப்பிடணும்) வினாத்தாள் திருத்தினதை எல்லாருக்கும் கொடுக்கணும் மிஸ்..' இப்படி பொய் சொல்லி சொல்லி..PT க்ளாஸுக்கு டிமிக்கி கொடுத்த நமக்கு ஸ்போர்ட்ஸ் எப்புடி வரும்?


அப்படியும் வேற வழியில்லைனு வந்தா..

ரொம்ப பிடிச்ச விளையாட்டு..சொன்னா நம்ப மாட்டீங்க..

#Lemon_and_spoon race தான்..😀

அப்பவே பாருங்க..நமக்கும் சமையலுக்கும் ஒரு கனெக்‌ஷன் இருந்திருக்கு ..


செலவே இல்லாத விளையாட்டு..

மத்த ஸ்போர்ட்ஸ் க்கு ஸ்கூல்ல ப்ராக்டீஸ் பண்ணனும்..இது நம்ம வீட்டிலேயே ப்ராக்டீஸ் நடக்கும்..


" ரெண்டு எலுமிச்சம் பழம் வெச்சிருந்தேனே..ஒண்ணு தானே இருக்கு..இன்னொன்னு எங்க?

அதான் இதுனு..கவுண்டமணி டயலாக் பேசிட்டு..பைக்குள் நைஸா ஒரு பழத்தை எடுத்து வெச்சுக்கறது..

இருக்கற 10x10 ரூமுல ஸ்பூன்ல 🍋 வைச்சு நடக்க..

' எச்சல் பத்து..ஒண்ணுமே கிடயாது இந்த வீட்லனு' ஆசாரப் பாட்டி அங்கலாய்ப்பாள்.


அந்த நாளும் வரும். அதான்..ஸ்போர்ட்ஸ் டே..


ஒச்சம்மா டீச்சர்..📚 விசில் ஊத..


ஸ்பூனை வாய்க்குள்ள கெட்டியா பிடிக்க..

அத்தனை நாள் சமத்தா ஸ்பூனுக்குள் உட்கார்ந்த லெமன்..விசில் சத்தம் கேட்டதும் டிஸ்கோ ஆட ஆரம்பிக்கும்..

கையை வேற பின்னாடி கட்டிக்கணும்..


போங்காட்டம் ஆடவே முடியாது..அது தான் கையும் வாயும் கட்டிப் போட்டு இருக்கே..


நம்ம க்ளாஸ் cheer girls வேற உசுப்பி விட..

'அகிலா..இன்னும் என்ன..உன் வீரத்தைக் காட்டுனு' மை வாய்ஸ் சொல்ல..


"மக்கு..ஒழுங்கா balance பண்ணுனு' லெமன் என்னைப் பார்த்து முரைக்கும்..

ஸ்பூனை இறுக்கிப் பிடிக்க வாய் வலிக்கும்..


பத்து தப்படி தாண்டறதுக்குள்ள..தாகம் எடுக்கற மாதிரி இருக்கும்..தொண்டை வறளும்..

என் லொள்ளு தாங்காத லெமன்..


ஆடி அடங்கும் வாழ்க்கையடா.இதில் ஆறடி நிலமே சொந்தமடானு..தத்துவப் பாடல் பாடியபடி..


இதோ..விழப் போறேன் விழப்போறேன்..விழுந்துட்டேன்னு பாண்டிய ராஜன் கார் சீன் மாதிரி..தொபுகடீர்னு லெமன் ..land ஆகிவிட..


அப்புறமென்ன..கொடுத்த பில்டப்பெல்லாம் பொடி பொடியாக..retired hurt ஆக pavilion க்குள் வந்து..

மீதி ஸ்போர்ட்ஸ் க்கு..cheer girls ஆகிட வேண்டியது..


" என்னடி..இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே ஆச்சே..  கப்பு  கிப்பு உண்டானு ' ஆபீஸிலேர்ந்து களைச்சுப் போய் வரும்  சித்தி கேட்க..' இந்தா..ரொம்ப களைச்சு போயிருக்கே..ஒரு கப் லெமன் ஜூஸ் போட்டு வெச்சிருக்கேனு' சொல்லி..சொல்லி..

என் 😢 சோகக் கதையைக் கேளு தாய்க்குலமேனு நான் புலம்ப..


"போனாப்போறது விடு..lemon and spoon game ல ஒரு அழகான தத்துவம் இருக்கு தெரியுமா..நம்மளோட வாழ்க்கையை எப்படி balance பண்ணனும்.. அந்த 🍋 கீழே விழாம இருக்க ,எத்தனை concentration and practice வேணும்'..இதெல்லாமாவது கத்துண்டியா ' that's more important அவள் சொல்லச் சொல்ல..


எப்பவும் ஸ்பூனும் லெமனுமா..ப்ராக்டீஸ்


அடுத்த தடவை try பண்றேனுனு சொல்லிட்டு..

அடுத்த வருஷம் பேர் கொடுக்கலாம்னு மிஸ் கிட்ட கேட்டால்..

" இந்த ரேஸ் இந்த வருஷம் event ல இல்லனுட்டாங்க'..


உன் குத்தமா..என் குத்தமா..யாரை நான் குத்தம் சொல்ல..

ஒரு நல்ல லெமன் and ஸ்பூன் ரேஸ் வின்னரை இந்த நாடு இழந்தது..😀😀


நாம ஃபோட்டோ புடிக்கற அளவுக்கு ஒண்ணும் சாதிக்கலை..அதான் ..இந்த அம்மா ஃபோட்டோ..

மன்னிச்சு🙏

No comments: