#ஸண்டே_ஸ்பெஷல்
#என்(அவர்)பேச்சிலர்_டேஸ்
ஏங்க..ஏங்க உங்க் பேச்சிலர் டேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...ஏதாவது விஷயம் மாட்டுமானு ஜொள்ளு விட்டபடி நான் கேட்க..
படு உஷாரு. ஐத்தான் படு உஷாரு..😄
கரோல் பாக்கில..அந்த கரோல் பாக்கில..எங்க பேச்சிலர் மேன்ஷன்ல..
ம்ம்ம்ம்..மேல சொல்லுங்க..கறுப்பா செவப்பா..சீக்கிரம் சொல்லுங்க..
இரும்மா..உனக்கு எல்லாத்துலயும் அவசரம்.
எங்க ரூம்லே அஞ்சு பேர் இடுக்கி இடுக்கி படுக்க..ஒருத்தர் எழுந்தா தான் நடக்கவே இடம் கிடைக்குமா..அப்போ..
காலையில் அந்த ரூம் ஜன்னல்லேர்ந்து....
ஜன்னல்லேர்ந்து..ஜன்னல்லேர்ந்து..
..பஞ்சாபியா..உ பி யா..டில்லியா..???
இரும்மா..முதல்ல சுந்தரம் எழுந்து எட்டிப்பார்ப்பானா..டேய் நகருடா..நான் பார்க்கறேன் நீ போய் உன் வேலையைக் கவனினு ராகவன் வெரட்டுவானா..?
ஏங்க..இப்ப அதுவா முக்கியம்?
சொல்ல விடலைனா எப்புடி..?
அதாங்க..அந்த விடலைப் பருவம்..சொல்லுங்க..சொல்லுங்க...
உன் டைம் ஸ்லாட் ஓவர்..noida பஸ்ஸு போய்ட்டா அப்பறம் நாய் பாடு தான்....என் டர்ன் இப்பொ..டிப் டாப்பா ராஜகோபால் சார் வந்து அவரோட கூலிங் க்ளாஸை அட்ஜஸ்ட் பண்ணி உட்காருவாரா....
" இவருக்குத் தான் இன்னிக்கு அதிர்ஷட்டம் அடிக்கப்போறதுனு..
கற்பூர ஆரத்தியுடன்..மூர்த்தி வருவானா?
வியாழக்கிழமை..கண்டிப்பா இன்னிக்கு மஞ்ச கலர் தான்..ஒரு பெரு மூச்சுடன் எட்டிப் பார்ப்பானா?..
" டேய்..டேய்..நேத்துதானே டா..அது..இன்னிக்கு பார்..மல்டி கலர்ல சும்மா தகதகனு...'..
" இல்லவே இல்ல..பெட் கட்றேன் ..இன்னிக்கு என் ஃபேவரிட் கலர் வொயிட் தான்..'..சுந்தரராஜன் சூ மந்திரக்காளி சொல்வானா..
ம்ம்ம்ம்ம்..சீக்கிரம்..சீக்கிரம்....எனக்கு ஹார்ட்டே வெடுச்சும் போல இருக்குப்பா.
எட்டடிக்க இன்னும் only 60 seconds இருக்க..
அந்த ரூமில்..லப் டப் லப் டப் சத்தம் மட்டுமே. கேட்க...
கடிகார முள் எட்டு நெருங்க..
சரக் சரக் சத்தம்...
வந்தாச்சு..வந்தாச்சு..
பல கண்கள்..அந்த ஜன்னல் ஓரத்தில் எட்டிப் பார்க்க..
யார் மீது வீசப் போகிறதோ...இன்று..
ஐயோ.சஸ்பென்ஸ் தாங்கலைப்பா..
கடைக்கண் பார்வைதனை கன்னியர் காட்டி விட்டால்.மண்ணில் மாந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்..இல்ல.....
சே..என்ன லைஃப் ப்பா..
இரு..இரு..ஸ்டாப் ஸ்டாப் ..
இங்கே கன்னியர் எங்கே வந்தா..?..ஒரு பெரிய குண்டை அவர் போட..
.' இல்லயா பின்ன..இன்னும் என்ன ஒளிவு மறைவு?..
" எங்கே நிறுத்தினோம்..ஜன்னல் பின்னாடி...?..
ம்ம்ம்ம்ம்ம்..அப்புறம்..
" சார்..தயிர் சாதம்,புளி சாதம்,லெமன் இருக்கு..
மையலோடு ஏதோடு சொல்லப் போறார்னு பார்த்தால்....
பார்த்தால்..
வேற யாரு..நம்ம சாப்பாடு பொட்டலம் சங்கரன் ..
அங்க நிப்பாம்மா..'..
நீ வேற வீணா எதேதோ கற்பனை பண்ணிண்டு..
"இட்லி போடவா சார்..?'
"சங்கரா..உன் இட்லியை தூக்கிப் போட்டு..இந்த செவுத்துள்ள ஓட்டை போட்டுடாதேப்பா..வூட்டுக்காரனுக்கு பதில் சொல்லணும்னு.. ராகவன் ஓடி வந்து மிஸ் பண்ணாமல் அந்த பொட்டல கேட்ச் புடிப்பாரா..ஏன் கேக்கற..
பொட்டலம் கையிலே..புத்தியோ..பஸ்ஸை பிடிக்கும் ஓட்டத்திலே.
இதுல ஃபிகரு எங்க..கலரு எங்க..? கட்டபொம்மன் வசனம் பேசிக் கொண்டே போக..
அதுசரி..டபாய்க்காதீங்க..அத்தனை கண்ணிலும் உங்க கண் மிஸ் ஆறதே..அப்போ..அப்போ...நீங்க..நீங்க..
நான் கண்ணை கசக்கி..சந்திரமுகியாக..
" அப்படியெல்லாம் என்னை முறச்சு பாக்காதேம்மா..நான் ரொம்ப நல்லவன்..'.
கரெக்டா அந்த நேரம்..
' பச்சை நிறமே..பச்சை நிறமே.." என் மொபைல் பாட..
ஆஹா..கரோல் பாக் பாலாஜி..
" பாலாஜி ..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்னு ' ..முதல் மரியாதை ஸ்டைலில் நான் பேசிக் கொண்டே போக..
' மாமி..ராமசாமி சார் பத்தி அப்படியெல்லாம் நினக்காதீங்க..இத்தனை களேபரத்திலும் அவர் இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருப்பார்..
சங்கரன் குரல் கேட்டதுமே..ஃபாக்டரி சங்கு ஊதினாப்போல..பத்து நிமிஷத்தில ரெடியாகி..சார்ட்டர்ட் பஸ்ஸுக்குள்ள போய் உட்கார்ந்துடுவாரு..அவரைப் போய் நீங்க..'...
ஏம்ப்பா..கரோல் பாக்,அஜ்மல் கான் ரோடு..ஆயிரம் வசதிகள் இருந்தும் உனக்கு ஒரே ஒரு ஆள் மாட்டலையாப்பா..நான் கேட்டது தான் தாமதம்..
" ஊர்ல ஜோஸியர் அம்மாகிட்ட சொல்லிட்டாராம்..சிங்கப்பல்லோட சிங்கப் பொண்ணு ஒண்ணு வரப்போறா உன் குடும்பத்துக்கு மருமகளானு.. அப்புறம் எங்க..மானு மயிலுனு தேடறது..'..
என்னப்பா இது..உங்க பேச்சிலர் லைஃப் இப்படி சப்புனு போச்சு..'..
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலைனு அவரோட எக்ஸ்பிரஷன்..😄😄😄😄
ஆனால் ஒண்ணுங்க..
அந்த பேச்சிலர் மேன்ஷன் நுழைஞ்சதுமே..
அப்படியே மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கும்..
ஒரு பெரிய அலுமினிய அண்டால..கோஸ் ,பீட்ரூட்,வெங்காயம் ,தக்காள்,முருங்கை,கீரை,பூசணி பரங்கி.. ஒரு மார்க்கெட் காய்கறியுமே ஒரே சாம்பாரில் மிதக்கும்..
பூண்டும் மாங்காயும் ரசமாக ..கொத்தமல்லி கருவேப்பிலையுடன் மிதக்கும்..
கிண்டலும் கேலியும் கும்மாளம் கலகலப்புனு வெளியே தெரிந்தாலும்.
தங்கை கல்யாணம் செய்யணும்,அம்மாவை கவனிக்கனும், வீடு கட்டணும், மனைவிக்கு பணம் அனுப்பணும், அதைவிட ஊருக்குப் போக பணம் சேர்க்கணும்னு ..அவர்கள் மனக் கவலைகள் எப்போதாவது வெளியே வரும்..
சரி இந்தக் கதை தான் புஸ்ஸுனு போச்சு..
தம்பிக்கு மெசேஜ் பண்ணினேன்..
' டேய்..உன் பேச்சிலர் டேஸ் பத்தி....'
பேச்சிலர் டேஸ் பத்தியா..எனக்கு பத்திக்கிட்டு வருது..
காலேஜ் டேஸ்லயும் உனக்கு காவலாப் போயே நேரம் போச்சு..
வேலை கிடைச்சு டெல்லிக்கு போனால்..எனக்கு முன்னாடியே அங்கே போய் நீ செட்டிலாகிட்ட.. இதுல பேச்சிலர் லைஃபா..பிச்சு புடுவேன் பிச்சு..'..
ஆத்தா..இறங்குனு..நான் மெசேஜை நிறுத்த..
' என் வாழ்விலே நீ வந்தது விதியானால்...நீ எந்தன் உயிரன்றோ'...பாட்டு ..டீவில வூட்டுக்காரர் பார்த்துக்கிட்டு இருக்காரு..😄😄😄😄
.
No comments:
Post a Comment