Tuesday, November 29, 2022

பொறாமை_பாதி_பெருமை_பாதி

 #பொறாமை_பாதி_பெருமை_பாதி



வாட்ஸப்பை பாரு கொஞ்சம்

வார்க்கணும் ரவா தோசை

சேர்க்கணுமா மைதா என்றே

சீக்கிரம் சொல்லு நீயும்..

சீமந்த புத்திரியின் ..குறுஞ்

செய்தியும் வந்ததுவே.


போடு என்றதும்..

போட்டுத் தள்ளிடுவாளே..

பக்குவம் சொல்ல யோசிக்க

ஃபோட்டோவும் வந்தது..பட்டு

பட்டாய் முறுகல் ரவா ..


ஹெல்ப்புக்கு எனக்கு..

ஹெப்பார் கிச்சன் இருக்கு..

ஹாப்பியாய் அவள் சொல்ல

ஹார்ட்டே வெடிச்சதுவே..


என் இடத்தை பிடித்தது

இன்ஸ்டண்ட் ரெசிபிகளுமே..

பொறாமையில் புகைந்தாலும்..

பெருமையாய் இருந்ததுவே.


பின்னோக்கிப் போனேன்.. நானும்

அம்மாவின் குறிப்புகள்

அழகான டயரிக்குள்..

அப்படியே செய்வேன்..

அதிலவள் சந்தோஷம் கண்டேன்.


பிறிதொருனாள்..

மாமியார் சொல்லித் தந்தாரென்று

" வத்தல் குழம்பில்..

வெல்லம் சேர்த்தேனே..நீயும்

செய்து பாரு..சுவையிலே

அது ஜோரு என்றேன்.


வற்றிப் போனது ..அவள்

வதனம் என்றாலும்

வருவோர் போவோரிடம்

பெருமை பேசக் கண்டேன்..


இன்னும் என்ன டிப்பு எல்லாம் கற்றாய்

இன்முகத்துடன் கேட்டாலும்..அங்கே

பெருமையோடு..சிறு பொறாமை கண்டேன்..


கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து moment..

அன்றும் இன்றும்.


அம்மா..அம்மா..தான்

No comments: