Tuesday, November 29, 2022

சவாலே_சமாளி

 #crisis_management

#சவாலே_சமாளி

#அம்மா_கணக்கு


கல்யாணம் ஆகி டெல்லி போன புதுசு. வீட்டுக்காரர் bachelor accommodation ல் தங்கி சங்கரன் என்பவர் போடும் தயிர் சாதம் இட்லி பொட்டலத்தோடும் காலையும் மத்யமும் போக, சாயந்தரம் அவர்கள் நள பாகம். 


" பீட் ரூட், கோஸ், டிண்டா நு ஊரில் இருக்கும் அத்தனை காயும் போட்டு ஒரு ஓஹோ சாம்பார் இவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த நேரம்..


' மணமகளே..மணமகளே' நு டில்லி ஸ்டேஷனில் வந்து என்னை ஒரு பெரிய நட்பு வட்டம் வரவேற்றது.

எனக்கு at a stretch அஞ்சு பேருக்கு தான் சமைக்க தெரியும்.

அதுவும் வூட்டுக்காரர் ரொம்ப நல்லவரு. எதை போட்டாலும் சாப்பிட்டுடுவார். 


so எல்லா ஞாயித்துகிழமையும் turn போட்டு , காய்ந்து போன வயிறில் ஒரு ஐந்து வயிறு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் படும் ,என் சின்ன கரோல் பாக் வீட்டில் "சாப் பா டுப்போ டப்படும்". 


மாமி..நாளைக்கு நம்ம வீட்ல பூஜை.திருநெல்வேலி லேர்ந்து எங்க குரு வரார். சமையல் நீங்க தான்."

ஃபில்டர் காஃபியை உறிஞ்சபடி இவர் ஃப்ரண்ட் சுந்தரம் ஒரு சனிக்கிழமை சாயந்திரம் வந்து சொல்ல..


அந்த மாமி வேற யாரு..சாட்சாத் நாந்தேன். (என்னை விட பெரியவர் எல்லாம் என்னை மாமினு கூப்பிட்டு என் இதயம் சுக்கு நூறாக வெடிக்கும்.. )

என்னடா இது ..இந்த அகிலாவுக்கு வந்த சோதனைனு சிவாஜி மை.வா வில் டயலாக் அடிக்க..

ஆஹா..பேஷா பண்ணிடலாமேனு கொஞ்சம் நடுக்கத்தோட தலை ஆட்டியாச்சு.


ஞாயிற்றுகிழமை காலையில் ..அவங்க வீட்டுக்கு போனால்..ஒரு ரூம் ஃபுல்லா கோஸும்,காரட்டும், கத்திரி,உருளை 🍅, பச்சை மிளகாய் நு ஒரு சின்ன கொத்தவால் சாவடி பார்த்ததும் ஒரே திடுக்.

"சுந்தரம்..எத்தனை பேர் சாப்பட போறாங்கநு கேட்க..

மாமி..just ஒரு 50 இல்ல 60 பேர் தான். casual  ஆ சொல்லிட்டார்..

நான் causality போய் admit ஆகிடுவேனோனு ஒரே டென்ஷன்.


எங்கேர்ந்து ஆரம்பிக்கறதுனு புரிலை.

சரி..பாயசத்திலேர்ந்து ஆரம்பிப்ப்போம்நு யோசிக்க..ஒரு 20 பாக்கெட் (பக்கெட்)் பால்..ஒரு 5 பாக்கெட் சேமியாவை நீட்டி ..' இது போதுமா..மாமி..இது போதுமானு கேட்க..

நமக்கு ஒரு குண்டானுக்கு மேல செய்ய்த் தெரியாது.ஆனால் இவங்க ஒவ்வொருத்தரும் ஒரு குண்டான் குடிப்பாங்களே..அம்பாளே என்னைக் காப்பாத்துனு களத்தில் குதிச்சேன்.. 


so கணக்கு போட ஆரம்பிச்சேன். 4 பேர்ருக்கு இத்தனை பால், சக்கரை, சேமியா,ஏலக்காய் போட்டு பண்னணும்னா என்ன அளவோ ..அதை 60 க்கு மாத்தினேன்.

அரை கிலோ முந்திரி மிதக்க ..ஒரு சூப்பர் பாயசம் ரெடி.


பெரிய டென்ச்ன் காய்கறிதான்.ஃபோன் எல்லாம் இப்ப மாதிரி கிடையாது ..

அப்புறமென்ன..

எப்படி செய்யப்போறேன்னு நினச்சப்போ..ஒரு அறிவு பல்பு எறிஞ்சது..

அதுதான் " அம்மா..கணக்கு'.


கூட்டுக்கு, கறிக்கெல்லாம் அம்மா சூப்பரா கூறு கட்டுவா..பத்து பேர் சாப்பிட வராங்க என்றால்..

கறி செய்யணும்னா..ஒரு கப் அளவுக்கு ஒருத்தருக்கு காய் ..with added தேங்காய்..


அதே கூட்டு. என்றால் பாதி காய் போதும் மீதி பருப்பு தேங்காய் அரைச்சு விட.. கரெக்டா இருக்கும்னு அம்மா கன கச்சிதமா..மீறாமல் அதே சமயம் எல்லாரும் நிறைவா சாப்பிடற மாதிரி செய்யறது ஞாபகம் வந்தது.


அடி தூள்..

பாயசம், பச்சடி, தண்ணி காண்பிச்ச வடைக்கு..கொஞ்சம் உருளையும்,கோஸ் காரட் போட்டு வெஜிடபிள் வடையாக்க..

பெரிய அண்டாவில் சாம்பார் ரசம், அப்பளம்..


பூஜை நடக்க..நடக்க..டென்ஷன்..

இலை போடப் போறோமே..taste பண்ணாத சாப்பாடு..


பரிமாறி முடிஞ்சு குருஜி பாயசத்தை ஒரு சொட்டு வைத்தவர் ' மதுரமாயிட்டு' என்றார். நான் சுந்தரத்தை பார்க்க..' மாமி..ஜெயிச்சுட்டேள்..அகிலா..நீங்க ஜெய்ச்சுட்டேள்' நு ஒரே பாட்டு பாட.. குருஜி "அந்த அம்பாளே வந்து பிறப்பாள் உனக்கு'னு ஆசிர்வாதம் செய்தார்.


அப்பொ என் பெரிய மகளை conceive ஆன நேரம். எப்படி இப்படி வேலை செஞ்சேனு எனக்கே ஆச்சரியம்


ஒரு சொட்டு மீதியாகாமல்..எல்லா. ஒட்ட காலி பண்ணியாச்சு.


இது ஜூலை மாதம் நடந்தது. சுந்தரம் செப்டம்பர் மாதம்  சென்னை போய் எங்கம்மாவை பார்த்தபோது..' எங்கம்மா ..தன் சமையல் technique எல்லாம் பேச்சு வாக்கில் எடுத்துவிட..ஒரு look விட்ட அவர்..

' அங்கே வந்து பாருங்க..எங்க மாமி ஒன்ணு இல்ல..ஒரு படைக்கே சமைச்சு போடறாங்க என்று சொல்ல..


' அன்று சாயந்திரமே பக்கத்து வீட்டு ஃபோனில் கூப்பிட்ட அம்மா..அடிப்பாவி.. மாசமா இருக்கும்போது இப்படி ஏதாவது பண்ணலாமா என்று ஏகமாய் திட்ட..


.ஒவ்வொரு நாளும் ஒரு சவாலோடு வாழ்க்கை..


பல ஊர்களில்..பல நெருக்கடிகளில்..


ஆனால்..ஒரு extra பெயருடன்..அகிலா என்றால் அன்னபூரணி என்று.


"

No comments: