Monday, November 28, 2022

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..

 #சும்மா_ஒரு_ஜாலி_போஸ்ட்


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..


POTW கிடைத்த சந்தோஷத்தில் ஊ..ல..லா.லா பாடிக் கொண்டே..

பெரிய பொண்ணுக்கு மெசெஜ் அடிச்சா..

அம்மா..its midnight here நு சொல்லிண்டே..

ஒரு dancing girl emoji அனுப்பிட்டு அவ மீண்டும் அவ dream தொடரப் போய்ட்டாள்..

சின்னவகிட்ட  சொன்னதும்..i know amma..you will get .. Appa க்கு போய் thanks சொல்லுனு என்னை விரட்ட..


வூட்டுக்காரரை தேடிப் போனால்...

....


கிச்சன் மேடையில் ..கைப்பற்றிய ஆயுதங்களை வரிசையாக மக்கள் பார்வைக்கு வைத்திருப்பது போல..

தேய்த்த கரண்டி,ஸ்பூன்களுடன் வூட்டுக்காரர்..


நான்: ஆஹா..என்னமா..பளபளனு தேய்ச்சு வெச்சிருக்கேள்..சூப்பர்ப்பா நீங்க..🤔

சொல்லிக் கொண்டே போக..


'அவர்; ' எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்'  ..முதல் மரியாதை செங்கோடன் போல சிவந்த கண்களுடன்..😠


" நான் வாங்கிய POTW காண்பிக்க வந்த என்னை..இப்படி கேள்வி கேட்கலாமானு'

நான் கண்ணை கசக்க.😭.( நோ..நோ..கண்ணை கசக்காதே..'கொ" ..வந்துடப் போறதுனு பதற..

உஸ் அப்பா..அவரை divert பண்ணியாச்சுனு நான் நகர..


அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த நம்ம கவுண்டமணி...அவரை உசுப்பி விட்டார் பாருங்க..


அவர்:' இன்னிக்கு எத்தனை ஐட்டம் நம்ம் வீட்ல?


நானு; என்ன..எல்லாம் கர்ஃப்யூ சமையல் தான். புடலங்காய் பொரிச்ச கூட்டு,உருளையும் ப்ரெட்டும் சேர்த்து காய், மிளகு ரசம்..சாப்ட்டு முடிச்சு இதென்ன கேள்வி?


அவர்; (கவுண்டமணி ஸ்டைலில்)..அப்போ எத்தனை கரண்டி இருக்கணும்?

நானு: சாதம் மோரும் சேர்த்து..1..2..3....


அவரு: மொத்தம் 5 கரண்டி.. ..கர்ஜனையுடன்👹


நானு;...🤒


அவர்: இப்போ ஸ்பூன் கணக்கு சொல்லு..


ஐயோ ராமா.. கணக்கு பாடத்துக்கே டிமிக்கி கொடுக்கும் எனக்கு..

இதென்னடா சோதனை தெய்வமே காப்பாத்துனு..


அவரு: நீ எண்ணறயா..இல்ல நானே எண்ணட்டுமா? என்று கர்ஜிக்கிற மாதிரி ஆரம்பிக்க..இல்ல..இல்ல...கனிவா..கேட்க..


நானு:  விரல் விட்டு எண்ண ஆரம்பிச்சேன்..

Only ஒரே ஒரு  டஜன் ஸ்பூன் தான் இருக்கு..

(இதுக்கு போய் அலட்டிகலாமானு நான் ரஜினி ஸ்டைலில் பேச.)


அவரு: ஒரே ஒரு ஐட்டமுக்கு ..ஒரே ஒரு ஸ்பூனு..( ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரே ராஜா..) பாடிக் கொண்டே..

வரிசையா சொல்லு..எதுக்கு எந்த ஸ்பூன்?


நான்: இது கதக்கு..இது பரத நாட்டியம் ,இது ஒடிஸி..

 கமல் பாஷையில் சொல்லிக் கொண்டே போக..


அவரு; tally ஆக மாட்டேன்கிறதே..திருப்பி சொல்லு..

நானு; (ரொம்ப பாவமா)..திருப்பி..1..2...3..


அவரு: என்னமோ போ.. நம்ம வீட்டு balanced sheet ம் tally ஆகாது....பத்து பாத்திரமும் tally ஆகாது..


நல்லவேளை கத்திரிக்கோல், கத்தி,peeler பத்தி கேட்டால் ..ஏதாவது பீலா விடலாம்னு இருந்தால்..


அது அவருக்கு out of syllabus..so ....me..escaped..


நானு; இதெல்லாம் daily யாராவது tally பண்ண முடியுமா..இருங்கோ..என் மத்யமர் ஃப்ரண்ட்ஸையே கேக்கறேன்..கரெக்டா சொல்வா..


சரிதானேப்பா..

சிங்க்கில் விழும் பாத்திரத்துக்கெல்லாம்..

"ஆடிட்" ஆரம்பிச்சால்..

நான் "ஆடிப் "போய்டமாட்டேன்..

No comments: