Wednesday, November 30, 2022

MTR idli mix கொழுக்கட்டை

 #appraisal_அலைப்பறைஸ்


போன வாரம் என்னவெல்லாம் செய்தேன் என்று....ப்ராஜக்ட் அப்ரைஸல் பிராண நாதர் செய்ய ஆரம்பிச்சார்..


அந்த ப்ரெட் ஹல்வால..இன்னும் ஒரு ஸ்பூன் ..நெய் சேர்த்து இருந்தால்..heaven ஆ இருந்திருக்கும்..


சொர்க்கமே என்றாலும்..ப்ரெட் அல்வாவைப் போலாகுமானு ' பாடி நான் குடுக்க வேண்டிய மார்க்கு..narrowly miss பண்ணிட்டம்மா..


இன்னொன்னு என்னமோ பண்ணினியே..அந்த ..#🍅#பஜ்ஜிசாட்...


"சாட்டிலே இருப்பதென்ன கன்னி இளமானே..தக்காளியோ..உருளையோ.கன்னி இளமானேனு'..என்னையே குழம்ப வெச்சதால்

"பஜ்ஜிக்கு நான் அடிமைனு' பாட வேண்டிய  நான்.. ..' ஒண்ணுமே புரியல ..பஜ்ஜிக்குள்ளனு'  என்னை புலம வெச்சதால்

but you missed the chance of getting full marks..


#பொள்ளவடை..ஆஹ்ஹா..மொறு மொறுனு..ஆனா..பாரு..அதுக்கு பேரு அரிசி வடை....பேரை மாத்தி plagiarism செஞ்சு ..( மாமி..பழி வாங்கிட்டேளேனு ..என்.மை.வா)..

அதுக்கு நான் உன் சமையலையே ஸஸ்பெண்ட்.செய்யணும்.

ஆனா..ஹஸ்பெண்ட் ஆச்சே..அதனால..

( ஐயா..அடுத்த வேளை சோறு கிடைக்கணுமேனு..😭 பயம்..இருக்கட்டும் ..என் மை .வா)


கடைசியா..அந்த #கடலை....out of the world..

ஆமா..அதுல போட்ட காரத்துக்கு..நாம எல்லாரும் out of the world தான்..

So அங்கே கொஞ்சம் மார்க்கு கம்மி..🤔


So ,...அப்பாவையும் discuss பண்ணி..


சாயந்தரம் என்ன டிஃபன் வேணும்னு சொல்றேன்னு....( ஆஹா..கொரோனா க்கு அப்புறம்..நம்ம crown ஐ..காக்கா தூக்கிண்டு போய்டும் போல இருக்கே..தேவுடா..)


பேசிக் கொண்டே ..தன்னோட மூக்குக் கண்ணாடியைத் துடைக்க..


"மாப்பிள்ளை.. கொடுங்கோ..அதை நன்னா..#பவுடர் போட்டு துடைச்சு தரேன்னு."பாசமழை..ஒரே..

(ஆனாலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே)


இந்தப் பவுடர் இருக்கே..பவுடர்..

எங்கப்பா..அழ அழ..அதை யூஸ் பண்ணுவார்.


கர்ச்சிப்பில் பௌடரைப் போட்டு அலாக்கா அதை fold பண்ணி..சட்டை collar அழுக்காகாமல் போட்டுப்பார்


மழைக்காலம்.முடிஞ்சதும்..குடைக்குள் தூவி வைப்பார்.அடுத்த வருஷம் ' "மழைக்கால மேகமொன்று' வரும்போது..முதல்ல குடையை மழையில குளிப்பாட்டணும்..


Rain coat ம் அப்படித்தான்.. Powder coat க்கு மாறி powerless ஆ pouring எப்போது ஆரம்பிக்கும்னு பீரோல தாச்சி தூங்கும்..


கீ போர்ட் வாசிக்க ..தொட்டுக்க contact lens  டப்பால..cuticura powder இருக்கும்..


பவுடர் பத்தி யோசிக்க..பளிச்சுனு ஒரு பல்பு..


ஆஹா..சாயந்திரம் என்ன டிஃபன்னு எனக்கு ஐடியா வந்தாச்சுனு நான் குதிக்க..


ஐயோ..பாண்ட்ஸ், சாண்டல்..இப்படி எதையாவது போட்டு 

" என்ன செய்யப் போகிறாய்னு' வூட்டுக்காரர் பாவமா பார்க்க..


" ஒரே ஒரு  பவுடர்....ஓராயிரம் வேலை பண்றது தானே'....அப்ப்போ..இந்தப் பவுடரும்..


நான் காண்பிச்ச பவுடரைப் பார்த்ததும் தான் அவருக்கு போன உயிர் வந்தது..


'MTR rava idli ' mix..


என் வழி தனி வழி..நகருங்கோ..

கிச்சனில் நுழைந்தேன்..


கொதிக்க வைத்தேன்..2 டம்ளர் தண்ணி..

கலந்தேன்..1 டம்ளர் மிக்ஸ்.

கிளறினேன்..கொஞ்சம் உப்பும் மிளகும் சேர்த்து..

தூவினேன்..தேங்காயும் கருவேப்பிலையும்..

பிடித்தேன் கொழுக்கட்டை.

வைத்தேன் ஆவியில்....

பரிமாறினேன்..instant கடலை மாவு மோர்க்குழம்புடன்..

#ரவா_இட்லிமிக்ஸ்_கொழுக்கட்டை


" மாத்தி யோசி boss'..

மாத்தி யோசி..


அடுத்த முறை..இதை ஒரு bread crumbs coating கொடுத்து fry பண்ணிஅசத்தலாம்..

Fried கொழக்கட்டையை..உதிர்த்து..உ.கி

சேர்த்து..ஊ..ல..லானு..chat செஞ்சுடலாம்..


கடைசில..மார்க்கு...?

உனக்கு  appraisal  பண்ணினா..இப்படி

Surprise எல்லாம் கிடைக்குமா ?

  So..மீண்டும்..அடுத்த டிஷ்லேர்ந்து அப்ரைஸல் ஆரம்பிக்கலாம்னு அவர் சொல்ல.


  ' திருப்பியும் முதல்லேர்ந்தா..சாமி..நான் ஜீட்'.


( பாவம்..என் வூட்டுக்காரர்..நான் எது செஞ்சாலும் "அமைஞ்சுடுத்தும்மானு'/சாப்பிட்டுடுவார்..சாரி..முழுங்கிடுவார்)


No comments: