Monday, November 28, 2022

குணம்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#குணம்..


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்..


கரெக்ட் தாங்க..இதுல பிரச்சனை என்னன்னா..

நானு.. மத்தவங்க  குணம் என்னதுனு நாடி பிடிச்சு பார்க்கற வர்க்கமுங்க..

அதனால் தான் என்னவோ..


என் குற்றம் என்னனு..நாடி பிடிச்சு பார்க்கறவங்களையும்..கடந்து போக முடியுது..


உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்கும்..

" எதுக்கு ரியாக்ட் பண்ற..உன் குணத்தை ஏன் மாத்திக்கறனு.."..

கரெக்ட்தானே..!!!


பாராட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..சின்னச் சின்ன சந்தோஷங்கள் தரும் பாராட்டுக்களை அள்ளி வீசுவதில் கஞ்சத்தனமே கிடையாதுங்க..அதுனால் எப்பவுமே குட்டீஸ் எல்லாம் என்னை சுத்தி வருவாங்க..ஜாலி ஜாலிதான் எப்பவும்..😃👍


பணத்தை அள்ளிக் கொடுக்கறேனோ இல்லையோ..நான் பண்ணும் பண்டங்களை 🍩🍰🍰🍿🍜🍛அள்ளிக் கொடுப்பேன்..யான் பெற்ற இன்பம்..கொடுமைக்கார குணம்ங்க..😀


வீட்டில திட்டு வாங்கும் ஒரு கெட்ட குணம்..'

ஏதாவது விஷயம் யாராவது சொல்லவந்தால்.. "அதான் தெரியுமேனு'.. சொல்லிட்டு..கொஞ்ச நேரம் கழித்து..

" என்னம்மோ சொன்னீங்களே ..' திருப்பி சொல்லுனு கேட்பேன்..

ரொம்ப கெட்ட குணம்..


Learn to say no..கண்டிப்பா இந்தக் குணம் தேவையென்றாலும்..சுட்டு போட்டாலும் வர மாட்டேங்கிறது..


என்னோட நாற்பதாவது வயதுக்கு வாழ்த்து சொல்ல அப்பா ஃபோன் பண்ணினார்.. ' இது பாரும்மா..இனிமே தான் உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு..அமைதியா இருக்கணும், அவசர புத்தி கூடாது..ஆழ்ந்து யோசித்து எந்த முடிவும் எடுக்கணும்..அகலக்கால் எடுத்து வைக்கக்கூடாது..' 

அன்று புரியாதது..நாளாக நாளாக சுர்ருனு உரைக்க ஆரம்பிச்சது..

உன்கிட்ட இதெல்லாம் சரி பண்ணனும்னு அப்பா சொல்லி இருந்தால் சண்டை தான் வந்திருக்கும்..ஆனால் அவர் சொன்ன விதம் இருக்கே..என்னோட எத்தனையோ குணங்களை எடை போட்டு..பலம் பலவீனம்னு பிரிக்க உதவியது.


குணம்..சில மாறும்..சில மாறவே மாறாது.


எந்த மாற்றமும் நன்மைக்காக இருக்கணும்..


எது மாறினாலும்..unconditional அன்பு மட்டும் மாறக்கூடாது என்று பிரார்த்தனை எப்போதும் உண்டு..


அரக்க குணம் கிடையாதுங்க..

ஆசை அளவோடு உண்டுங்க

இரக்க குணம் உண்டு..

ஈகையும் கொஞ்சம் உண்டு..

உண்மை பேசும் குணம் உண்டுங்கோ

ஊக்கமளிப்பதும்..உண்டுங்கோ

எதிர்ப்பார்க்கும் குணமுண்டுங்கோ..

ஏளனம் செய்யும் குணமில்லைங்கோ..

ஐஸ் வைக்கும் குணமில்லங்கோ

ஒத்துப் போகும் குணமுண்டுங்கோ..

ஓசியில் குளிர்காயும் குணமில்லங்கோ..

ஒளவியம் பேசற குணமில்லைங்கோ..


நம்ம குணம் எது..குற்றம் எது என்று தெளிவு பிறக்கவே காலம் போதவில்லை என்ற நிலையில்..


தெரிந்த முகங்கள் பல என்றாலும்..தெரியாத குணங்கள் ஏராளம் இருக்கும் நிலையில்


எப்பப்பாரு ஒரு weighing machine தூக்கிட்டு அலையக்கூடாதுங்க..

எல்லாரையும்.அவங்க அவங்க ப்ளஸ் மைனஸுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்  வளர்த்துக் கொள்ள..

நம்ம இந்தக் குணம்..சில மாற்றங்களை அவர்களிடத்தில் தானாகவே உருவாக்கும்.


அவ்வளவுதான்..

குணம்..nature


பிறவிக்குணம் சிலவற்றை மாற்ற முடியாது என்றாலும்..

பிறகு வந்து ஒட்டிக் கொள்ளும்.குணங்களை..கொஞ்சம் கவனித்தால் ..வாழ்க்கை சொர்க்கம்ங்க..


பூதக் கண்ணாடிகள் கொண்டு..மற்றவர் குணம் குற்றம் காணுமுன்..

ஒரேஒரு முறை..நிலைக் கண்ணாடி முன் நின்று..' என் குணம் சரியா?' ..என்று கேட்டுக் கொள்வோமே..

No comments: