Friday, October 6, 2023

Madhyamar- ஏமாறாதே

 #ஏமாறாதே_ஏமாறாதே


'யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி..அட யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி'..இந்த TMS நரம்பு புடைக்க பாடற பாட்டை கேட்கும்போதெல்லாம் ..ரிங் ரிங்கா சுத்தி flash back போய்டுவேன்.


peer pressure ..இதிலேர்ந்து யாராவது தப்பிக்க முடியுமா?

தேஹ்ராதூனில் ..பல்ட்டன் பஜாரில் பேரம் பேசிக் கொண்டிருந்த நேரம்..' நீங்க தமிழா? ' அவங்க கேட்டபோது தேன் வந்து காதில் பாய..

நட்பு உருவாக..இறுக..நான் அவங்க வீட்டுக்கு போக..அவங்க எங்க வீடுக்கு வர..

'

டிஃபன்சில் அவங்க வீட்டுக்காரர் பெரிய பதவியில் இருந்ததால் பீரங்கி தவிர எல்லாப் பொருளும் காண்டீன் ரேட்டில் எல்லா நட்புக்கள் வீட்டிலும் குவியும்.

தேவையோ தேவையில்லையோ ' நல்ல ஐட்டம் வாங்கி வெச்சுக்கோங்க' நு வீடு ரொம்ப ஆரம்பிச்சது.


அப்போ ஒரு நாள் அவங்க வீட்டுக்கு சென்ற போது என்னிக்கும் இல்லாத திருநாளாய் கம்ப்யூட்டர் முன்னாடி ்உட்கார்ந்து ஏதோ சீரியஸா க்ளிக் பண்ணியபடி இருந்தா.


என்ன அதிசயம் இன்னிக்கு. கம்ப்யூட்டர் ல வேலைநு நான் கேட்க ..என் கெட்ட நேரம் அந்த் கேள்வியில் ஆரம்பிச்சது.

 

' நீங்களும் பண்ணிப் பாருங்க ஒரு சாம்ப்பிளுக்கு என்றாள். புதை குழியில் லேசா காலை விட்டேன்.


அட இவ்வளவுதானானு நான் கேட்க..

ஆமாங்க..நான் ஒரு மாசத்துக்கு இது மாதிரி 4 சர்வே செய்தால் உங்க பாங்க் அக்கெளண்ட்டில் மாசம் கரெக்டா 4000 ரூபாய் க்ரெடிட் ஆகிடும் .

ஆட்கள் introduce செய்தால் incentive உண்டு.


ஜொள்ளு விட்டபடி நான்.


அடடே..ஒரு வேலை செய்யாமல் இப்படி வெட்டியா ஒரு சர்வேக்கு/4000 ரூபாயா.?


இப்படி கேட்டதும் அவங்க கதை ஆரம்புச்சா..

இது "Speak Asia" நு பெரிய கம்பெனி.

நாம முதல்ல ஒரு 11000 ரூபாய் கட்டணும்.

நமக்கு மாசாமாசம் 4000 ருபாய் சர்வே முடிச்சத்தும் கிடைக்கும். 


வீட்டுக்காரர் கிட்ட சொன்னதும ' நமக்கு உழைக்கிறதே ஒட்டலை..இதுல இப்படி ஒரு குறுக்கு வழியா..ஏமாந்து போவேனு எச்சரிக்கை எண் ஏத்திட்டாரு.


என் ஃப்ரண்டுக்கிட்டேர்ந்து ஃபோன் மேல ஃபோன். வீட்டுக்கு வரும்போதெல்லாம் 'நான் சொன்னேன் ..நீங்க தான் சேர மாட்டேங்கறீங்க. என் மேல அவ்வளவு தான் உங்களுக்கு நம்பிக்கை யா'னு ஒவ்வொரு முறையும் டென்சன் ஏத்த ஆரம்பிச்சாங்க.


என் பாங்க் விவரமெல்லாம் தர மாட்டேன் என்ற வூட்டுக்காரர் மறுக்க..ஒரு சுப யோக சுப தினத்தில் ப்ரஷர் தாங்காமல் 

புதுசா ஒரு பாங்க் அக்கெளண்ட் ஆரம்பிச்சேன்.


ஆன்லைன் , IFSC code  எல்லாம் கொடுத்தால் தான் 4000 ருபாய் மாசம் லம்ப்பா வரும் என்று தொங்கிய நாக்குடன்.


11000 ரூபாய் கொடுத்ததும் திறந்திடு சீஸேனு சொல்ல login and pass word கிடைச்சது.


முதல் புதன்கிழமை. இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டி உப்பு சப்பிலாத கேள்விக்கு பதில் சொல்லி முடிக்க..ஆகா..வரப் போற முதல் நாலாயிரத்தில் என்னென்ன வாங்கி அசத்தலாம்னு மனசு கண்க்கு போட..


இரண்டாவது வாரம்..முடிஞ்சதும் ..இன்னும் ரெண்டே ரெண்டு..சுளையா நாலாயிரம்..


மூணாவது வாரம் ஏதோ சோப்பு கம்பெனி ஸர்வே.. நல்ல சோப்புனு சர்டிஃபிகேட் கொடுத்து சோப்பு போட்டு..


நாலாவது வாரம்..புதன்கிழமை..

கம்ப்யூட்டரை கும்பிட்டு  log in ,pass word குடுத்தாச்சு. wait for the survey நு சுத்திண்டே இருக்க.. என் வயித்திலும் கொஞ்சம் புளி கரைக்க ஆரம்பிச்சது.


என் தோழி ஃபோன் நம்பர் out of reach.

நாலாயிரம் கனவு கொஞ்சம் கிலியில் இப்போ.


என் வூட்டுக்காரர் கிட்டேர்ந்து ஃபோன்.

 'TV கொஞ்சம் போடறியா.. உன்னோட 'Speak Asia' லட்சணம் மைக் வெச்சு கூவிண்டிருக்கான் பாருனு லைன் கட் பண்ணிட்டார்.


எல்லார் கண்லயும் மண்ணைத் தூவி , பண மூட்டையுடன் Speak Asia ..சத்தமே இல்லாமல்

silent Asia ஆகி..என்னை மாதிரி பலரின் காசை லபக்கிட்டு..விட்டான் ஜூட்..


பிறகு என் ஃப்ரண்டும் தன்னால் தான் பலருக்கும் நஷ்டம் என்று எங்களிடமிருந்து ஒதுங்கி விட்டாள்.

எவ்வளவு முயன்றும் அவளை ்convince செய்ய முடியவில்லை.


சில ஆயிரங்கள் கொடுத்து கிடைத்த ஞானம்.

*பணம் நட்பை முறிக்கும்.

*உழைக்காத பணம் ஒட்டாது.

*peer pressure எல்லோருக்கும் தான்.


*அந்த பணத்துக்கு தங்கமாவது வாங்கி வெச்சிருக்கலாம்.

No comments: