#சண்டே_ஸ்பெஷல்
#படம்_பார்த்து_கதை
கடை(கலப்பட) பலகாரம்
"ஏய் புள்ள..என்ன மச மசனு நிக்குற.சனிக்கிளமை..வியாபாரம் சூடு புடிக்கிற நேரம் எங்கின போய்ட்ட.?"
"இருய்யா..ஒரு மாசமா பஜ்ஜி போடற எண்ணெய் ..ஒரே கசடு..கருப்பா ஆகி கிடக்கு..கொஞ்சமாவது வடிகட்ட வேணாமா..?
கஸ்ட்டமர் பார்த்தாங்கன்னா என்னாவுறது..?
அவள் பேசிக் கொண்டே இருக்க...
வேலு ..மஞ்சூரியனுக்கு காலிஃப்ளவர் வெட்ட ஆரம்பிச்சான்.
நறுக்கும்போதே கப்புனு ஒரு வாடை..நல்ல வளர்ந்த புழுவெல்லாம் மிளகாய்ப் பொடி ,உப்பு மசாலாவோடு சுடும் என்ணெயில் ..
அங்கே வந்த பக்கத்து கடை ரமேஸு..
"அண்ணே உங்க கடையில் சரக்கு எப்பவும் சூப்பருண்ணே ".என்றான் ஜொள் விட்டபடி.
"யக்கா...மீன் வறுவல் ரெடி ஆவலையா?..உன் கடை ஸ்பெசல் அதானே..எனக்கும் ஒண்ணு சூடா கொடுக்கா.".என்றான்.
'எலேய்..அப்பால வா..உனக்கு எடுத்து தனியா வெக்குறேன் "என்று வேலு விரட்டினான்..
எங்கியாவது தன்னோட வியாபார் யுக்தி கண்டுபிடிச்சிடுவானோனு பயத்தில..
வண்டியில் ் அடுக்கி இருந்த ஒரு பையிலேர்ந்து சின்னதும் பெருசுமா..மீன்..( டேய் ..டேய்..அழுகிப் போய் ..நாறுதுடா..தள்ளு வண்டயின் மை.வா)
"ஏ..புள்ள ..அந்த கலர் பொடியை கொட்டு இதுல..
அங்கே கிடக்கு பாரு..மைதா..கார்ன்ஃபளோர் ..
(ஐயோ..அதுல வண்டும் பூச்சியும் இருக்கேனு..வண்டி மை.வாய்ஸில்)
கடலலை பாக்க வந்த யாரும் வேலுவோட தள்ளு வண்டில சாப்பிடாம போக முடியாது..
முக்க்கால் வாசி வித்துப் போச்சு.
"காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது" பாட்டை.விசிலடித்தபடி மூட்டைக் கட்ட ஆரம்பித்தான் மீதி இருந்த எல்லாத்தையும்.
நாளைக்கு இதைக் கொஞ்சம் சரி செஞ்சு ஒப்பேத்திடலாம். ஞாயித்துக் கிழமை கூட்டத்தில் எல்லாம் வித்து போய்டும்.
ப்ளாஸ்டிக் பைகளில் மிச்சம் மீதி ..வெந்ததும்..வேகாததும்..வண்டியை பத்திரமாக மூடி கட்டினான். கல் வைத்து தடை ஏற்படுத்தினான்.
நகரவே முடியாத தள்ளு வண்டி..
நாற்றம் பிடுங்குதே..கடவுளே..
கடல் தாயிடம் வேண்டியது...
"ஒரே ஒரு பெரிய அலை என்னை மட்டும் வந்து அடித்து செல்ல அனுப்பு தாயே..'
நிறைவேறி இருக்குமா..இந்த வேண்டுதல்?
No comments:
Post a Comment