Friday, October 6, 2023

Madhyamar- வாக்காளர் அட்டை

 வாக்காளர் அட்டையும்..வாயில்லாப் பூச்சி நானும்..


எதுக்கும் சும்மா வாங்கி வெச்சுக்கலாமேனு பல விஷயங்கள் நம்ம வீட்ட்ல இருக்கு.

அப்படித்தான்....இந்த வோட்டர் ஐடி கார்டும்.

கல்யாணம் ஆன புதுசுல டில்லி வாசம். ஜுனூன் ஹிந்தி தான் வாழ்வாதாரம்.

கதவை திறக்கவே பயம்.யாராவது எதாவது ஹிந்தில கேட்டு விட்டால் என்ன செய்வது என்று எப்போதும் ஒரே உதறல்.


ஒரு நாள்..என் உப்பரிகையில் நின்றபடி வேடிக்கை பார்த்தபடி இருந்தப்போ..ஒரு ஃபைலும் கையுமா ஒரு வாட்டசாட்டமா ஒரு ஆள் என் வீட்டை நோக்கி வந்தார். கீழே வீட்டுக்கார அம்மாவோடு ஏதோ பேசி விட்டு..படி ஏறி மேல வர ஆரம்பிக்க..என் லப்டப் அதிகரிக்க..வாக்காளர் அட்டை பதிவுக்கு வந்தேன் என்று புரிய வைத்தார்.


அவர் கேட்ட அத்தனையும் ஒன்று விடாமல் நான் ஆங்கிலத்தில் எழுதித் தந்தேன். குடும்ப விவரம் உட்பட. 

வந்தது அட்டை.


கால் கிழமான என் வயதை அநியாயம்.. சாளேஸ்வரம் வயது என காண்பித்த அட்டை.. ஒரு நொடி சுக்கு நூறான இதயத்தை கெட்டியாக பிடித்தேன்.

அடுத்த இடி..என் கணவர் பெயர் ராமசாமி. அவர் அப்பா பெயர் ராம் பகதூர்.

பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கி..

எப்படி இப்படி ஒரு தப்பு செய்ய முடியும் என்றே யோசனை. 

சீனிவாசன் என்று எழுதியது எப்படி ் ராம் பகதூர் ஆனது. 

million dollar question. அதுவும் அப்போது வாக்காளர் பட்டியலையும் அட்டையயும் ஒழுங்குப் படுத்திய சிம்ம சொப்பனம் பதவியில் இருந்த காலம்.

அந்த வோட்டர் ஐடியினால் பெரிதாக ஒரு பயனுமில்லை.


அதே சமயம் விடுமுறைக்காக சென்னை வந்தேன். அப்பா ஒரே டென்சனாக.."ஊருக்கு போறதுக்குள் வோட்டர் ஐடிக்கு formalities முடி என்றார். 

டெல்லியில் வாங்கிட்டேன்ப்பா என்றேன். காதிலே போட்டுக்கவில்லை.

அங்கேயும் போய் க்யூவில் நின்று அழுது வடிந்து ஃபோட்டோ எடுத்து..ஐடியும் வந்தது.


என் டெல்லி அட்டையை ஒருவரும் மதிக்கவில்லை. ' அது  அந்த ஊருக்கு சார்' கேட்டால் பதில் இப்படி.


நாடோடிகளான நாங்கள் அடுத்த ஊருக்கு மூட்டைக் கட்டினோம். டாடா நகர். அங்கேயும் இதே கதை. வோட்டர் ஐடி வாங்கியே ஆகணும் என்று. 


நான் இந்தியாவில தானேப்பா இருக்கேன்னு நான் கேட்ட கேள்விக்கு..முரைப்பு..் பதில்.


அடுத்த மூட்டை தேவ பூமி..Dehradun. அந்த வார்டு கவுன்சிலர் ( டம்மி மனைவி...தேவபூமி ராப்ரி தேவி)

அங்கே தேர்தல் வர..' அண்ணிக்கு உங்க வீட்டு ஓட்டு ..அவசியம் போடணுமென்றார். 


என் டெல்லி, தமிழ்நாடு வோட்டர் ஐடி செல்லாது..இங்கே நான் புதுசா ஒண்ணு இந்த வீட்டு முகவரியில் வாங்கித் தரேன் என்றார். அதே போல ஒரு சுபயோக தினத்தில் "akila ' வை 'akela' ஆக்கி ஒரு வாக்காளர் அட்டை வந்தது..


இப்பொழுது கர்நாடகா. அதே கதை.

 மீண்டும்.


காத்துக்கொண்டிருக்கிறேன் ..

கர்நாடகாவில் கால் பதிக்க..

 அவள் ஒரு தொடர்கதை மாதிரி..


சீட்டுக் கட்டு விளையாடலாம் .இப்படி state to state போனால் .

one India..அப்படினா என்ன சார்?😖

No comments: