பரீட்சைக்கு நேரமாச்சு..
பாசுரம்...போய் இப்போ படிப்புசுரம் பரவி இருக்கும் எல்லா வீடுகளிலும் இந்த மூன்று நான்கு மாதம்.
பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சுரம் மேள தாளத்துடன் தொடங்கியாச்சு.
படி படி என்று ் பாட்டு ஒரு பக்கம்..
பாரு பாரு பக்கத்து வீட்டுப் பையனைப் பாரென்று படுத்தல் மறுபுறம்.
அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் என்று சுயபுராணம் ..
பொதுத் தேர்வு வரும் பின்னே
போகும் நிம்மதி முன்னே..
பசங்களுக்கு அட்வைஸ் செய்வதில் சளைக்காத பெற்றோரே..உங்களுக்கும் சில டிப்ஸ்.
1. நீ தான் இந்த குடும்பத்துக்கே ஒரு bench mark fix பண்ணனும் என்று பயமுறுத்தாதீர்கள்.
2. compare செய்வதைக் கைவிடுவோம்.
அவர்கள் பலத்தை கண்டுபிடிப்போம்
பலவீனத்தை ஓரளவு சரி செய்ய உதவுவோம்.
3. என் பெண்/பைய்யன் இப்படித்தான் செய்தனர் என்ற வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாரும் அறிவுரை அள்ளி வழங்கும் போது..அதையெல்லாம் திணிக்காமல் நிதானமாகச் செயல்படுவோம்்.
4.வேலைக்கு போகும் பெற்றோர் எனில் , study leave சமயத்தில் விடுப்பு எடுத்து அவர்கள் தனிமையை விரட்டுவோம்.
5. time table போடுவதில் help செய்வோம். theory and practical சரி விகி்தத்தில் தினமும் படிக்கும்படி செய்வோம்.
6. every one hour eye exercise and simple hand and leg back stretch exercise செய்யச் சொல்வோம்.
7. காலையில் எழுந்ததும் உடம்பையும் மனத்தையும் ஒருமிக்கும் பயிற்சிகள் செய்ய உதவுவோம். நாமும் கூட செய்தால் அவர்கள் இன்னும் சந்தோஷமாக செய்வார்கள்.
8.படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சின்ன prayer.
' நீ படிச்சதெல்லலாம் அப்படியே கேள்வியா வருமென்று நினைக்காதே.எந்தக் கேள்வி எந்த ரூபத்தில் வந்தாலும் I should be able to apply my wisdom and intelligence while writing my exams. give me the strength and courage 'என்று பிரார்த்தனை செய்ய சொல்லிக் கொடுப்போம்.
9. கடவுளுக்கு காணிக்கை செலுத்தறேன் என்று வேண்டும் முன், என் குழந்தை நல்ல உழைக்கணும்..படிக்கணும் என்ற பிரார்த்தனை முன் வைப்போம்.
10. healthy food is more important. especially say no to oil fried items. salad, fruits , sprouts , dal எல்லாம் சேர்ந்த balance diet கொடுக்கணும்.
பழச்சாறு, இளநீர் வெய்யிலுக்கு இதமாய் தரணும்.
வெளிச் சாப்பாடு கொஞ்சம் தள்ளி வைக்கலாமே
11. குழந்தைகளிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால்..சோர்ந்தோ..தூங்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் மன அழுத்தத்தை குறைக்க வழி வகுப்போம். அதற்காக எப்போது பார்த்தாலும் அறிவுரை வேண்டாம்..ஓடி விடுவார்கள்.
12. டீவி பார்க்காதே, வாட்ஸப் போகாதே, face book ஆ..கூடவே கூடாது என்று சொல்லி விட்டு..நாள் முழுவதும் நாம் அதில் மூழ்கி இருக்கலாமா?
13. சில குழந்தைகளுக்கு பாட்டு டான்ஸ் வரும், சிலர் படம் வரைவர், சிலர் வாத்தியம் இசைப்பர், சிலர் கதை படிப்பார்.stress reliever இவையெல்லாம்.சும்மா எதுக்கு டைம் வேஸ்ட் பண்றனு சிடுசிடுக்காமல் இருப்போம். பிடித்ததை செய்யும்போது மனம் கொஞ்சம் லேசாகும் அவர்களுக்கு.
14. குழந்தைகளுக்கு இருக்கும் பெரிய பயம் ..'என் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே' என்பதுதான்.
பலமாய் இருப்போம் அவர்கள் பயம் நீக்கி.
15. எல்லாவற்றிற்கும் மேலே..ஆதரவாய் ஒரு hug ..அன்பாய் ஒரு pat on the back.
வேறென்ன எனர்ஜி தரும் இதைவிட..
உங்களுக்கு தோன்றுவதையும் பகிருங்கள்.
All the best to the parents and students.
No comments:
Post a Comment