#மத்யமர்_zoலு
நன்றி சொல்லவே எமக்கு வார்த்தையில்லையே.. மத்யமர் zoom team க்கு..
ஹேய்..அகில்..சுண்டல் பண்ண வரியா..மத்யமர் zoலு வில் நு கீத் மாலா கேட்டதும்..கிண்டல் பண்ணாதம்மா நானே ஏதோ குண்டக்க மண்டக்கனு செய்யற ஆளு.. அதை விட..என்னோட இண்டர்னெட் ஒரே பிரச்சனைப்பா..நான் ஜூட் ..அப்படினு ஜகா வாங்க..
Try தான் பண்ணேன்..அப்படி உனக்கு connection கட் ஆகினால்..நாங்க..வேறே back up வெச்சுப்போம்..
#Point_no_1: எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும்..#planning எத்தனை முக்கியமோ..அதை விட முக்கியம் #backup and #Plan_B.
உடனே மெசஞ்சரில் ஒரு க்ரூப் . ஒரு trial link. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்..நம்ம வீட்டு lighting position எல்லாம் சரியா இருக்கானு checking. மொபைல் எப்படி வெச்சுக்கணும் . எப்படி mute and unmute பண்ணனும்..வீடியோ எப்படி காண்பிக்கணும்..
( இது கூட தெரியாதா..இதுக்கு போய் ஒரு trial தேவையானு கேட்கலாம்..தேவை)
#Point_No_2: #Practice_makes_things perfect.
ஆயிரம் ஐட்டம் தெரிந்தும் ..இந்த ப்ரோக்ராமுக்கு என்ன செய்யலாம்னு மண்டை குடைஞ்சிங்.. கடைசியா ஜாலம் காட்டலாம் வா என்று கண்ணடித்த ஜவ்வரிசி..
#Point_No_3: #Choosing_from_alternatives_and_decision making. ரொம்ப முக்கியமுங்க.. நம்ம மத்யமர் அட்மின் and zoom team க்கு பெரிய applause👌👏👏👏
நாலு பேருக்கு நன்றி.. இங்க ஆறு பேருக்கு நன்றிநு பாடணும்.
அந்தக் காலத்தில் வீட்ல ஒரு கல்யாணம் என்றால், நான் நீனு எல்லாரும் எடுத்துப் போட்டு செய்தது போல..இங்கேயும் radha, bala ,geethu, revathi and jayanthi ram,Shankar sir,..அப்பப்பா..எந்தக் குறையும் இருக்கக்கூடாதுனு ,ஒவ்வொரு minute details பார்த்து..ஷ்..அப்பா..பெரிய salute இவங்களுக்கு
#Point_4: #sharing_Responsibility.
அதெல்லாம் சூப்பரா வரும்ப்பா..சிங்கிளா வந்து கர்ஜித்த நம்ம ராதா..
#உற்சாக_ஊற்று .
ராதே ராதேனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி..#zoom_பாதை_காட்டிய bala
எல்லாரும் சூப்பரா பண்ணுங்க...revathi Balaji சொல்லும்போது.. மனசுக்குள் ஒரு தெம்பு..
இதெல்லாம் சரி..
வீட்ல..instructions..
எல்லாரும் WiFi உங்க ஃபோன்ல ஆஃப் பண்ணிடுங்க..
யாரும் குறுக்க குறுக்க நடக்காதீங்க..
எல்லாரும் அவங்க அவங்க காதில் ear phone போட்டுக்கோங்க..
Orange புடவையில் ரெடியாகிட்டு ..
"டேய் மறந்தே போய்ட்டேண்டா ..இரு perfume போட்டுண்டு வந்துடறேன்..' நான் சொல்ல..என் பொண்னு ஒரு லுக்கு விட்டா பாருங்க..
இந்த ஒரு மூணு நிமிஷ ப்ரோக்ராமுக்கே உன் அலப்பறை தாங்கலையேனு ...
சந்தோஷத்தில் எல்லா வேலையும் என் பொண்ணு செஞ்சுட்டா..
இப்போ #ரெசிபி..
#ஜவ்வரிசி_பாசிபருப்பு_சுண்டல்
ஜவ்வரிசி- 1 1/2 கப்( நல்லா wash பண்ணி 1 டம்ளர் தண்ணீரில் over night or 8 hrs ஊற வைக்கணும்)
பாசி பருப்பு -1/4 டம்ளர்
சும்மா பேருக்கு ஒரு 10 கடலை பருப்பு..( இரண்டும் சேர்த்து ஒரு 4 மணி நேரம் ஊற வைக்கணும்)
நான் குக்கரில் பருப்பை வேக வைக்கலை..அதனால் தான் extra time ஊறவைத்தேன்.
இப்போ very simple.
கடுகு,பச்சை மிளகாய், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து இந்த ஊறின பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கணும்.
Then add ஜவ்வரிசி. ஜவ்வரிசி ஜம்முனு 💎 போல மின்னும்.அப்புறம் கொத்தமல்லி..அவ்வளவுதான்.
இந்த ஒரே ஐட்டம்..பல டிஷ்ஷுக்கு base.
இந்த சுண்டல்..
எண்ணெயில் போட்டால் #வடை
தவாவில் போட்டு பிரட்டி எடுத்தால் #கட்லெட்.
அதையே..ப்ரெட் நடுவில் #sandwich..
Sprouts,, தேங்காய், மாங்காய் ,கடலை, ஓமப்பொடி சேர்த்து சாப்பிட்டால் #chaat.
ஒரே ஒரு #தத்துவம்:
வெள்ளை கலர் ..மற்ற கலர்களோடு சேரும்போது .. எப்படி அந்த வண்ணங்களை தூக்கி நிறுத்துகிறது பாருங்கள்.
அது போல.
.#மத்யமர்_என்ற_க்ரூப்பில்_சேர்ந்த #எல்லாரும் #மின்னலாம் #ஜொலிக்கலாம்..
#ஒரே_ஒரு_ingredient..எத்தனை உருவமாக மாறுகிறது..மகிழ்ச்சி அளிக்கிறது.
நம்ம வாழ்க்கையும் ஒரே முறைதான்.
அதனால்..முடிஞ்ச வரை நாமும் சந்தோஷமா இருப்போம்..நம்மை சுற்றி இருக்கும் எல்லாருக்கும் சந்தோஷம் கொடுப்போம்.
நானும் ரொம்ப தயங்கினேன்.பயந்தேன்..ஆனால் மத்யமர் zoom team கொடுக்கும் உற்சாகம் இருக்கே..அதுக்கு ஈடு இணை இல்லை..
எல்லாரும் வந்து participate பண்ணுங்க..
அது ஒரு அருமையான அனுபவம்..
Miss பண்ணாதீங்க..
உங்க பேரைக் கொடுங்க போதும்..
அவங்களே உங்க கையைப் பிடித்து ..வேறு ஒரு புது உலகம் காண்பிப்பார்கள்.
இந்த கொலுவை கலகலனு லகலகலகனு நடத்தும் நம்ம மத்யமருக்கு
கவலை போக்கும் இந்த தளத்துக்கு..
மீண்டும் மீண்டும் நன்றி..
Geethmala Raghavan Bala Sivakumar Revathi Balaji Shankar Rajarathnam sir, Radha Sriram ,Jayanthi ram
Thanks a ton for the opportunity. Lot of learning in just two days.🙏🙏
No comments:
Post a Comment