Friday, October 6, 2023

Madhyamar- வருஷ பிறப்பு

 இருந்துட்டு போகட்டுமே ..எதெல்லாம்?


ஹேவிளம்பி ஓடியேப் போச்சு..

விளம்பி நான் வந்தேன் ..உன்

வாசலில் வளமெல்லாம்

 வாரி வழங்க என்று.


எல்லா நாளும் ஒரே மாதிர் போச்சா என்ன?

கஷ்டம் வரும்போது ' ஏண்டா என்னைப் படைச்சேனு' கத்தலும் கதறலுமாய் கடந்திருக்கோம்


சந்தோஷமா இருக்கும்போது

..'ஊ..லலலா..ஊ ..லலலா ' நு விசிலடிச்சு இருக்கோம்.


எல்லாத்துக்கும் நம் மனசே பிரதானம்.


அடைசல் இல்லாத வீடு ஒண்ணு இருக்கா?

அப்பழுக்கற்ற மனம்னு ஒண்ணு இருக்கா?

ஒரு குப்பையைத் தள்ள..இன்னொன்று வந்து சேரும்..சரிதானே?


மனமும் மனையும் நிறைய ஒத்துப்போகும்.


மனசு என்கிற ஷெல்ஃபையும் அப்பப்போ சுத்தம் செய்யணும்..


ஒரு சின்ன self appraisal செய்வோம். 

போன வருஷம் காட்டிய கோபம், கொட்டிய அன்பு, கொப்பளித்த ஆணவம், பொங்கிய இரக்கம், பெற்ற பேரானந்தம், கை கொடுத்த நட்பு, பேசிய நல்லவை கெட்டவை, செய்த / பெற்ற உதவி, பொருமச் செய்த பொறாமை ,ஆட்டுவித்த அகங்காரம், காத்த அமைதி, காட்டிய கனிவு, பேசிய பொய்கள்...இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டிலிருந்து..


'இருந்துட்டு போகட்டும் 'எப்போதும் என்னுடன் என்று ..எதையெல்லாம் இன்னும் கைப்பற்றி கை பிடித்து செல்லப் போறோம்?


இனிமே இது எனக்கு வாழ்க்கைக்கும் வேண்டாம்னு எதை தூக்கி விட்டெறியப் போறோம்.


நம் வாழ்க்கை நம் கையில் தானே?


 ஒரு சின்ன fine tune செய்ய ஆரம்பிக்க வாழ்க்கை எனும் சங்கீதம் ஆனந்தராகமாக நகரும் தானே?


இந்த விளம்பி வருஷம் எல்லா இன்பமும் வளமும் அள்ளித் தரணும்.

மனங்கள் விரியணும்..அன்பு 

மலர்கள் பூக்கும் சோலையாக

மனிதம் தழைக்கணும்.


இந்த முறை இந்த மத்யமர் மூலமாக ஆயிரக்கணக்கான நட்புக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் பாக்கியம் பெற்றேன்.

மிக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நட்பூஸ்..

No comments: