இந்தாம்மா..என்னோட மொபைல ஒரு 2 hours க்கு என்கிட்ட காண்பிக்காதே.
வெளில போனா கூட எடுத்துண்டு போய்டு..எனக்கு வேண்டாம் கொஞ்ச நேரத்துக்கு.
கொஞ்சம் கோமாவில் போய்ட்டு ' நான் எங்கே இருக்கேனு' கேட்க..
ஹலோ....ஹலோ அம்மா..ஓவரா ஆக்ட் இப்போ எதுக்கு ..?
just இந்த ப்ராஜக்ட் முடிக்கற வரைக்கும் உன்கிட்ட இருக்கட்டும்னு தரேன்..
நான் ரொம்ப பவ்யமா..' கண்ணா..இது உனக்கு எப்போ குடுத்த ப்ராஜக்ட்..ஒரு 15 நாள் முன்னாடியே சொன்னியே அதுவா..இது...கொஞ்சம் முன்னாடியே முடிச்சிருக்கலா...மே...'
வாக்கியம் முடிக்கல..'நீயா" ..படம் expression ஞாபக படுத்திக் கோங்க இந்த இடத்தில..
'அம்மா..உன்னை மாதிரியா..மத்யமர்ல "மண்டே ஸ்பெஷல்" போஸ்ட்டுக்கு announcement வந்ததுமே எழுத ஆரம்பிச்சு..ஊருக்கு முன்னாடி over enthu ஆ Sunday ராத்திரியே போஸ்ட்டை போடறத்துக்கு... ?
அது வந்து...நான் இழுத்தபடி..' உனக்கென்னடா.இது ஒரே ஒரு ப்ராஜக்ட் ..இப்போ பாரு ..மண்டே ஸ்பெஷல் முடிச்சிட்டேனா..எல்லார் பதிவும் படிக்க வசதியா இருக்கும்.. கமெண்ட் எழுதி எழுதி என் விரலே வீங்கி போச்சு பார்னு சோகமா என் முகத்தை ..வைக்க..
பளீரென ஒரு பல்பு..
ஐயோ மறந்துட்டேனே..' post of the week ' க்கு nomination வேற குடுக்கணும்....
நீ போய் வேலையை முடி' நான் சொல்ல..
உன்...னை........திருத்தவே ..சொல்லியபடி ரூமுக்குள் தஞ்சம்.
என்ன நட்பூஸ்.. எல்லாரும் கொஞ்சம் போய் போன வார சிலபஸ் படிக்கலாமா?
No comments:
Post a Comment