Friday, October 6, 2023

Madhyamar-வற்றாத வேண்டுதல்கள்

 வற்றாத வேண்டுதல்கள்


கோயிலில் இப்போதெல்லாம் ரொம்ப கூட்டம்.

குட்டி வாண்டுகள் ..கோணலாய் சாய்ந்து சாய்ந்து நவக்கிரகம் சுற்றும் அழகை ரசித்தபடி நான். அங்கே ஒரு உரையாடல்.

'அம்மா ..9 சுத்து சுத்திட்டேனா என்று கேட்க..இன்னும் 2 இருக்குடானு' வேண்டுதலகள் வேகமா நடக்கும் நேரம்.


😖 குழப்பத்துக்கு நடுவில அந்த குழந்தை பரீட்சை எழுதி சோதனை எல்லாம் கடந்து  வந்ததே சாதனையா இருக்கே. பரீட்சை முடிந்தாலும் வெட்டப்பட்ட சிறகோடு சிறுவர்கள்.


இந்தக் காலக் கட்டம் ஒரே டென்சன் மயம்

அவனின்றி ஓர் அணு்வும் அசையாது. அதுக்காக..அவன் மேல பாரத்தை போட்டு நாம் பராக்கு பார்த்துண்டு இருக்க முடியுமா?


முதல்லேயே சொல்லுடுவேன் பசங்க கிட்ட..உழைச்சு படிக்கணும். உடைக்கும் தேங்காயில் ஒண்ணும் கிடைக்காதென்று.


என் வேண்டுதல் நாலு stage ஆ பிரிச்சுடுவேன். சுவாமிக்கு குழப்பம் வரக்கூடாது பாருங்க


first stage: போர்ட் எக்ஸாம் வருஷம் அடியெடுத்து வக்கும் போது..

நல்ல பாடம் சொல்லித் தர டீச்சரா வரணும்.

அவங்க பேசறது இவங்களுக்கு புரியணும்.

hard work பண்ண்ணும்.ஹாய்யா மொபைல் நோண்டாமல் இருக்கணும்.நல்ல நட்பு கிடைக்கணும். 

 ...இப்படி பெரிசா ஒரு லிஸ்ட்


second stage: exam நேரத்தில்..

உடம்பு படுத்தாமல் இருக்கணும்.

எலெக்‌ஷன் வராமல்் இருக்கணும்.

பந்த் எதுவும் நடக்காம இருக்கணும்.

பேப்பர் லீக்காகாமல் இருக்கணும்.(/இது main)

படிச்சது மறக்காமல் இருக்கணும்

formula ஞாபகத்தில் வரணும்

silly mistake செய்யாம இருக்கணும்.

சுத்தி வளைச்ச கேள்விக்கும் நச்சுனு பதில் எழுதணும்.(உஸ்...அப்பாடா..)

extra sheets எல்லாம் exclude ஆகாம இருக்கணும்.


third stage: அதிலதான் இப்போ எல்லாரும் இருக்காங்க.

திருத்தும் டீச்ச்சரின்  திசை பார்த்து ஒரு கும்பிடு போடணும்.

மூட் அவுட் ஆகாம இருக்கணும்.

முழு பேப்பரும் கரெக்ட் பண்ணணும்.

key word வைத்து திருத்தினாலும்

common sense உபயோகித்த பதிலையும் consider பண்ணனும்.

 grace marks என்று govt சொன்னதை

grand total ல் சேர்க்கணும்.

data entry செய்பவர் drowsy ஆ இல்லாமல் இருக்கணும்.

ஒத்த பேப்பர் ஊரெல்லாம் சுத்துதே..

சித்தம் வையப்பா.. 

centum இல்லாட்டியும் சீட்டு கிடைக்கற அளவு மார்க்கு போதும்.

( இது எப்படி நம்ம கொக்கி)


result வந்ததும் revaluation க்கு கொடுத்து restless ஆகாமல் இருக்கணும்..


( சுவாமியின் மை.வா 'ஐயோ..போதும்மா போதும்..நான் பார்த்துக்கறேன்.ஆளை விடு')


last stage: திக் திக் திக் ..result day.

site open ஆகணும்.


சேதியும் நல்லதா வரணும்..

வேணடு்தல் முடிக்க வா போகலாம் என்றால் ' ப்ளீஸ் ..ப்ளீஸ் ..நீயே போய்ட்டு வாம்மா என்றும் கெஞ்சும் பிள்ளைக்கு proxy கொடுக்கணும்.


பாலும் பழமும் படைத்து விட்டு

பார்த்துக்கோப்பா..பகவானே

புதுசா போகப் போகும் ஸ்கூலோ/காலேஜோ பத்திரமா இருக்கணும்..

மறுபடியும் ஆரம்பிக்கும் முத்ல்லேர்ந்து வேண்டுதல்.


இந்த பொன்னான அக்‌ஷ்ய திருதியையில் யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதையெல்லாம் அள்ளித்தா..தேவி

 அமைதியும் அன்பும் ஓங்கி வளர ..நீர்நிலைகள் எல்லாம் பொங்கி பெருக்கடுத்து ஓட..எல்லாவற்றையும் விட மனிதம் மனித நேயம் வளர ..

அள்ளித்தா உன் அருளை தேவி

No comments: