Fair & lovely..
இன்னிக்கு காலையில் அலாரம் அடிக்கும்போதே..on this day last year என்று என் google photos ஒரு சில ஃபோட்டோக்களை முன் வைத்தது. அதில் ஒரு படம் என்னை கொஞ்சம் flash back கூட்டிக் கொண்டு போச்சு.
கண்கொட்டாமல் பார்த்தேன் அந்தப் படத்தை..எத்தனை அழகு..கோலி குண்டு கண்..பிங்க் உடையில் சுத்தி சுத்தி வந்து என் மனசை கொள்ளையடிச்சியே.
இப்போ நீ எப்படி இருக்கே..அதே துறு துறுனு..அதே வேகத்தோட ஓடியாடி உன் எசமானியை வேலை வாங்கிண்டு இருப்பியா .
ஐயோ..மறந்தே போய்ட்டேன்..இப்போ நீ என்ன கலர்ல இருக்க..உன்னைப் பார்க்க ஆசையே இருக்கேனு உன் எசமானிக்கு ஃபோன் போட்டேன்.. ஒரு மரியாதைக்கு அவளை நலம் விசாரிச்சேன்..அப்புறம் உன்னைப் பத்திதான் பேச்சு..உன் குறும்பு இப்போ ரொம்ப கூடிப் போச்சாமே..
தயங்கித் தயங்கி கேட்டேன்..' இப்போ பிங்க் கலரில இருக்கா.இல்ல மாத்திட்டீங்களானு'.
உன் எசமானிக்கு பிடிச்சு போச்சாம் உன்னோட பிங்க் கலர்..அதான் அப்படியே இருக்கட்டும்னு நிறத்தை மாத்தாமல் விட்டுட்டேன் என்றாள்.
'அப்போ..அந்த கலர் மாத்தற சாப்பாடு குடுக்கிறதில்லையானு கேட்டேன்..அதுக்கு அவள்..இல்ல இப்போ அதே கலர் இருக்கறதுக்கு நல்ல சாப்பாடு கொடுக்கிறேன் ' என்றாள்.
என்ன..எல்லாரையும் மண்டையை பிச்சுக்க வெச்சுட்டேனா..
இதுதாங்க போன வருஷம் நடந்தது.
ஒரு தோழி வீட்டுக்கு போய் இருந்தேன். எப்பவும் வரவேற்கும் அவள் வீட்டு fish tank. ஒரு giant size fish (angel fish நு சொன்னா) வேகமா விளையாடிண்டு இருந்தது.
Florence ..இங்கே வா..விரலால் கண்ணாடிக் கூண்டைத் தட்ட..வாயைப் பிளந்துண்டு ஓடி வந்தது..
Sudden ஆக strike ஆச்சு..
மூணு மாசம் முன்னாடி வந்தப்போ ஒரு black fish இருந்ததே அது என்னாச்சு .கவலையோட கேட்டேன்.
நான் சற்றும் எதிர்பாராத பதில் சொன்னாள். ஐயோ அகிலா ..அதே fish தான் இது என்றாள்..கருப்பு எப்படி colorful ஆ மாறித்து..ஆச்சரியத்தில் நான்..
அதற்கு அவள் சொன்ன பதில் ..
கருப்பை பார்த்து போரடிச்சது. கடைக்காரன் ஒரு புது fish feed கொடுத்தான். அதை சாப்பிட ஆரம்பிச்சதில இது இப்படி அழகா மாறிடுத்து என்றாள்..
அடுத்தது beauty parlour கூட்டிப் போகும் உத்தேசமிருக்கா.
கிண்டலா கேட்டாலும்..கலங்கியது மனசு.
அடப் பாவிகளா..
மூவாயிரம் cream வித்து முழு லாபம் சம்பாதிச்சீங்கன்னா இப்போ இந்த வாயில்லா ஜீவனையும் இப்படி வதைக்கிறீங்களே..
மூஞ்சி எல்லாம் இப்போ முன்னோர் மாதிரி மாறிண்டு நாங்க படற கஷ்டம் போதாதா..?
அந்த feed அதுக்கு வேற என்ன கஷ்டம் கொடுக்கிறதோ தெரியலையே..இல்ல அதுக்கும் இந்த taste பிடிச்சு போச்சானு தெரியல..
தண்ணீரில் மீன் அழுதால்..
கண்ணீரை யார் அறிவார்..
நீங்க அழறீங்களா..சிரிக்கிறீங்களா..
ஒண்ணும் புரியலையே boss..
Totally confused..
(This was the first time i heard about a fish feed to make it fair and lovely. That's why i thought of sharing).
இப்போது கூகிள் செய்து பார்த்தபோது இந்த மாதிரி உணவுகள் நல்லதா கிடைக்கிற மாதிரி போட்டு இருக்கு.
எதோ வாயில்லா ஜீவன் சந்தோசமா இருந்தா சரி.
No comments:
Post a Comment