Friday, October 6, 2023

Madhyamar- அன்னையர் தினம்

 #அன்னையர்தினம்


அம்மா..அம்மா..சீக்கிரம்.வாயேன்..நீனா ஆண்ட்டி வீட்டில rose petal மாதிரி ரெண்டு குட்டி பாப்பா வந்திருக்கு.


 எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?

ஓ..வந்தாச்சா..கேட்டபடி நானும் என் பக்கத்து வீட்டு தோழிகளும் ஓடிப் போய் பார்க்கப் போனோம்.


நீனாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். எங்களைப் பார்த்ததும் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.


 ஆனந்தக் கண்ணீர். வார்த்தைகளுக்கு அங்கே இடமில்லை.

ரெண்டு கையும் மேலே தூக்கி தூங்கியபடி ரெண்டு பெண் குழந்தைகளும் ..கண் மூடி ஆனந்த உறக்கத்தில்..


நீங்க எல்லாரும் தான் எனக்கு உதவி பண்ணணும் இவர்களைப் பார்த்துக்க என்று அவள்  சொன்னதும் எல்லாரும் நான் நீனு போட்டி போட்டு அவளுக்கு உதவ ரெடியானோம்.


பின்ன... பன்னிரெண்டு வருடம் ஆச்சு நீனாவுக்கு திருமணமாகி. அவளுக்கு பிறகு  திருமணமாகி வந்தவர்கள் குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்க..

இவளும் இவள் கணவரும் போகாத டாக்டரில்லை..கேட்காத ஜோசியமில்லை..கோயில் குளம் என்று செய்யாத பரிகாரம் இல்லை..

ஐவிஎஃப் செய்தும் பலனில்லை.

 நீனாவின் கருப்பை பலவீனம் என்றும் தெரிய வந்தது.உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் கருத்தரிக்க முடியாத சூழல்.


தத்து எடுத்துக் கொள்ளலாமே என்று சில காலம்  தேடி அலைந்தனர்.


பின்னர் யார் மூலமாகவோ தகவல் திரட்ட வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறலாம் எப்று முடிவாகி, சட்ட ரீதியாக என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்து  அந்தப் பெண்ணை ஓடி ஓடி கவனித்து ..

பிரசவ வேதனை என்பதை 10 மாதமும் ஒவ்வொரு நொடியும் தவித்த நீனா..


அந்த மகராசியை நான் வாழ் நாளில் எப்படி மறப்பேன் என்று கையில் இரு மலர்களை அள்ளியபடி நீனா.


( இதற்கு பின் ஒரு பெரிய ஏஜென்சி உண்டு, கமிஷன் உண்டு ,பணம் உண்டு..எல்லாம் இருந்த போதிலும் ..பெற்றுக் கொடுத்த அந்த அன்னை, பெற்றுக் கொண்ட ஒரு அன்னை..இவர்கள் தான் என் கண்களில்..)


அம்மா..அம்மா..நீனா ஆண்ட்டிக்கு ஏன்ம்மா உன்னோடது மாதிரி வயிறு குண்டாகவே இல்லைனு ..பாப்பா மட்டும் வந்துடுத்தே ' என்று என் குட்டிவால்  கேட்டபோது ..என்ன சொல்வதென்று திரு திருனு விழித்தபடி நான்.


அன்னையர் தினம்..அனுதினமும் தான்.

No comments: