Friday, October 6, 2023

Madhyamar- சந்தை

 சந்தை தரும் சந்தோஷம்..


மத்யமரில் திங்கள் சந்தை தினம்..என்னையும் கொஞ்சம் பின்னோக்கி போக வைத்தது.


நகரத்தை விட்டு நாட்டு வாழ்க்கை ஆரம்பித்த நாட்கள்..


year 2000. 

என் வீட்டுக்காரருக்கு ட்ரான்ஸ்ஃபர் மத்தியப்பிரதேசத்தில் மண்டலேஷ்வர் என்ற  குக்கிராமத்திற்கு.( அலைபாயுதே வில் வரும் சிநேகிதனே பாட்டு ஷூட்டிங் எடுத்த பக்கத்து ஊர்)

நர்மதை நதியின் கரையில் , வாசலில்  விந்திய மலை  தெரியும் ரம்மியமான ஒரு இடம்.


ஆனால்..நகரத்தில் இருந்துவிட்டு ..,ஒரு பொருள் வாங்க வேண்டுமெனில் ஒரு பெரு முயற்சி எடுக்கணும்..

யாராவது கடை த்தெரு போறாங்களானு கண் கொத்திப் பாம்பா காத்திருக்கணும் பஸ் ஆட்டோ எதுவும் கிடையாது. 


ஆஃபீஸ் போற போக்கில் இவரு ' இன்னிக்கு சந்தைக்கு போய்ட்டு வா..வண்டி எல்லாரையும் கூட்டிண்டு போகும்' நு சொன்னார். நமக்கு உடனே 16 வயதினிலே கமலும் காந்திமதியும் பழைய நினப்புதான் பேராண்டினு பாட ஆரம்பிச்சுட்டாங்க.


மத்யானம் 2 மணிக்கு ஹார்ன் வேகமா அடித்தபடி கம்பெனி வண்டிகள் ஏதோ பரேட்டுக்கு கிளம்பறாப்போல எல்லாருக்கும் wake up call கொடுத்துண்டே போச்சு. ஒரு ஒரு வீட்டு வாசலிலும் நின்னு எசமானியம்மாவை எல்லாம் ஏத்திண்டு ..

எல்லாரும் ஏதோ பிக்னிக் போற உற்சாகத்தில் பயங்கர அலங்காரத்துடன்.


எல்லார் கையிலும் கோணிப் பை அளவுக்கு பெரிய பெரிய பைகள். நானோ நகர வாசத்தில் இருந்ததனால் எப்போதும் போல

பர்ஸ் பெரிசாவும்..பை சின்னதாகவும் ..

அதுதானே சிட்டி லைஃப்.


சந்தைக்குள் நுழையும் முன்னாடி எல்லாரும் கரெக்டா திரும்பி எங்கே வரணும்னு பேசியபடி அவரவர் தொழிலை கவனிக்க போயாச்சு. 

நமக்கு அந்த ஊர் நிமாடி பாஷையும் புரியல. 'காந்தா லோ'..'காந்தா லோ' ஒரே கூவல். என்னனு புரியாம போய்ப் பார்த்தால் நம்மூர் வெங்காயம்..கிலோ எவ்வளவு என்று ஹிந்தியில் கேட்க ..பதில் சொல்லத் தெரியாமல் போர்டை திருப்பி காண்பிச்சார் கடைக்காரர்..எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுத்து.


5 கிலோ ..5 ரூபாய்..மேம்சாப்..10 கிலோ வாங்கிக்கோ என்றார். 10 கிலோவா..நான் என்ன செய்வேன் அதை வெச்சு..யோசிச்ச வேளை இவர் கூட வேலை செய்பவரின் மனைவி ' வாங்கிக்கோங்க..அடுத்த வாரம் வண்டி வராது..இப்ப வாங்கறது இன்னும் ஒரு மூணு வாரத்துக்கு ஸ்டாக் வெச்சுக்கணும் என்றாள்.


தக்காளி, பச்சைப் பட்டாணி, காரட், பீன்ஸ், டிண்டா, உருளை, கொத்தமல்லி ,பழங்கள் எல்லாம் அள்ளி வாங்கியாச்சு.


பை பத்தாமல் போய் அங்கேயே ஆபத்பாந்த்வனாக பை கடைக்காரரிடம் ஒரு நாலஞ்சு பை வாங்கி ரொப்பியாச்சு.


குச்சி மிட்டாய்க் கடை, ,'முதல் மரியாதை' படத்தில வர மாதிரி ஃபோட்டோ ஸ்டூடியோ, சின்ன ராட்டினம், குழந்தை களின் சந்தோஷம் , அங்கே சைடில் சைட் டிஷ்ஷுடன் சப்பாத்தி பண்ணி குடும்பத்துக்கு கொடுத்தபடி வியாபாரத்தை கவனித்த பெண்கள் துணிக் கடையெல்லாம்  கும்பல் கும்பல்.. அழகழகான சோஃபா கவர்கள், மிதியடிகள், கைவினைப் பொருட்கள்..


அடடா..சொல்ல மறந்துட்டேனே chanderi saree கடைகள். 

saree க்கு ஒரு sorry சொல்லிட்டு அப்பறமா நிதானமா வரேன்னு மனதை தேற்றியபடி

எல்லாம் முடிச்சு மீண்டும் நாய் வண்டில ஏறி வீடு வந்தாச்சு.


ஒரே மலைப்பு. ஹால் முழுக்க கல்யாணத்துக்கு வாங்கின அளவு காய்கறிகள் பழங்கள் கவ்ர்ந்திழுத்த கைவினைப் பொருட்கள்.


fridge என்னைப் பார்த்து ஒரு frightening look கொடுத்தது. மூச்சு விட கூட இடம் இல்லாமல் இப்படி முழசா உயிரை வாங்கறியேனு ஒரே புலம்பல்.


எசமானர் வீட்டுக்கு வந்தார். பெருமையா என் ஷாப்பிங் அனுபவத்தை சொல்ல..' எத்தனை டுமீல் விட்ட' என்றார்.

ஆமாம்ல..ஒரு நூறும் ஒரு ஐம்பதும்  எடுத்த ஞாபகம். (அடிக்கடி பர்ஸில் கை விட்டு அகழ்வாராய்ச்சி பண்ண வேண்டாமேனு தான்.

அங்கங்கே வாங்கிய சில்லறையை கையில் நுணுக்கிண்டுனா எல்லாத்தையும் வாங்கினேன் என்று அதிர்ச்சியில் பர்ஸில் கை விட ..எடுத்துச் சென்ற ஐநூறில் முழுசா முன்னூறைம்பது ரூபாய் ..நான் இங்கேதான் இருக்கேன்னு எட்டிப் பார்க்க..


முதல் முறை இப்படி ஒரு அனுபவம் .மறக்கவே முடியாது.


அப்பறம் west Bengal ல் bagmundi என்ற ஊரின் சந்தை..டாடா நகரின் எல்லையின் சந்தைனு..

சந்தை சந்தையா..சந்தோஷமா சுத்தினது போக..இப்போ நேரம் கிடைக்கும் போது ஓசூர் உழவர் சந்தைக்கும் போய் அள்ளி வருகிறேன்.


technology is so improved..online shopping எல்லாம் நம் வாழ்க்கையில் எத்தனை வசந்தங்கள் வேலை வாய்ப்புகள் தருகிறது என்பதை மீண்டும் 

வேம்பு இலையிலிருந்து..variety கிடைக்கும் இந்த மத்யமர் சந்தையில் பார்த்த போது ..


மகிழ்ச்சி..மடங்கானது என்பதை சொல்லவும் வேண்டுமா..

No comments: