Friday, October 6, 2023

Madhyamar-தோல்வி

 தோல்வி நிலையென நினைத்தால்..


Swaminathan Ramasubramanian    sir பதிவைப் படிச்சதும் மீண்டும் என் நெஞ்சை அழுத்திய நினைவு..


போன வருஷம் பொதுத் தேர்வுக்கு சில மாதங்கள் முன் ஒரு நாள்.


ட்யூஷன் முடிந்து வந்த என் பெண்.' இப்ப ஒண்ணு நடந்திருக்கு ..இன்னும் எத்தனை பேர் இந்த மாதிரி ஆகப் போறோமோ..இன்னிக்கு அவன் தைரியமா செஞ்சுட்டான்..நாளைக்கு யாரோ'

படபடனு பொரியவும் என் படபடப்பு மிக அதிகமாச்சு.

புரியும்படியா சொல்லும்மா..என்ன ஆச்சு என்று கேட்க..கேவிக் கேவி அழுகையுடன் அவள் வகுப்புத் தோழன் பேர் சொல்லி

 ' அம்மா..அவன் இருக்கானே..என்ன காரியம் பண்ணிட்டான் தெரியுமா?. 


'I quit ' நு பெரிய பேப்பரில் எழுதி வெச்சுட்டு அவன் அபார்ட்மென்ட் 9 th floor லேர்ந்து குதிச்சிட்டான்மா..அவன் அம்மா அவனை கோச்சிங் க்ளாஸில் கொண்டு விடறதுக்காக பேஸ்மெண்ட்டில் ஸ்கூட்டியுடன் காத்திருக்க..யாரோ ஓடி் வந்து இடியாய் செய்தி சொல்ல..


வீட்டின் ஒரே விளக்கு அணைந்தது. 


அவன் அப்பா அம்மாவும் அவன் இஷ்டத்துக்கு அவன் படிப்பை தேர்வு செய்ய சொன்னவர்கள் தான்.


 எப்படியெல்லாம் support கொடுக்க முடியுமோ அதெல்லாம் கொடுத்தவர்கள் தான்.( மகள் சொல்லித் தெரியும்)


தவறு எங்கே..ஏன் அந்த முடிவு?

ஏதோ ஒரு டெஸ்ட்டில் கம்மி மார்க் வாங்கி இருக்கலாம். போனால் போகட்டும் அடுத்த முறை சரி பண்ணிக்கோ என்று சொல்லும் பெற்றோர் தான் இப்போது அதிகம்

what drove him to such an extreme step?


இது புரியாத புதிர்..(இப்போதே சொல்லிடறேன் ..காதல் தோல்வி எல்லாம் இல்லை. சின்ன டெஸ்ட்டில் கூட கம்மி மார்க் வாங்கினால் சோர்ந்து விடும் குணமாம் அவனுக்கு்)


இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு peer pressure  ஒரு பக்கம்.


நம்மால் நம் பெற்றோர் தலை குனியாமல் இருக்கணுமே என்று இன்னோரு pressure. 


எல்லாரும் போல நம்மால் நம்ம அம்மா அப்பாவை சந்தோஷமாக்க முடியுமா..

இந்த நினைவு அவன் முடிவுக்கு காரணமா..

தெரியல


கொஞ்ச நாளைக்கு திக் திக் என்று மனசு அடிக்கும். கடவுளே குழந்தைகளுக்கு நல்ல புத்தி கொடு . wisdom கொடு என்று வேண்டுதலோடு உறக்கம் வர மறுத்த நாட்கள் எத்தனையோ.


இப்போ இருந்திருந்தால் அவனும் ஜம்மென்று ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆக வலம் வந்திருப்பான்.


கனத்த மனத்துடன் என் பெண்ணிடம் கேட்டென்..' அந்தப் பையன் அப்பா அம்மா இப்போ எப்படி இருக்காடா' 

இந்த ராத்திரி யில் இது என்ன கேள்வினு அவள் என்னை கேள்விக் குறியோடு பார்க்கிறாள்.

No comments: