Friday, October 6, 2023

Madhyamar-வெள்ளம்

 #வெள்ளம்_ஸ்பெஷல்

மடை திறந்து பாயும் (கங்கை) நதி  நான்..


geometry, geography,geology எல்லாத்துக்கும் மேல் GK ..இந்த எல்லா G யும் நமக்கும் ரொம்ப தூரம்.


 ஆனா..வாழ்க்கைத் துணைவரோ hydro engineering ,dam construction நு வேலை.

டெல்லியில் இருந்தபோது முதல் முதலா பூகம்பம் எப்படி இருக்கும்னு அறிந்தேன். எல்லாரும் கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று விட்டு , ஒண்ணுமே நடக்காதது போல வீட்டுக்குள் போய் விடுவோம்.


தேஹ்ராதூன் வாழ்க்கை ஆரம்பம். ஜூன் மாசம் ஆரம்பித்தால் newspaper முழுதுமே..மழையில் நனைந்தபடி, cloud burst ,landslide நு வந்தபடி இருக்கும். பேய் மழை கொட்டறதுனு என் வீட்டுக்காரர் ukimath லேர்ந்து சொல்லுவார். புரண்டு பெருகி ஓடும் கங்கையின் சத்தம் நிசப்தமான ராத்திரியில் ஃபோன் வழியாக கேட்கும்போது..நித்திரையோடு..நிம்மதியும் தொலையும்.


ஒரு வாரம் லீவ் கிடைச்சாலும்் உடனே மூட்டை கட்டிடுவோம் . சில சமயம் ஜோஷிமத்,பத்ரிநாத் சிலசமயம் ukimath. 

எப்போது மழை கொட்டும் , மலையும் சரியும், பாதை மூடுமென்று சொல்ல முடியாது.


இப்படி ஒரு ஆகஸ்ட் மழையில்..மாட்டிக் கொண்டோம் மலைப் பாதையில்.

சின்னக்கோடாக ஹிமாலயத்திலிருந்து வழிந்த நீர்..சீறிப் பாய ஆரம்பிக்க..

கங்கை..கலங்கி ஓட..கலக்கம் வயிற்றில்..இரண்டு பெண்களுடன் நடு ரோடில்( ரோடு மறைந்து மண் பாதை).


கண்ணெதிரில் பட படவென்று சரியும் மண்ணும் கல்லும்..ஒற்றை வழிப் பாதை தான் அங்கே..

ரெண்டு பக்கமும் வாகனங்கள். 

ஒரு பக்கம் மலை..இன்னொரு பக்கம் கங்கை சீறும் மடு..

நாம் கிளம்பிந வண்டி எப்போது போய்ச் சேரும் என்று யாருக்கும் தெரியாது.


ஆனால் அங்கே பார்த்தேன்..மனித மனம். உதவும் குணம்.crisis management.

ஃபோன் எல்லாம் வேலை செய்யாது. chalo bhai..hum karlenge..இப்படி குரல்களுடன் களத்தில் இறங்கிய எல்லா வயது ஆண்கள். ஆச்சரியம். இவர்கள் செய்யும்போதே ஒரு வழியாக அரசு உதவி வண்டிகள் வர..அவர்கள் தான் வந்தாச்சே என்று கைகட்டி நிற்காமல்..வேலையை சுளுவாக்கிய வேகம்.


ஒரு இடம் இப்படி தாண்ட. கொஞ்ச தூரம் நகரவும் மீண்டும் ரோடே மறைந்து ..கங்கை ஜாலியா ஜாகிங் பண்ணியபடி..

இனிமேல் இங்கேயே தான்..வழி கிடையாது.


hemkund sahib தீர்த்த யாத்திரை போகும் நேரமாதலால் எங்கு பார்த்தாலும் ஒரு டெண்ட் அமைத்து langar எனப்படும் free kitchen. ரொட்டிகளும் பன்னீர் சப்ஜியும் டாலும்..அத்தனை சுறுசுறுப்பாக ரொட்டி செய்து வந்தோர் பசியாற்றிய அத்தனை சீக்கியப் பெண்களும் ஆண்களும் அவர்களுக்கு உதவி புரிந்த வழியில் மாட்டிக்கொண்ட அத்தனை நல்ல் உள்ளங்களும்..


மதமாவது..மொழியாவது..பசியும் தாகமும் வந்தால் பத்தும் பறந்து போகும்.

அவரவர் பைகளிலிருந்து எல்லா ஊர் திண்பண்டமும் distribution. 


ஒரே ஒருத்தர் ரெண்டு பேர் ஃபோன் வேலை செய்ய..தகவல் சொல்ல தன் கைப்பேசி கொடுத்து உதவியவர்கள்.

குழந்தைகள் குழப்பம் புரியாமல் புது நண்பர்கள் கிடைத்த சந்தோஷத்தில் கும்மாளம்.

ஆனாலும்..எல்லார் மனதிலும் நம் வீட்டை திரும்பிப் போய் பார்ப்போமா..என்ற திகில்.

ரோடிலே 20/மணி நேரம். எப்போது மலை சரியும் என்ற திகில். 

பேரிடர் குழுக்கள்..உயிரைப் பணயம் வைத்து ஊருக்கு போக வழி செய்ய..


உள்ளூர் மக்கள் இது எப்பவும் நடக்கிறதுதானே என்பது போல எந்த வண்டிக்கும் காத்திராமல் நடராஜா சர்வீஸில்...தம் வழிக்கு சாப்பிட வைத்திருந்த ரொட்டிகளை குழந்தைகளுக்கு கொடுக்க..


அங்கே ஒரு புது இந்தியா கண்டேன்..காண்பித்தேன் என் குழந்தைகளுக்கு.


வரைபடம் பார்க்கத் தெரியாத எனக்கு..விரிந்த சிந்தனையும் எண்ணமும் தர ஆரம்பித்தது இந்த மாதிரி பல சம்பவங்கள்.


கான்கிரீட் காட்டுக்குள் வந்து ஒடுங்கி..அந்த கங்கையையும் கேதாரனையும் பத்ரிநாதனையும் இன்னொரு முறை போய்ப் பார்ப்பேனா..ஆதங்கத்தில் நான்..


இங்குள்ள படங்கள்..நான் எடுத்ததுதான்

pic1..கொட்டும் கற்கள்

pic 2. ..you can see the difference in the color of water alaknanda and mandakini at karnayaprayag

pic 3..water water everywhere

pic 4..rescue

pic5..ரொம்ப முக்கியம்..langar..லங்கணத்திலிருந்து காத்த லட்சியவாதிகள்

pic 6..கல்லும் பாறையும் கங்கைக்கு மெத்தை

pic 7..men in action.

No comments: