#நற்றமிழ்த்துணுக்குகள்
மத்யமரில் எல்லாரும் தமிழில் புகுந்து விளையாடுறீங்க.
தமிழ் வார்த்தைகள் வெச்சு ஒரு விளையாட்டு.
இங்கிலீஷ் , தங்கிலீஷ் எல்லாம் கூடாது.
இரட்டை அர்த்தம் ஆபாசம் கூடாது.
நற்றமிழ்த் துணுக்குகள் .
ஒரு சொல்..பல வித அர்த்தம் உண்டு தமிழில்.
இதோ சில உங்களுக்காக.
ஓடிப்போய் 'பெருங்காயம் 'வாங்கிண்டு வான்னு சொன்னா..இப்படி பெருங்'காயம் ' பண்ணிண்டு வந்து நிக்கறயே..
மனைவி: ஏங்க லிஸ்ட்டில 'துண்டு' போட்டிருந்தேனே..எங்க காணும்?
கணவன்: பட்ஜெட்டில் 'துண்டு' விழுந்து போச்சு..அதான் வாங்கலை..
'பூவை'த் தொடுத்தாள் 'பூவை'
முதலீடு பற்றி விவாதிக்கும் நண்பர்கள்..
' நான் 'முதல் 'போட்ட..
'முதல் 'நிறுவனம் இதுதான் '
பாட்டியுடன் பலசரக்கு கடைக்குப் போனேன் உதவி செய்ய சிறுவயதில் .
எண்ணெய்த் 'தூக்கு' பார்த்துத் 'தூக்கு' என்றாள்.
'கடை'க்கு போக ரொம்ப பிடிக்கும் எங்க வீட்டு 'கடை'க்குட்டிக்கு.
' வங்கி'யில் அடகு வைத்தாள் அவள் 'வங்கி'யை.
'காட்டு 'வழியில் 'காட்டு' எனக்கு வழி
என்ன நட்பூஸ் ரெடியா?
கலக்குங்க.
நற்றமிழில் விளையாடலாம் வாங்க
No comments:
Post a Comment